(Reading time: 11 - 21 minutes)
சிறுகதை - சண்டை - பிந்து வினோத்
சிறுகதை - சண்டை - பிந்து வினோத்

அவளின் மனநிலை புரிந்ததால், அதற்கு மேல் தோண்டி துருவி விசாரிக்க மனம் வரவில்லை.

   

"தெரியும் சரஸ்... உனக்கு சொல்லனும்னு தோணும் போது சொல்லு..." என்றுவிட்டு, பொதுவான மற்ற விஷயங்களை பேசி விட்டு வைத்தேன்.

   

சில நிமிடங்கள் இடைவெளிவிட்டு, சுந்தரியை அழைத்தேன். அவள் அழைப்பை ஏற்று பேசவே இல்லை. இருவரும் இன்னமும் பேசும் மனநிலையில் இல்லை என்பது புரிந்தது. சரி கொஞ்சம் நாட்கள் போகட்டும். அதற்குள் அவர்களே பேச தொடங்கி விட்டாலும் ஆச்சர்யப் பட எதுவும் இல்லை... இந்த இருபதிற்கும் மேற்பட்ட வருடங்களில், நீ தான் விட்டு கொடுக்க வேண்டும் என்றோ, நானே தான் எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டுமா என்றோ கேள்விகள் அவர்களுள் எழுந்து நான் பார்த்ததில்லை. மூன்றாம் ஆளாய் விலகி இருந்து பார்த்த எனக்கே அவர்களின் பிரிவு வருத்தமாக இருக்கும் போது அவர்களுக்கு இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று புரிந்தது.

   

நான்கு நாட்களுக்கு பின் சுந்தரியே என் கைப்பேசியில் அழைத்தாள். வழக்கமான விசாரிப்புகளுக்கு பின், "ஸாரிப்பா... எல்லோரும் என்னமோ துக்கம் விசாரிக்குற மாதிரி கூப்பிட்டு ஒரே தொல்லை..." என்றாள்

   

"புரியுது..." என்றேன்.

   

"அது தான் அன்னைக்கு எடுத்து பேசலை... உன்னை பத்தி எனக்கு தெரியும்... ரொம்ப கஷ்டமா இருக்கு அபி..."

   

"சரி அப்புறம் சரஸ் கிட்ட பேசிட வேண்டியது தானே?"

   

"உன் நட்பே வேண்டாம்ன்னு சொல்றவ கிட்ட நான் என்ன சொல்ல?"

   

"ப்ச்... நீங்க ரெண்டு பேரும் என்ன சின்ன குழந்தைகளா?"

   

"இல்லை அபி, இன்னைக்கு சண்டை போடுவோம் நாளைக்கு சரி ஆயிடும்னு நான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.