"கேசவனப் பாக்கணும் அண்டி" என்றான்.
"நீ யாரு?"
"நான் அவனோட ஸ்கூல் ·பிரண்ட். அவன அவசரமாப் பாக்கணும்!"
"அது ஊட்டில எங்க இருக்கு?"
"எங்க போயிருக்கான்? எப்ப வருவான்?"
"ஆமா, எங்கிட்ட சொல்லிக்கிட்டுத்தான் போவுது. யாருக்குத் தெரியும்? நாய் மாதிரி ஊரெல்லாம் சுத்தும். ஆமா நீ ஏன் இந்த ராத்திரி நேரத்தில அதத் தேட்ற?"
"பேச வேண்டியிருக்கு அண்டி"
"ஆமா, நீங்க ராத்திரி ராத்திரியாதான் கூடிப் பேசிறதா? ஒன்னப்போல ·பிரன்ட்ஸ் சேந்துதான் அதையும் இப்படித் தறுதலையா ஆக்கிட்டிங்க!" கோபத்தோடு பேசினாள்.
"அண்டி! வந்தா என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க அண்டி. அவசரம். என் பேரு முத்தையா. அவனுக்கு வீடு தெரியும்!"
ஒன்றும் சொல்லாமல் கதவை பட்டென்று சாத்தினாள்.
என்ன செய்வது என முத்தையா யோசித்தான். வீட்டுக்குப் போய் அம்மாவின் கையைப் பிடித்து அழலாம் என்று தோன்றினாலும் கேசவன் இல்லாமல் அம்மாவைப் பார்த்துப் பயனில்லை எனத் தோன்றியது. அம்மா அவனை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள். முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டு சொன்னது போலவே செத்துப் போய்விடுவாள்.
கீழே போய் ஏறிவரும் படியில் உட்கார்ந்தான். முத்தையா வர என்னேரமானாலும் உட்கார்ந்து