(Reading time: 18 - 36 minutes)
சிறுகதை - ஒட்டுப்புல் - ரெ.கார்த்திகேசு
சிறுகதை - ஒட்டுப்புல் - ரெ.கார்த்திகேசு

மனதிலிருந்தும் அதைப் பிய்த்து எரிய வேண்டும். மென்மையாக அதைச் செய்ய முடியாவிட்டால் முரட்டுத் தனமாகவாவது செய்யத்தான் வேண்டும்.

   

குரலைக் கடுமையாக்கிக் கொண்டு பேசினான். "இதப்பாரு காயத்ரி! நான் கண்டிப்பா சொல்றேன். இதெல்லாம் விட்ரு! இந்த நெனப்பு ஒன் மனசில தொடர்ந்து இருந்து, நீ இப்படியே நடந்துக்கிட்டிருந்தா, என்னப் பாத்து அடிக்கடி சிரிக்கிறது, கிட்ட வந்து உரசிறது இப்படி வேலயெல்லாம் வச்சிக்கிட்டினா, நானே உங்கப்பாகிட்ட நேரா வந்து நீ செய்றத சொல்லிடுவேன். டுயூஷன விட்டு நிப்பாட்டிடுங்கன்னு நானே சொல்லிடுவேன்"

   

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். தலைகுனிந்தாள். "மன்னிச்சிடுங்க சார்! இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன். தயவு செய்து எங்க அப்பாகிட்ட இதச் சொல்லிடாதிங்க! அவரு... அவரு, ரொம்பக் கோவக்காரரு. போட்டு அடிஅடின்னு அடிச்சிடுவாரு!" அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.

   

அன்பரசனுக்குப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. "இவள் கதுப்பான கன்னங்களைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் என்று முதலில் மனதுக்குள் காமுகித்தேன். இப்போது அவளை வருத்தி அழவைக்கும் கொடுமைக்காரனாகிவிட்டேன்" என்று மனதுக்குள் உருகினான்.

   

ஆதரவாக அவள் இரண்டு கைகளையும் தன் கைகளில் பற்றினான். "அழுவாத காயத்ரி! உன் நன்மைக்குத்தான் சொல்றேன். உன் படிப்பு முடிஞ்சி உனக்கு உரிய பருவம் வரும்போது உன் அழகுக்கு யாராவது ஒரு அழகான அறிவான இந்தத் தமிழ்ப்பள்ளிக்கூட ஆசிரியர் வேலயவிட உயர்வான வேல செய்யக்கூடிய உன் வயசுக்கொத்த ஒரு காதலன் உனக்கு வாய்ப்பான். வாத்தியார, வாத்தியாரா நினை. காதலனா நினச்சினா அவனும் கெட்டுப் போவான். நீயும் கெட்டுப் போவ!"

   

அவள் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்தான். அவள் தோள்களை ஆதரவாகப் பிடித்துவிட்டான்.

   

அவள் புத்ததகங்களை அள்ளிக்கொண்டு வகுப்பறை வாசலுக்குப் போய் ஒரு முறை அவனைத் திரும்பப் பார்த்துவிட்டு ஓடினாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.