(Reading time: 20 - 39 minutes)

இன்று

"ர்ஷு...சீனு மாமா ஆன்லைன்.. வா வா" எனக் கூறிய நந்தினி ஸ்கைப்பில் தன் பிரிய நண்பன் சீனுவை கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னுடன்  விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது ஹாரியிடம்," சீனு மாமா  இஸ் காலிங். வெயித்" என கூறிவிட்டு  கணினி நோக்கி ஓடினாள்.

"சீனு மாமா" என்று திரையில் தெரிந்த சீனுவிற்கு முத்தம் கொடுத்த நான்கு வயது குட்டி வர்ஷினி ஒரு ஒரு விரலாய் விரித்து எண்ணிக் கொண்டே," வர்ச்சு இன்னும் பிப்தீன் தேஸ் அப்புறம் மாமா கித்த வந்தாச்சு" என்றாள்.

"ஹாஹஹஹா...சமத்துக் குட்டி" என்றவன் நந்தினியிடம்," அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி... சின்ன வயசில வராத டா வை எல்லாம் பின்னாடி சேர்த்து வச்சு டா போடற நீ... உன் பொண்ணு எப்படின்னு பாப்போம்" என்றான்.

"போடா சீனி டப்பா" எனக் கூறியவள் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கவே," நீ வர்ஷு கிட்ட பேசிட்டு இரு.. வாசல்ல யார்னு பார்க்கிறேன்" என நகர்ந்தாள்

"மாமா.. நான் தான்ஸ் ஆதறேன் " என வர்ஷினி சீனுவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இதை எல்லாம் ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஹாரி அங்கு வந்த அவன் தாயைக் கண்டதும்," மாம்" என ஓடிப் போய் கட்டிக் கொண்டு வர்ஷினியை நோக்கி கை நீட்டினான்.

புரியாமல் விழித்த ரோஸி," எஸ் பேபி.. வாட்ஸ் தேர்" என வினவ "சீனு" என்றான் ஹாரி.

"சீனு இஸ் ஆன்லைன் ரோஸி. வர்ஷு இஸ் டாகிங் டு ஹிம்" எனக் கூறி விட்டு

"ஹாரி ..சீ !! வர்ஷு இஸ் டான்சிங். ஜாயின் ஹர்" எனவும் ஓடிச் சென்று அந்த நர்சரி பாடலுக்கு ஹாரியும் வர்ஷுவோடு சேர்ந்து ஆடினான் சீனுவின் முன்.

" மாமா..ஹாரி மை பிரந்த்" என வர்ஷினி அறிமுகம் செய்து வைக்க," ஹலோ ஹாரி" என கை ஆட்டினான் சீனு. பதிலுக்கு முகம் எல்லாம் மலர," ஹல்லோ சீனு" என்றான் ஹாரி.

ஹாரியையே பார்த்துக் கொண்டிருந்த நந்தினிக்கு ஏனோ அவன் சிறு வயது சீனுவாகத் தோன்றினான். நான்கு வயதில் நடந்தவை நேரடியாக நினைவில் இல்லை எனும் போதும் பின்னாளில் சாரதா சொல்லக் கேட்டிருக்கிறாள்.

அதே சமயம் அங்கு வந்த அவள் கணவன் சந்தோஷ்," ஹாய் ரோஸி" என்று விட்டு ," என்ன செல்லம்  யோசனை " என தன் மனைவியிடம் விசாரித்தான்.

"நாம் இந்தியா போகும் போது ரோஸியையும் ஹாரியையும் கூட்டிட்டுப் போலாமா" எனக் கேட்க," எப்படி நண்டு  அப்பப்போ கொஞ்சம் தெளிவாவும் யோசிக்கிற" என சந்தோஷ் சீண்ட," இருடா உன்னை " என அடிக்கத் துரத்தினாள்.

அதற்குள் சந்தோஷ் கணினி முன் வந்துவிட," சீனு..எப்படி இருக்க" என உரையாடினான். அப்படியே சைகையில்," ரோஸியிடம் சொல்" என்று விட்டு," சீனு.. உனக்கு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ரோஸி பற்றித் தெரியும் தானே.. அவளையும் அவள் மகனையும் எங்களோடு இந்தியா அழைத்து வரலாம்னு உன் நண்பி சொல்றா. அவளுக்கு ஒரு மாற்றமா இருக்கும். பாவம் " என்றான்.

"ஹே!!! நம்ம நந்துவுக்கும் அப்பபோ பல்ப் எரியுதே. அம்மாகிட்ட சொல்றேன். ரொம்ப சந்தோஷப் படுவாங்க.. எங்க  எல்லோர் சார்பிலும் அவங்களை இன்வைட் பண்ணோம்னு சொல்லிடு சந்தோஷ்" என்று மகிழ்ச்சியோடு கூறினான்.

இதற்கிடையில் நந்தினி ரோஸியிடம்," ரோஸி, மை பேரன்ட்ஸ், சீனு அண்ட் ஹிஸ் பேரெண்ட்ஸ் ஹவ் இன்வைடட் யு டு அவர் ஹோம். ஒய் டோன்ட் யு ஜாயின் அஸ் இன் அவர் டிரிப்" என்றாள்.

ரோஸலின் பெற்றோர் அவளின் சிறு வயதிலேயே பிரிந்து வெவ்வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ள அவள் ஹாஸ்டலில் தங்கியே தன் படிப்பை முடித்தாள். வெளிநாடுகளில் இது சகஜம் எனும் போதும் அன்னை தந்தை பாசத்தை நாடாத குழந்தை ஏது.

அன்பிற்காக ஏங்கி இருந்த அவள் தன் பதினேழாம் வயதில் ஒருவனைக் காதலிக்க அவன் இவளைத் தாயாக்கி விட்டு கை விட்டு சென்று விட்டான். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஹோமில் சேர்ந்து விரக்தியில் உழன்றவள் ஹாரி பிறந்தவுடன் தான் வாழ்க்கை மீது பிடிப்புக் கொண்டாள். அதுவும் கடந்த ஆறு மாதமாக நந்தினி குடும்பம் இவள் வீட்டின் அருகில் குடி வந்த பிறகு உறவுகள் பற்றிய நம்பிக்கை கொண்டாள்.

நந்தினியின் மூலம் அவள் குடும்பம் பற்றி அறிந்த ரோஸிக்குமே அவர்களைப் பார்க்க வேண்டும் என ஆவல் இருந்தது. இருப்பினும் அவ்வளவு தூரம் வேற்று மனிதர்கள் என தயங்கியவள் தன் மகனை நோக்க அவன் வர்ஷினியை தொடர்ந்து சீனுவிற்கு முத்தம் கொடுத்தக் கொண்டிருந்தான்.

"ஓகே..பட் விசா அன் ஆல்" என கேட்க," ஓ! டோன்ட் வொரி அபவுட் தட். சந்து வில் டேக் கேர்" என்றாள் நந்தினி.

(ரோஸியுடனான உரையாடல்கள் ஆங்கிலத்தில் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் . இங்கு தமிழில் கொடுக்கிறேன் )

"ரோஸி ...வாம்மா..ஹரி வாப்பா" என அன்போடு அழைத்த பத்மினியை பார்த்ததும்," நான் உங்களை அம்மா ( தமிழில் உச்சரித்து ) எனக் கூப்பிடலாமா" என ரோஸி கேட்க," நந்துவைப் போல் நீயும் எங்க பொண்ணு தான்" என அரவணைத்துக் கொண்டார்.

"பாத்தி அவன் ஹாரி..ஹரி இல்ல" என பெரிய மனுஷியாய் பத்மினியைத் திருத்தியவளை," வாண்டு.. பாட்டின்னு சொல்ல வரல.. அதுக்குள்ளே வக்கணையா பேசறதை பாரு" என அங்கு  வந்த சாரதா வர்ஷினியை உச்சி முகர்ந்தார்.

அருகில் நின்ற ஹாரியையும் அணைத்து முத்தமிட, நந்தினி "அத்தே" என்று அவரைக் கட்டிக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து ரோஸியும் அத்தை என தமிழில் அழைக்க சாரதா அவளுக்குத் திருஷ்டி கழித்தார்.

"சீனி டப்பா எங்க காணோம்" எனக் கேட்க," அவன் சர்ஜரியில் இருக்கான்" எனக் கூறினார் சாரதா. இப்படியே ராஜேந்திரன் சேகர் இருவரின்  நல விசாரிப்புகள் முடிந்து சாப்பிட அனைவரும் அமர," சீனு இன்னும் வரல" எனக் கேட்டான் சந்தோஷ்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஹாரி," சீனு" எனக் கூவியபடியே வாசலை நோக்கி ஓட அவனைத் தொடர்ந்து வர்ஷினியும் ஓடினாள். சீனுவும் ஹாரியும் இடைப்பட்ட நாட்களில் பிரண்ட்ஸ் ஆகி இருந்தனர்.

குழந்தைகள் இருவரும் நெருங்க," நான் ஹாஸ்பிடல்ல இருந்து வரேன். குளிச்சிட்டு வந்திர்றேன். இவங்களை பிடி நந்து" என நந்துவிடம் சொல்ல நிமிர்ந்த சீனு அழகாகப்  புடவை அணிந்து தலை பின்னி பூ வைத்து ஆச்சரியமாய் விழி விரித்து அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஸியைப் பார்த்து ஒரு கணம் பிரமித்துப் போனான்.

அவனை அறியாமலே அவன் உதடுகள்," பியூட்டிபுல்" என முணுமுணுக்க அருகில் வந்து விட்டிருந்த நந்தினியின் செவிகளுக்கு எட்டாமல் இல்லை.

குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு ,"சரி நீ போய் சீக்கிரம் குளித்து விட்டு வா" என்றாள் ஒரு கள்ளச் சிரிப்போடு.

" ரோஸி..அம்மாக்கு  கொஞ்சம் அர்திரைடிஸ் இருக்கு. அவங்களுக்கு நீங்க பிசியோதிரப்பி பயிற்சிகள் சொல்லிக் கொடுங்க. இந்திய டாக்டர் சொல்றத தான் கேக்க மாட்டேன்றாங்க. அமெரிக்க பிசியோ டாக்டர் சொல்றதையாவது கேட்கிறாங்களா பார்போம்" என நக்கலாக கூறிய சீனுவை முறைத்தார் சாரதா.

"அதெல்லாம் என் மருமக  சொன்னா கேட்டுப்போம்" என சாரதா கூற மருமகளின் அர்த்தம் புரியாமல் விழித்த ரோஸியிடம் நந்தினி வேண்டும் என்றே "டாட்டர் இன் லா" எனவும் சட்டென செம்மை படர்ந்தது ரோஸிக்கு.

எப்போதும் எதிர் பேச்சு பேசும் சீனு அமைதியாய் இருக்கவே நந்தினி உள்ளுக்குள் பூரித்துப் போனாள்.

பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடக்க ரோஸிக்கு ஒவ்வொன்றின் சிறப்பையும் விளக்கிக் கொண்டிருந்தான் சீனு.

ஹாரிக்கு ஒரே கொண்டாட்டம். இத்தனை உறவுகள் தன்னை செல்லம் கொஞ்சுவதை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனின் மகிழ்ச்சி ரோஸியையும் தொற்றிக் கொண்டதால் அவள் முன் எப்போதும் இல்லாத சந்தோஷத்தில் திளைத்தாள்.

கிளம்பும் நாள் முன் தினம் அனைவரும் நந்தினி வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வேளையில்  சாரதா  பட்டுப் புடவை , பூ, பழம் அடுக்கிய தட்டை எடுத்து வந்து," இப்படி வாங்க" என தன் கணவரை அழைத்து பத்மினி ராஜேந்திரன் இருவரையும் நோக்கி," பத்மினி, அண்ணா உங்க பொண்ணு ரோஸிய எங்க சீனுவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதமா" என பட்டென்று கேட்டு விட அங்கு நிசப்பதம் நிலவியது.

நந்தினி தான் முதலில் சுதாரித்து," அத்தை" என ஓடி வந்துக் கட்டிக் கொண்டாள்.

சீனுவை பார்த்து," சீனு இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இறந்து போனவளையே நினச்சுட்டு இருப்ப. கல்யாணம் கூட ஆகல. லவ்வை சொல்லக் கூட இல்ல. இருந்தும் உன் ஒன் சைட் லவ்வை மதிச்சு நாங்க யாரும் ஏதும் சொல்லல்ல. ரோஸிய உனக்கு பிடிச்சிருக்குன்னு எனக்கும் ஒரு எண்ணம் வந்திச்சு. ஆனா எப்படி அத கேக்கறதுன்னு தெரியாம இருந்தேன். அத்தை கேட்டுட்டாங்க" என்றாள்.

சீனுவோ ரோஸியைப் பார்க்க ரோஸியின் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

பத்மினி அவளை அணைத்துக் கொண்டு," உன்னை யாரும் வற்புறுத்தல ரோஸி. உனக்கு மனசுக்குப் பிடிச்சிருந்தா சரின்னு சொல்லு" என்றாள்.

ஏற்கனவே ஒருவரை பற்றி ஒருவர் நந்தினி மூலம் நன்கு அறிந்து மனதில் பரிவாக இருந்த உணர்வு நேரில் பார்த்ததும் நேசமாய் மலர்ந்து விட்டிருந்தது. இருப்பினும் ஹாரியைப் பற்றிய தயக்கமும்  வெளிப்படையாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத நிலையும் சேர்ந்து கொள்ள,

" அம்மா... நான் ஹாரி" எனத் தடுமாற அவளின் தயக்கத்தை உணர்ந்து கொண்ட சீனு சட்டென அந்த தாம்பாளத்தில் இருந்த மல்லிகை சரத்தை எடுத்து அவள் முன்  முழங்கால் மடித்து," ரோஸி.. வில் யு மேரி மீ.. உனக்கு நல்ல கணவனாக ஹாரிக்கு நல்ல தந்தையாக இருப்பேன் .என்னை ஏற்றுக் கொள்வாயா " எனக் கேட்க பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் ரோஸி.

அதே நேரம் வர்ஷினி துரத்திக் கொண்டு வர ஹாரி "சீனு" என ஓடி வந்து அவன் பின்னால் ஒளிந்து கொள்ள , ரோஸி ஹாரியை அழைத்து ," ஹாரி நோ சீனு.. கால் ஹிம் அப்பா" என சொல்லிக் கொடுக்க  அனைவரின் உள்ளங்களும் நிறைந்து விட வாழ்த்துச் சொல்லியது வான்மழை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.