(Reading time: 15 - 30 minutes)

டிக்கும்போது வராத காதல், கல்லூரி முடித்த பின் வந்தது அவளுடன் உடன் பயின்றவனின் மேல்... உருகி உருகி இவள் காதலித்ததற்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றமும், தூக்கி எறியப்பட்ட நிலையும் தான்...

அவனது தேவைகளுக்கு அவன் அவளை பயன்படுத்திக்கொண்டான் என்று மனம் எண்ணிய அடுத்த வேளையே இல்லை என போர் முரசு கொட்டும் அவளின் இளகிய காதல் கொண்ட அதே மனம்...

தன்னைச் சுற்றியுள்ள தோழிகள் காதலிக்கும்போது சிரித்து கேலி செய்தவள் தானும் அதே போன்ற ஒரு நிலையை அடைவோம் என்று கனவிலும் எண்ணி பார்த்திடவில்லை...

இருப்பினும் என்ன செய்ய, காதல் என்ன சொல்லிக்கொண்டு வரும் தூதா?... சொல்லாமல் கொள்ளாமல், மனதை. மயிலிறகால் வருடி செல்லும் தென்றல் காற்று தானே காதல்...

அதை அவளும் உணர்ந்து அந்த மென்மையின் ஸ்பரிசத்தில் மயங்கி உள்ளத்தைப் பறிகொடுத்து, பேரின்பத்தில் மிதந்த நேரம், அவன் நடவடிக்கையில் மாற்றம்...

பதறியபடி, கேட்டதற்கோ கிடைத்த பதில், மௌனம், பாராமுகம்... அதற்கும் மேல், நான் உன்னை அவ்வாறு எண்ணவில்லை என்ற வார்த்தைகளின் மூலம் பேரிடியை அவள் தலையில் இறக்கியிருந்தாலும் அவள் ஒரே நொடியில் இறந்திருப்பாள்... ஆனால் அவன் அவளின் மனதில் இறக்கினான்... அது உடைந்து சிதறி, தூள் தூளானது மொத்தமாய்...

கதறி துடித்து அவள் வலியை தினமும் அனுபவித்தாள்... கண்ணீர் மொழியில் தலையணையுடன் அணுதினமும் உரையாடிக்கொண்டு காலத்தை கடத்தினாள் அவள்...

நீ போய்விடு என்று அவன் விரட்டியும், அவனின் காதல் காலடியில் அடைக்கலம் கேட்டு தவியாய் தவித்தாள் அவள்... இளகவில்லையே அவன் மனம் சிறிதும்...

மாறாக, இறுக்கம் தான் கொண்டது... பாராங்கல்லாய் உருமாற்றம் கொண்டது அவன் உள்ளக்கதவு... அதை முடிந்த மட்டும் தட்டி, அதன் வாசலிலே தவம் கிடந்தும் பார்த்து விட்டாள்... எனினும் முன்னேற்றம் ஏதும் இல்லை சொற்ப அளவு கூட...

அதை உடைக்கும் வழியும் கடினம் தான்... ஆனாலும் அவள் முயன்றிருந்தால் செய்திருக்கலாம்... ஆனால் அவள் செய்யவில்லை... செய்யும் எண்ணம் கூட உதிக்கவில்லை அவளின் பாழாய்ப் போன மனதில்...

கேட்ட மனதிடம், இல்லை என்னவனுக்கு வலிக்கும் என்று உரைத்தாள் அந்த பேதை... நிச்சயம் நீ ஏமாந்து போனதில் ஆச்சரியமே இல்லை என்று கூறி அவளுள் அன்று மறைந்தது தான் அவளின் மனது... அதன் பின் அவளிடம் கேள்வி கேட்க அதற்கு நாவும் எழவில்லை... வார்த்தையும் வரவில்லை அவளைக் காயப்படுத்த....

காதல் கொண்ட மனம் தன்னை எண்ணி வாடும் என்பது உண்மை தான்... ஆனால் அவளின் மனமோ அவள் நேசித்தவனுக்காக தான் ஒவ்வொரு வினாடியும் வாடி வருந்தியது...

இந்நேரம் உணவருந்திருப்பானா?... நேரத்திற்கு தூங்கியிருப்பானா?... இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வேகமாக செல்லாதிருக்க வேண்டுமே... என்று அவனைப் பற்றிய கவலையிலே தன்னை கவனிக்க மறந்தாள் அந்த பேதை...

விளைவு, அவள் உடல் நலிந்தது... உருக்குலைந்து அவள் சென்றுகொண்டிருந்த வேளையில் தான் அக்காவின் அறிமுகம் அவளுக்கு கிடைத்தது வெகு நாட்களுக்குப் பிறகு...

அவர்கள் சொல்லியும் அவள் திருந்தவில்லை... இப்படியே அவள் இருந்துவிடுவாளோ என்று அவர்கள் பயந்து கொண்டிருந்த நேரம், அவள் வாழ்வில் ஒரு ஆணின் நட்பு தலை தூக்கிப் பார்த்தது...

வன் நட்பு அவளை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியது உண்மைதான்...

ஆண்களிடம் அவள் பேசியதே இல்லை என்று சொல்ல முடியாது... பேசியிருக்கிறாள், என்ன என்றால் என்ன.... அதற்கும் மேல் அவள் மருந்திற்கும் எந்த ஆணிடமும் பேச்சு வார்த்தை வைத்துக்கொண்டதில்லை அவளின் காதலன் தவிர...

காதல் தந்த காயத்திற்கு பின் நெடுநாள் தன் தோழிகளிடம் கூட சரியாக பேசாதவள், அக்காவிடம் மட்டும் ஓரளவு மனம் திறந்தாள்... ஆனால் மற்றவர்களிடம் மறைத்த தன் காதலை நட்புக்கரம் நீட்டிய அவனிடம் மட்டும் மறைக்க அவளால் இயலவில்லை...

மனம் திறந்து அவனிடம் அனைவற்றையும் பேசினாள்... அதைவிட, அவன் காட்டிய நான் இருக்கிறேன் என்ற உணர்வு, வார்த்தை அவளை அனைத்தையும் சொல்ல வைத்தது... அவளை அவளாய் உணர்ந்தாள் அவனிடம் பேசும் ஒவ்வொரு நொடியும்...

ஏனோ நண்பன் என்றால் இவ்வாறு தான் இருப்பானோ என்ற நிஜமும் அவளுக்கு புரிந்தது... வாழ்க்கையில் ஒருவருக்கு நட்பு சரியாக அமைந்துவிட்டால் மலை அளவு வலியும், பிரச்சினையும் கடுகளவு தான் தெரியும்...

அதை அவளும் உணர்வுப் பூர்வமாக அறிந்து கொண்டாள் அவனிடம்... நல்ல தோழியாக அவளை அவனும் நேசித்தான்... அவளும் அது போல் அவனை தோழனாக நேசித்தாள்... எனினும் அப்படியே சென்றுவிட்டால் விதிக்கு வேறு வேலை இல்லையே...

தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்த உறவில் விரிசல் என்று சொல்வதைக் காட்டிலும் சுழற்சி ஒன்று உருவானது கருத்து வேறுபாடு என்ற பெயரில்...

சிறிதாக ஆரம்பித்த வேற்றுமை பெரிதாக மாறியது... மனதளவில் நட்புடன் நெருங்கிய இருவரும் பிரிய ஆரம்பித்தனர் கொஞ்சம் கொஞ்சமாக அதே மனதளவில்...

தினமும் இருவரும் செல்போனில் பேசிக்கொண்டாலும், அந்த பழைய நட்பு ஏனோ அவளுக்கு கிடைத்திடவில்லையோ என்ற எண்ணம் இன்றும் அவள் மனதில் உண்டு... ஆனாலும் எதுவுமே இல்லாதவளுக்கு பழைய சோறும் அமிர்தம் தானே???...

அவளின் வாழ்வில் அவளுக்கு தைரியம் சொன்னவன், வாழ்வை வாழ்வாக வாழ வழிகாட்டியவன், இன்றும் அவள் வாழ்வில் இருக்கின்றான், ஆனால் தூரத்திலா அருகிலா என்பது அவளுக்கு புரியாத புதிர் தான்...

அவனை அவள் கைக்குள் வைத்துக்கொள்ள அவள் முயற்சிக்கவில்லை... தோழமையோடு அவள் என்றாவது திரும்பி பார்க்கும்போது கை கொடுக்க அவன் இருந்தால் போதும் என்று தான் எண்ணுகிறாள்...

காதல் தான் கலைந்த கனவாய் முடிந்து போயிற்று.... நட்பாவது நீடிக்கும் என்ற நனவும் கண் முன்னே கலைந்திட கூடாது என்று தான் விரும்புகிறாள்... அது அந்த கடவுளுக்குப் புரியவில்லையே.....

திருமண வயதை எட்டி நிற்கும் அவளை உரிய காலத்தில் ஒருவனின் கையில் பிடித்துக்கொடுக்க ஆசைப்பட்டனர் அவளின் பெற்றோர்...

மனதிலோ காதல் தந்த வலி, ஆறியும் ஆறாமல்... ஆனாலும் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்... மனதை தேற்றிக்கொண்டு நடப்பதை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும் நான் என்ற நினைப்பை மனதில் தக்க வைத்துக்கொண்டாள் அவள்...

இத்தனை நாள் பெற்று வளர்த்தவர்கள் ஆசையே அவளை நல்ல கணவனிடம் சேர்ப்பிப்பது தானே... அதை மறுக்க அவளால் இயலாது தான்...

வரும் கணவன் இத்தனை நாள் தனக்கு கிடைத்த வலிகளை போக்கும் மருந்தாக இல்லாவிடினும், அதனை குத்தி ரணப்படுத்தி குருதி சிந்த வைப்பவனாக மட்டும் இருந்திடாமல் இருந்தால் போதும் என்று கடவுளை வேண்டிக்கொண்டாள்...

திருமணம் என்றதும் திருமணம் முடிந்துவிடாதே... அதற்கு பெண் மட்டும் போதாது... பொன்னும் வேண்டும்... இருக்கும் பத்து சவரன் நகையை வைத்து அவளை கரையேற்ற துடிக்கின்றனர் அவளது பெற்றோர்...

ஆனால் வருபவருக்கு அது பத்தாமல் போகிறது... நாங்கள் இருக்கும் வீடு எனக்கு பின் என் மகளுக்கு தான் என்று உரைத்து பார்த்தும், இப்போதும் பத்து போடுங்கள், பிறகு பத்து போடுங்கள் என்கிறார்கள் எல்லோரும்... பணம் இருந்தால் எவ்வளவு என்றாலும் போடலாம்.. அதற்கு வழி இல்லாத நிலையில் எதை அடமானம் வைத்து நகை போடுவது?....

அவள் வேலைப் பார்த்து ஓரளவு சேர்த்து வைத்த தொகை ஒரு வருடமாய் ஒரு லட்சத்தை கூட தாண்டிடவில்லை... அது திருமண செலவிற்கு கால் பங்கிற்கு கூட வராதே... யானைப் பசிக்கு சோளப்பொறி தாங்குமா என்ன???...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.