(Reading time: 11 - 21 minutes)
சிறுகதை - சண்டை - பிந்து வினோத்
சிறுகதை - சண்டை - பிந்து வினோத்

செஞ்சுக்குறதுக்கு முன்னாடி கடைசியா காலேஜுக்கு வந்திருந்த அன்னைக்கு காலையிலே எங்க ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை... இப்போ சின்னதா தான் தோணுது. ஆனால், அப்போ அப்படி இல்லையே... அன்னைக்கு அதற்கு மேலே நாங்க பேசவே இல்லை... இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு அன்னைக்கு வெள்ளி கிழமை... கவிதா என்கிட்டே நீயா பேசினா பேசு இனிமேல் நான் பேச மாட்டேன்னு சொல்லிட்டா... அடுத்த நாள் காலையிலே எனக்கு கவிதா கிட்ட இருந்து ஃபோன் வந்தது. எனக்கு அப்போ அவள் மேல இருந்த கோபத்தில நான் எடுத்து பேசலை... அது என்ன சொல்றது எல்லாத்தையும் சொல்லிட்டு அப்புறம் ஃபோன் வேண்டி கிடைக்குதுன்னு நினைச்சேன்... அந்த சண்டே கவிதா சூசைட் செஞ்சுக்கிட்டா..."

   

இந்த இடத்தில் தொடர்ந்து பேச முடியாமல் அமைதியாக இருந்தேன். மற்றவர்கள் இருவரும் வருத்தமும், அதிர்ச்சியும் கலந்த முகபாவத்துடன் என்னை பார்த்தபடி அமைதியாக இருந்தனர்.

   

"இந்த பதினாலு வருஷத்தில எத்தனையோ நாள் நினைச்சிருக்கேன். அன்னைக்கு ஒரு வினாடி என் கோபத்தை மூட்டை கட்டிட்டு அவள் கிட்ட பேசி இருக்க கூடாதான்னு... அவள் சூசைட் செய்ததை என்னால் நிறுத்தி இருக்க முடியுமா தெரியலை... ஆனால் அவள் என்கிட்டே என்ன சொல்ல நினைத்தாள் என்றாவது தெரிஞ்சிருந்திருக்கலாம்... ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இந்த நினைவு வரும். மனசில் சங்கடம் வரும்... இன்னைக்குன்னு இல்லை.. இன்னும் எத்தனை வருஷம் போனாலும் அப்படி தான்... உங்களை பயமுறுத்தவோ, கஷ்ட படுத்தவோ நான் இதை சொல்லலை... உங்க ரெண்டு பேருக்கும் இப்போ எதுக்காக சண்டை வந்திருந்தாலும்... அடுத்தவரை பத்தி நினைக்கும் போது மனசில அந்த வருத்தம் வரலைன்னு சொல்லுங்க??? இதே போல இந்த வருத்தத்தோடவே வாழ போறீங்களா?

   

எத்தனை நாள் வாழ போறோம்? ஏன் இப்படி இந்த கோபம், சண்டை, வருத்தம் எல்லாத்தையும் நம்மோட சுமக்கணும்... மனசை பிரீயாக்கிகலாமே? எதையும் பேசி தீர்த்துக்கலாமே... தெரிஞ்சோ தெரியாமலோ உங்க இரண்டு பேர்ல ஒருத்தர் இன்னொருத்தரை ஹர்ட் செஞ்சுட்டீங்க... ஓகே... எனக்கு இது பிடிக்கலை கஷ்டமா இருந்ததுன்னு வெளிபடையா சொல்லலாமே... சண்டை போடுங்க, தப்பு இல்லை... ஆனால், பேசுங்க.. பேசி எதனால இந்த மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் ஏற்பட்டதுன்னு புரிஞ்சுக்கோங்க... இருபது வருஷ நட்பு எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க கூடிய விஷயமா... கவிதாவுக்கு பிறகு என்னால யார் கூடவும் ரொம்ப நெருக்கமா எல்லாம் நட்புடன் இருக்க முடிந்ததே இல்லை... யாருமே கெட்டவங்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.