(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.

இல்லையே, அவர் எப்போதும் என்னை பேச விட்டு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு தான் இருப்பார்! என் மௌனத்தை புரிந்துக் கொண்டு, அம்மாவே பேசினார்கள்,

   

“நீ நினைத்த மாதிரியே அவரும், அவருக்கும் பிடித்த பாங்க் விஷயம் எல்லாம் உன்னிடம் பேசி நீயும் அதை எல்லாம் தெரிந்து வைத்திருக்கனும்னு எதிர்பார்த்தால் நீ அதை சரின்னு சொல்வாயா?”

   

“ம்ம்...”

   

“அதற்காக அவர் உன்னை குறை சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா? இதெல்லாம் உப்பு சப்பில்லாத விஷயம்.... உன் விருப்பத்திற்கு அவர் மதிப்பு கொடுக்கிறார் பார், அது தான் முக்கியம்... குடும்பம் என்பது எப்போதும் ஒரு வழி பாதையாக இருக்க கூடாது. இரு பக்கமும் போக்குவரத்து இருக்க வேண்டும்... உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்... உன் அப்பாவிற்கு எனக்கு பிடித்த புத்தகங்கள் பிடிக்காவிட்டால் என்ன? என்னை அவருக்கு பிடித்திருந்தது, அவரை எனக்கு பிடித்திருந்தது, அதற்கு மேல் வேறென்ன வேண்டும்?”

   

“ம்ம்ம்...”

   

“அடுத்து அந்த சேலை விஷயம், ஒரு நிமிஷம் இரு வரேன்...” சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்ற அம்மா வரும் போது கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தார்கள். அதை என்னிடம் நீட்டி விட்டு,

   

“இந்தா.... திறந்து பார்...”

   

அவசரமாக வாங்கி திறந்து பார்த்தேன், அது நான் விரும்பிய அதே புடவை.

   

“போனவாரமே விஜய் இதை வாங்கி, ரிசப்ஷனுக்காகன்னு சொல்லி உன்னிடம் கொடுக்க சொன்னார்... நீ கேட்கும் போது கொடுக்க சொன்னார்... “

   

நான் பேசா மடந்தையாக அமர்ந்திருந்தேன்.

3 comments

  • உங்கள் எழுத்துகளில் ஏதோ ஒரு தனித்தும் இருக்கிறது என நினைக்கிறேன். படிப்பவர்கள் மனதை இலகுவாக்குகிறது.வாழ்த்துகள் பிந்து வினோத்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.