(Reading time: 15 - 30 minutes)

ந்த நேரத்தில் தன் கணவனின் நிலையை சுட்டிக்காட்டி ஆற்றாமையில் அவள் தாய் கண்ணீர் வடித்து, வாழ்ந்த காலத்தில் மனைவி, பிள்ளைகளுக்கென நீங்கள் சேர்த்து வைத்திருந்தால் இன்று என் மகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி இருக்காதே என்று புலம்ப, தகப்பனோ மௌனமாய் செய்வதறியாது மகளைப் பார்த்தார்...

ஆண் பிள்ளையாய் பெற்றிருந்தால் கவலை இல்லாமல் இருந்திருப்பேனே... இப்படி பெண் பிள்ளையை பெற்று விட்டு அதை கரை சேர்க்கும் வழி தெரியாது நிற்கிறேனே... ஏ... இறைவா... உனக்கென்ன கல் மனமா?... என் குடும்பத்திற்கு நல்வழி காட்ட உனக்கு மனமே வராதா?... உன் கண்கள் என்ன மூடிக்கொண்டதா என் குடும்பத்தைப் பார்க்கும்போது மட்டும்... உன் செவிகள் மூடிக்கொள்ளுமா நான் அழுது புலம்பும்போது மட்டும்.... என அந்த தாயுள்ளம் கதறியது...

வள், தன் தாய்க்கும் தகப்பனுக்கும் மகளாய் அவதரித்து மகிழ்ச்சி கொடுத்த பெண்...

அவள், சொந்தங்கள் ஒதுக்கிய போது வலித்த மனத்தை மறைத்து வாழ்ந்த பெண்...

அவள், கன்னி மனதை முழுமையாய் ஒருவனிடத்தில் தாரை வார்த்து கொடுத்து விட்டு அவன் காதலுக்காக சாதகப்பட்சியாக ஏங்கிய பெண்....

அவள், தன்னை சுற்றி தற்போது இருக்கும் தோழிகள், தம்பி, அக்கா உறவுகளை நேசிக்க தெரிந்த பெண்...

அவள், அலுவகத்தில் சூடு பட்டு புண்பட்ட நெஞ்சத்தை அது கொடுத்த வலியை முடிந்த மட்டும் தாங்கிய பெண்...

அவள், நட்புக்கு உண்மையாய் இருக்க நினைத்து அதற்காக போராடும் பெண்...

அவள், வரவிருக்கும் மணவாளனை பொன்னோடு, சீர்வரிசையோடு நிலபுலன்களோடு, கைப்பிடிக்க காத்திருக்கும் இந்த பொல்லாத சமூகத்தின் விதிவிலக்கில்லாத பெண்...

பெண்.... சாதாரண பெண்... இந்த சமூகத்தில் தினம் தினம் மகளாகவும், வேலையாளாகவும், காதலியாகவும், தோழியாகவும், சகோதரியாகவும், வாழ்ந்தாள் அவள்...

இத்தனை பரிமாற்றங்கள் அவளிடம் இருந்தாலும், அவளிடம் யாரும் நகையை எதிர்பார்க்காமல் இல்லை... அவளை மனைவியாக்கி கொள்ள பொன் தேவைப்படுகிறது... எனில் அந்த பெண்ணிற்கு மதிப்பு எங்கே இருக்கிறது???...

காதல்.... அதாவது அவளுக்கு நிறைவு தந்ததா?... தூக்கி தானே எறிந்தது இந்த வசைபாடும் சமூகத்தில் அவளை ஓர் மூலையில்...

அழகு, நிறம் கொண்டு வந்தால் காதல், சீர் கொண்டு வந்தால் திருமணம் என்றால், இந்த உலகில் பெண்ணிற்கு இருக்கும் மதிப்பு தான் என்ன?... அவளின் குணத்திற்கு கிடைக்கும் பரிசு தான் என்ன??...

ஒரு பெண் முழுமையடைவது ஆணால் தான்... ஒரு ஆண் முழுமையடைவதும் பெண்ணால் தான்... அதை உணர்பவர் நம்மில் எத்தனை பேர்???...

இதுவரை அவள் அனுபவித்தது வேதனை தான்... வருத்தங்கள் தான்... அணுதினமும் போராட்டங்கள் தான்... இதுவரை அவள் வாழ்ந்தது சொற்பம் தான்... இனி தான் வாழ்க்கையே ஆரம்பிக்க இருக்கிறது திருமணம் என்ற பெயரில்...

திருமணம் என்பது தான் ஒரு பெண்ணை முழுமையாக்கும்.... அவள் பெண் என்பதை உணர வைக்கும்.... அந்த திருமணம் அவள் வாழ்வில் மாற்றம் கொண்டு வருமா?... இல்லை சீரும் நகையும் மட்டும் எதிர்பார்க்குமா???...

உங்களிடமே ஒப்படைக்கிறேன் கேள்வியை...

எத்தனையோ பெண்கள் இது போன்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்றும்...

இங்கு நான் குறிப்பிட்ட “அவள்” வேறு யாருமில்லை... இந்த சமூகத்தில் அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மில் ஒருத்தி...

சொந்தங்கள் ஒதுக்கிய போதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாதவள், தந்தையின் நிலையைக் கண்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தவள், அலுவகத்தில் தினம் தினம் ஊசி குத்தும் பார்வையும் வேதனை கொடுக்கும் சொற்களையும் கேட்டவள், காதலை மூச்சாக எண்ணி சுவாசித்து இன்று உயிரற்ற உடல் கூடாய் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவள், நட்பின் மூலம் வாழ்வின் அடுத்த நிலையை அடைந்திருப்பினும் அந்த நட்பை தன்னிடம் தக்க வைக்க முயன்று கொண்டிருப்பவள், சந்தையில் மாட்டை விலை பேசுவது போல் பொன்னுக்காக தன்னை நட்ட நடு கூடத்தில் பலர் முன் நிற்க வைத்து பார்க்கும் சமூகத்திடம் தன் நிலையை உரைக்க முயன்று தோற்று கொண்டிருக்கும் சாதாரண மனுஷி தான் அவள்...

ஆம்.... இத்தனை நடந்தும் இன்னும் உயிரோடு இருக்கிறாளே மனதில் இருக்கும் சிறு நம்பிக்கையையும், வலுவையும் திடமாகப் பற்றிக்கொண்டு…

அவள் தான் பெண்”…

இந்த கதையில் வரும் “அவள்” கதாபாத்திரம் ஆண்களை குறை சொல்வதற்காக எழுதப்பட்டது அல்ல.. அவளின் உணர்வுகளை பிரதிபலிக்கவே எழுதப்பட்ட ஒன்று…

கதையில் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள்…

நான் சொன்னவை, உங்களின் மனதிற்கு சரியாக பட்டால் சிந்தியுங்கள்…

சமூகத்தை சரியான வழியில் நடத்துவதில் நம்முடைய பங்கும் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்…

தங்கள் அனைவரையும் மீண்டும் சிறுகதை மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி….

சிறுகதை எழுத வாய்ப்புக்கொடுத்த சில்சீக்கு எனது நன்றிகள்...

 

This is entry #32 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

 

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.