நினைச்சாலும் அவ அப்படி நினைக்கலையே... ஃபேஸ்புக்ல அவ ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து கூட என்னை எடுத்துட்டா..... அவ ஃப்ரெண்ட் லிஸ்டிலேயே நான் இல்லை போல...."
இப்படியே சில நிமிடங்கள் பேசிய பின்பு, இது எங்கேயும் போக போவதில்லை என்று புரிந்தது. அவர்களின் நட்பு பிரிவதை என்னால் ஏற்றுக் கொள்ளவோ, தாங்கி கொள்ளவோ முடியவில்லை. அந்த வினாடியில் தான் இந்த யோசனை தோன்றியது.
"ஏன் சுந்தரி, நீ இந்த சனி ஃப்ரீயா? இங்கே பக்கத்தில இருக்கிற பார்க் ரொம்ப நல்லா இருக்கும்... பேச ரொம்ப வசதியா இருக்கும்..."
அந்த பக்கம் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்தது. பின், "வேற யாராவது வர போறாங்களா?" என்று கேட்டாள் சுந்தரி.
"சரஸ்வதியும் கூப்பிடலாம்..."
"உன் டைமை வேஸ்ட் செய்ற அபி..."
"இருக்கட்டும்... சனி ஈவ்னிங் நாலு மணிக்கு சரியா??"
"சரி, நான் ஒரு அரை மணி நேரம் தான் இருக்க முடியும் அபி... நிறைய வேலை இருக்கு... இதுவும் கூட உனக்காக தான்..."
அடுத்து சரஸ்வதியை அழைத்து பார்க்கில் சந்திக்க வர சொன்னேன். கிட்டத்தட்ட அதே பாணியில் தான் பேச்சு சென்றது. ஆனாலும் அவளும் வருவதாக ஏற்றுக் கொண்டாள்.
சனிக்கிழமை மாலை மூவரும் சொல்லி வைத்ததுப் போல் சந்தித்தோம். சில நிமிடங்கள் பேச்சு பொதுவாக சென்றது. இருவரும் என்னிடம் பேசினார்கள். ஆனால், அவர்களுக்குள் பேசவில்லை.
"ஸோ, நீங்க ரெண்டு பேரும் இப்படியே தான் இருக்க போறீங்க???"