(Reading time: 11 - 21 minutes)
சிறுகதை - சண்டை - பிந்து வினோத்
சிறுகதை - சண்டை - பிந்து வினோத்

இல்லை... எல்லாமே நாம் பார்க்கும் விதத்தில் தான் இருக்கு... பாண்டவர்களுக்கு தவறானவனாக தோன்றிய துரியோதனன், தன் பிறப்பு பற்றி மற்றவர்கள் கிண்டல் செய்த போது, தன் பக்கம் நின்று தன் கவுரவத்தை காப்பாற்றினான்னு கர்ணனுக்கு நல்லவனா தெரியலையா? அது போல் தான்...

   

தப்பு சரி என்பது எல்லாம் நம் கண்ணோட்டம் தான்... நமக்கு பிடித்தது அடுத்தவருக்கு பிடிக்கணும்... நமக்கு சரின்னு தோன்றுவது தான் அடுத்தவருக்கு சரின்னு தோணனும் என்றெல்லாம் இல்லை தானே??? வாழ்க்கையில எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு அதை எல்லாம் நினைச்சு சந்தோஷப்படுறதை விட்டுட்டு, இனி வாழும் காலம் முழுசும் இழந்த நட்பை பற்றி நினைச்சுட்டே வருத்ததோடு வாழ போறீங்களா? "

   

இருவரும் அமைதியாக இருந்தனர்.

   

"டிசம்பர் 21 உலகம் அழிய போகுதாம்**... ஆனால் டிசம்பர் பத்து வரைக்கும் நம்ம எல்லோரும் இருக்க போறோம்னு ஏதாவது கேரன்டீ இருக்கா என்ன? யோசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்... பேசினால் தான் நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் அப்படின்னு எமோஷனல் ப்ளாக் மெயில் எல்லாம் செய்து உங்க ரெண்டு பேரையும் பேச வைக்க எனக்கு விருப்பம் இல்லை... அது சரியும் இல்லை... இதுக்கு மேல நான் சொல்லவும் எதுவும் இல்லை...நான் கிளம்புறேன்... அப்புறம் நேரம் கிடைக்கும் போது பேசுறேன்..."

   

சொல்லி விட்டு நிற்காமல் நேராக நடக்க தொடங்கினேன். வந்த போது போல் ஆட்டோவில் செல்லாமல் நடந்தே வீடு நோக்கி சென்றேன். ஒரு மணி நேரம் நடந்து வீட்டை அடைந்த போது கால்கள் வலித்தது... ஆனால், மனம் லேசாக இருந்தது....

   

இரண்டு நாட்களுக்கு பின் ஃபேஸ்புக்கில் சரஸ்வதியும், சுந்தரியும் அவர்கள் சமீபத்தில் ஒன்றாக எடுத்த புகைப்படம் போட்டிருந்தார்கள், சந்தோஷமாக இருந்தது. என்னையும் 

   


** 2012’ல் எழுதிய கதை! மாயா காலண்டர் படி டிசம்பர் 21, 2012 அன்று உலகம் அழியும் என்று சிலர் நம்பினார்கள். அதனால் டிசம்பர் 21, 2012 அன்று உலகம் அழியும் என்று அப்போது பல ஊகங்கள் பரவலாக இருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.