இருவருமே உடனே பதில் சொல்லவில்லை. பின் முதலில் பேசியது சுந்தரி.
"அபி உனக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது..."
"ஆமாம் அபி நாம பேசி பழகுறவங்க எல்லாம் நாம நினைப்பது போல இல்லை அப்படின்னு புரியும் போது கஷ்டமா இருக்கு...." என்றாள் சரஸ்வதி.
இருவரையும் ஒரு வினாடி பார்த்து விட்டு, நான் பேசினேன்.
"உங்க ரெண்டு பேருக்கும் எதனால சண்டை, எனக்கு தெரியாது... தெரியவும் வேண்டாம்... ஆனால் நீங்க ரெண்டு பேரும் இப்படியே தான் இனி இருக்க போறோம்ன்னு சொல்றீங்க பாருங்க அது தான் கொஞ்சம் ஷாக்கா இருக்கு..."
"பிடிக்காதவங்க கிட்ட பேசுறதை விட தள்ளி இருப்பது தான் நல்லது..." என்றாள் சரஸ்வதி கடுப்புடன்.
"ம்ம்ம்... பிடிக்காதவங்க?? யார் அந்த பிடிக்காதவங்க... இருபது வருஷத்துக்கு மேலே ஃப்ரெண்டா இருந்தவங்களா???? சரி இதை விடுவோம், நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன்... உங்க ரெண்டு பேருக்கும் கவிதா ஞாபகம் இருக்கா?"
இருவரும் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு ஆம் என்பது போல் தலை அசைத்தார்கள். கவிதா என் கல்லூரி தோழி. கல்லூரி படிக்கும் போதே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாள். அவள் காதல் விஷயம் அவளின் வீட்டை அடைந்திருந்ததால் அந்நேரத்தில் எதிர்ப்புகள் தோன்றி இருந்தன. ஆனாலும் அவள் தற்கொலை செய்துக் கொண்டது நாங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம். மனத்தில் எழுந்த அந்த துக்கத்தை சமாளித்து கொண்டு இருவரையும் பார்த்து பேசினேன்.
"இன்னைக்கு வரைக்கும் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டுன்னா அது கவிதா தான்... மற்றவர்கள் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் தான்... ஆனால் உங்களுக்கு தெரியுமா? கவிதா தற்கொலை