(Reading time: 14 - 28 minutes)

 

 

மௌன யுத்ததுடன் நடக்கும் சண்டைக்கு முடிவு போல் ஒரு நாள் “நான் செய்யும் ப்ரொஜக்ட் வேலையால் வெளிநாடு செல்ல வேண்டும். ம்ம்ம் ஒரு வருடத்தில் வந்து விடுவேன் அது வரைக்கும் இங்கே யாருடனும் சண்டை போடாமல் இருக்க பாரு நான் உன்னை என்னுடன் அழைத்து செல்லவில்லை” என்று சொல்லி விட்டான்.

ஏனோ அவளுக்கு மனம் கனத்தது. அண்ணனும் இப்படிதான் சொல்லி சென்றான். ஆனால் அவன் அங்கே ஒரு குடும்பத்தை அமைத்து அதில் மகிழ்ச்சியாக இருக்கிறான். அன்று சென்றவனை இன்றுவரை பார்க்கவில்லை.

கதிர் புறப்பட வேண்டிய நாளும் வந்த்து, அவளிடம் விடை பெறும் வரையில் அவனிடம் தன் அண்ணனை பற்றி சொல்லாமல் விட்டு விட்டு விட்டாள். அன்று தான் அவள் கதிரை கடைசியாக பார்த்தது. அதன் பின் இன்று தான் பார்க்கிறாள்.

கார் ஓர் குலுக்குடன் நின்றது, கண்களை திறந்து பார்த்தாள். கதிர் காரை விட்டு இறங்கி நிற்க, இவளும் இறங்கி அவனை பார்த்தாள்.

“இது ஜெயிலில் இருந்து வெளியே வருபவர்களுக்குக் கைத்தொழில் கற்றுக் கொடுக்கும் இடம். இங்கேயே தங்கும் வசதி, அவர்கள் செய்யும் கைவினை பொருட்களை விற்க உதவி செய்யப் படுகிறது...”

“என்ன சொல்கிறான் இவன், இது தனக்கு ஒரு தகவல இல்லை என்னை இங்கேயே விட்டு செல்ல போகிறானா?” என யோசித்தாள். ஒரு நிமிடம் அவன் முகத்தை உற்று நோக்கினாள். அவனது முகத்தில் என்ன உள்ளது என்று புரியவில்லை. ஆனால், யாரோ அவளில் இதயத்தை கசக்கி பிளிந்த்து போல் வலித்தது. கண்கள் மீண்டும் கலங்கின அதை மறைக்க தலை குனிந்து கொண்டாள்.

அவன் உள்ளே நடப்பது தெரிந்தது. இந்த தடவை அவன் அவளை அழைக்கவில்லை இருந்தாலும் அவன் பின்னால் நடந்தாள்.

வலது புறத்தில் கைத்தொழில் கற்றுக் கொடுக்கும் இடம் இருக்க அதை விடுத்து, கதிர இடத்து புறத்திற்கு சென்றான். “ஒ இது தான் அலுவலகமா ஆனால் பார்தால் அப்படி தெரியவில்லையே, பார்க்க வீடு போல தெரிகிறதே”... அவள் யோசிக்கையிலே

“அம்மா” ஓடி வந்து காலை கட்டிக் கொண்ட பையன்களைப் பார்த்தாள். “யார் இவர்கள்? ஏன் என்னை அம்மா என அழைக்க வேண்டும்?” கலங்கிய கண்கள் அவளின் பார்வையை மறைக்க, கண்களை மூடி திறந்து பார்த்தாள்.

இரண்டு சிறுவர்கள் கதிரின் சாயலில் இருந்தனர். அவனைப் போலவே கண்கள், எடுப்பான மூக்கு அழுத்தமான உதடுகள். இருவரும் அச்சு அசல் கதிரின் சாயல். வேறு ஒரு திருமணம் செய்து கொண்டானா? மனம் வலித்தது. மண்டியிட்டு அமர்ந்து அந்து இருபாலரகளின் முகத்தைப் பார்த்தாள்

இருவரும் இரட்டைக் குழந்தைகள். மனதில் சுருக்கென்று தைத்தது போல் வலித்தது. அச்சிறுவனின் நெற்றியில் உள்ள முடியை விலக்கிப் பார்த்தாள். அங்கு இருந்த தளும்பு இது அவர்கள் தான் என சொல்லாமல் சொல்லியது. அவளின் உதடுகள் “அரவிந்த், அஷ்வத்” என சொல்ல

“ஆமா அம்மா... எப்படி எங்க பெயரை சரியாய் கண்டு பிடிச்சிங்க... அப்பா கூட தடுமாறுவர்.. ” என இருவரும் அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டனர்.

நம்ப முடியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். அவர்களின் மழலை மொழி அவளுக்கு சந்தோஷத்தை தந்தது.

உணர்ச்சி மிகுதியில் அவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் மாட்டிக் கொள்ள இருவரையும் கட்டிக் கொண்டு அழுதுதாள். இவ்வளவு நேரம் மனதை அழுத்திய பாரம் சூரியன் கண்ட பனிப் போல விலக, இருவருக்கும் மாறி மாறி முத்தம் கொடுத்தவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.

சௌமியா கைது செய்யப்பட்டதை கேள்வி பட்ட கதிரின் குடும்பத்தினர் அவள் யார் என்று தெரியாது என சொல்லி விட்டனர். நீதிமன்டத்தில் வழக்கு நடைப்பெற்ற போது அவளை தேடி யாரும் அங்கு வரவில்லை. குற்றம் நிருபிக்கப் பட்டு தீர்ப்பு வழங்கப் பட்ட பின்னர் அவள் சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் அவளுக்கு தெரிந்தது அவள் கர்ப்பமாக இருப்பது.

அரசு மருத்துவமனையில் கையில் ஒரு குழந்தையை ஏந்தினாள், இன்னொரு குழந்தை அழகான துணியில் சுற்றப் பட்டு அமைதியாய் உறங்கியது. கண்களில் ஜீவனே இல்லாமல் குழந்தகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.

கையில் உள்ள குழந்தையை பார்த்தாள், அது அழகாய் அவளை பார்த்து சிரித்தது. அவள் மெல்ல குழந்தைகளிடம் பேசினால் “உங்க நெற்றியில் மட்டும் சின்னதாய் வடு இருக்கு, ஆனா அண்ணாவிற்கு இல்ல.. உங்களுக்கு நான் பெயர் வைக்கவா.... ம்ம்ம் என்ன வைக்கலாம்....”

கையில் உள்ள குழந்தையை பார்த்து உங்க பெயர் அஷ்வத், தொட்டில் இருந்த குழந்தையை பார்த்து உங்க பெயர் அரவிந்த் எனறாள். யாரும் இல்லாமல் அவள் மட்டும் தனியே குழந்தைகளுக்கு பெயர் சூட்டினாள். தினம் அவர்களுடன் பேசுவதில் அவளுக்கு தனி இன்பம்.

குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகின்றது. இதுவரை கதிரின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. குழந்தைகளை சிறைச்சாலைக்கு கொண்டு வர கூடாது என சொல்லி விட்டார் காவல் துறை அதிகாரி.

“யாரும் வரவில்லை என்றால் சமுக நல இலக்காவிடம் குழந்தைகளை கொடுத்துவிடுவோம்” என சொல்லி சென்றதிலிருந்து அவளின் மனம் அதையே சுற்றி வந்தது.

கடைசி நிமிடம் வரை காத்திருந்தாள் ஆனால் யாருக்கும் அவள் மேல் இரக்கம் வரவில்லை. மருத்துவரிடம் குழந்தையை மனம் இல்லாமல் கொடுத்து நடந்தவளுக்கு இனி இவர்களை அவள் பார்க்க போவது இல்லை என புரிய, நடை பிணமாய் மருத்துவமனையில் இருந்து வெளியேறினாள்.

ண் விழித்துப் பார்க்கையில் அரவிந்த் அஷ்வத் இருவரும் அவளின் அருகே அமர்ந்து இருக்க, கதிர் அறை வாசலில் கை கட்டியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மெல்ல எழுந்து அவர்களைப் பார்த்தவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை. இவர்கள் எப்படி கதிருடன் இருக்கிறார்கள்? கேள்வியை அவனிடம் கேட்க முடியவில்லை. கேட்டால் மட்டும் பதில் வந்து விடுமா என்ன? ம்ம்ம்... இவர்களுடன் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் யோசித்து வீணாக்காமல் அவர்களின் பேச்சில் அவளை மறந்தாள்.

“அரவிந்த், அஷ்வத் அம்மாவை சாப்பிட கூட்டி வாங்க” என்றான் கதிர்

“சரிப்பா”

தனக்கு கிடைக்கவே கிடைக்காது என நினைத்த நிமிடம் இன்று அவள் கையால் அவளின் பிள்ளைகளுக்கு உணவு ஊட்ட கிடைத்தது.

ரவு அவர்கள் உறங்கிய பின்னர் தயக்கமாக கதிரைப் பார்க்க, அவனோ “அந்த மிடல் ரூம்மில் போய் தூங்கு, காலையில் பேசி கொல்லலாம்” என கூறினான்

“அரவிந்த், அஷ்வத் எப்படி இங்க?, உங்க வீட்டில் உள்ளவங்க... இது யார் வீடு?” மனதில் அரித்த கேள்விகளைக கேட்டாள்.

“ம்ம்ம் இது நம்ப வீடு” என்றான்.

அவனின் இந்த பதிலில் நிமர்ந்து அவனின் முகத்தை பார்த்தாள். தான் கேட்டது சரி தானா என யோசிக்க, அவளின் முக மாற்றத்தை பார்த்தவன் “நீ கேட்தது சரி தான் சௌமியா” எனறான்.

“பசங்க யார் கூட இருக்கனும்னு நான் தான் முடிவு பண்ணனும், அம்மா, பிள்ளைகளைப் பார்த்துக்க முடியாதுன்னு சொன்னாங்க, சில காரணத்தால் நான் தனியாக வந்துடேன்”

“என்ன நடத்துச்சின்னு கேடக மாட்டிங்களா”?

“என் சௌமியாவைப் பற்றி எனக்கு தெரியும், ஒரு போதும் அவ தப்பான பாதையில் போக மாட்டாள்” என்று உறுதியான குரலில் அவன் சொல்ல

“நா.... நா... அவள் எதையோ சொல்ல முடியாமல் தடுமாறுவதை உணர்ந்து அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான்.

மீண்டும் கண்களில் கண்ணீர் ஊற்று எடுக்க, “அழத சௌமி” சொல்லி அருகே இருந்த சோபாவில் அவளை அமர வைத்து, அவனும் அவள் அருகே அமர்ந்துக் கொண்டான்.

“நான் வேளை முடிந்து வரும் போது என் கல்லூரி தோழி எனக்கு போன் பண்ணினா....” என சொல்ல

“வேண்டாம் சௌமி... நடந்ததை எதும் நீ சொல்ல வேண்டாம்” சொல்லி அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.