உணர்வு.... அதே போன்ற சந்தோஷ அலை தான் அவர்களின் நட்பை பார்க்கும் போது ஏற்படும்...
"அட உன்னுடைய ஏஞ்சல்ஸ் குள்ள சண்டையா???"
எப்போதும் போல் கிண்டலுடன் ஒலித்த விக்ரமின் குரலில், திரும்பி அவரை பார்த்து முறைத்தேன். சரஸ்வதி, சுந்தரி நட்பு பற்றி அவரிடமும் பல முறை சொல்லி இருக்கிறேன்...
"சாரி, திடீர்னு முகம் டல்லடிச்சதே அப்படி என்ன நியூஸ்ன்னு பார்த்தேன்..."
"ம்ம்ம்.... நம்பவே முடியலை விக்ரம்..."
"ரெண்டு பேரும் உன் பிரெண்ட்ஸ் தானே கூப்பிட்டு பேசி பாரு... ஏதாவது சின்ன விஷயமா இருக்கும்... எப்போதுடா இவங்க சண்டை போடுவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தவங்களுக்கு சந்தோஷமா இருந்திருக்கும் அது தான் இந்த ஃப்ளாஷ் நியூஸ் எல்லாம்..."
இருக்கலாம் தான்... மற்ற வேலைகளை முடித்து விட்டு மாலையில் கிடைத்த ஒய்வு நேரத்தில், முதலில் சரஸ்வதியை அழைத்தேன். இரண்டாம் ரிங்கில் ஃபோன் எடுக்கப்பட்டு, சரஸ்வதியின் குரல் கேட்டது,
"ஹலோ அபி... எப்படி இருக்க?"
"ஹாய் சரஸ் நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க..."
"எனக்கு என்ன நல்லா இருக்கேன்... அப்புறம், நீ சண்டை பத்தி கேட்க ஃபோன் செய்யலை தானே???"
சில வினாடி தயக்கத்தின் பின் "நீ என்ன நினைக்குற?" என்றேன் .
"ப்ளீஸ் அபி, உனக்கு தெரியாதது இல்லை..."