கேசவன் அவனை மேலும் கீழும் பார்த்தான். "போடா --ரு! இதுதாண்டா ஒன்ன சேத்துக்கிறதில உள்ள தொல்லை. ஏன் உங்கம்மாவுக்கு சொல்லித் தொலைச்ச?"
"நான் சொல்லலடா!" அம்மாவுக்கு எப்படித் தெரிந்திருக்கலாம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னான்.
"நீயும் உங்கம்மாவும் எப்படியாவது போங்க! என்ன எதுக்கு இதில இழுக்கிற?" என்றான் கேசவன் எரிச்சலோடு.
"இல்லடா! நான் இனிமே இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்னு சொன்னாலும் எங்கம்மா ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. நீ வந்து சொல்லணுமாம். வாடா. ஒன்னக் கெஞ்சிக் கேட்டிக்கிறண்டா!"
கேசவன் மருண்டிருந்தான். கண்களில் கோபமும் பயமும் இருந்தன. "போடா போடா!" என்று மிகக் கொச்சை வார்த்தைகளில் முத்தையாவைத் திட்டினான்.
"என்ன என்ன வேணுன்னாலும் சொல்லு. நான் கேட்டுக்கிறேன். ஆனா என்னோட வந்து எங்கம்மாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போடா!"
"போடா! எதுக்கு நான் வரணும்? அங்க வந்து நாந்தான் புளூ ·பிலிம் காமிச்சேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் உங்கம்மா போலிசைக் கூப்பிட்டு பிடிச்சிக் குடுக்கவா? முடியாது. நீ போய் என்ன வேணுன்னாலும் பண்ணிக்க. நான் வரமுடியாது."
"கேசவா! நீ வரலின்னா எங்கம்மா செத்துப் போயிடுவாங்கடா!" முத்தையா அழுதான்.
"செத்துத் தொலைக்கிட்டுமே! சாவமாட்டாளான்னுதான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்!" அலட்சியமாகச் சொன்னான் கேசவன்.
"என்னடா சொன்ன?" முத்தையா பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான். "எங்கம்மாவையா செத்துத் தொலையச் சொன்ன? எங்கம்மாதாண்டா எனக்கும் உசிரு! அவங்க உயிர்