(Reading time: 12 - 24 minutes)

 

முறைத்த நந்துவை பார்த்து,

"ஐயோ முறைக்காதீங்க. எனக்கு பயமா இருக்கிறது" என்று கூறி நகைத்தாள்.

நந்து தன் நிலை சிரிப்புகுரியதாகி விட்டது என வெதும்பினான். இவளிடம் என்ன சொல்வது எப்படி இவளை தள்ளி வைப்பது என தெரியாமல் தவித்தான்.

"மிருதுளா இங்கே வா...”

"வேண்டாம் நான் வரலை."

"ஹையோ கஷ்டம் டா, சாமி" என்று தலையில் அடித்தான்.

"அச்சச்சோ! ஒகே ஒகே நான் வந்துவிட்டேன் சொல்லுங்கள்."

நந்து நிதானமாக சொன்னான்,

"எனக்கு உன்னை பிடிக்கவில்லை."

மிருதுளாவும்  நிறுத்தி நிதானமாக கேட்டாள்,

"அதற்கு என்ன?"

கன்னத்தில் அரைபட்டது போல் உணர்ந்தான்.

சே !! என்ன பெண் இவள்.

"நீ என் பக்கத்தில் கூட வரக்கூடாது."

"அதற்கென்ன வராமலிருக்கிறேன். வேற?"

"உன் நிழல் கூட என் மேல விழக்கூடாது."

கோபத்தை உமிழ்ந்தான் நந்து.

"அப்போ என் மேல் வெளிச்சம் படாமல் பார்த்து கொள்கிறேன்", என்றாள் மிருதுளா.

"என்ன?" என இரைந்தான் நந்து.

"ஆமாம் வெளிச்சம் பட்டால் தானே நிழல் விழும் அதை சொன்னேன்."

"ஹையோ இவள் பெரிய சைண்டிஸ்ட்."

"இல்லை இல்லை நான் MA literature."

"எல்லாம் புரிந்ததா இல்லை புரியாமல் நடிக்கிறாயா?"

"நான் உங்களை ஒன்று கேட்கலாமா?"

என்ன என்பது போல் நிமிர்ந்தான்.

"நீங்கள் நல்லவரா கெட்டவரா?"

"கடவுளே! கடவுளே!" என கூறி புன்னகைத்தான்  

"அப்பாடி இடிக்குதே! முழங்குதே! என காதை பொத்தினாள் மிருதுளா.

"என்ன என்ன?"  பதறினான் நந்து.

"இல்லை நீங்க முதல் முதலாக சிரிக்கிறீங்களே அதனால இடியோடு மழை வரும் என்று தான் காதை பொத்தினேன்" என்றாள் மிருதுளா.

ந்துவால் பேச முடியவில்லை. "

இவளுக்கு எதுவும் சீரியஸ் இல்லை. விளையாட்டு பெண்ணாய் இருக்கின்றாள். நான் என்ன செய்ய போகின்றேன். விரும்பாதா கல்யாணம் இப்படித்தான் இருக்குமோ?"

குழப்பங்கள் தொடர்ந்தன. நாட்கள் நகர்ந்தன. அவளாக எதற்கும் இவனிடம் வருவதில்லை. ஆனால் அவள் சம்மந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் அவளால் சிறப்பாக செய்யப்பட்டன.

ன் தாயிடம் அழகாகவும் பொறுப்பாகவும் பேசுகிற போது அவளை அப்படியே அடித்து துரத்தலாம் போலிருந்தது அவனுக்கு. ஆனால் இவனிடம் சர்வ அலட்சியமாக நடந்து கொண்டாள். நந்துவால் சகித்து கொள்ள முடியாத போது கோவத்தில் எகிறினான். அதையும் அவள் பொருட்படுத்தவில்லை.

அகல்யா தான், "  டேய் நந்து, நானும் பார்க்கிறேன் எதோ கல்யாணமாகி பத்து பதினைந்து வருடம் ஆனது போல் நடந்து  கொள்கிறாய். அவளை வெளியே அழைச்சிட்டு போ.. நாலு  இடத்தை சுற்றிக் காட்டு."

"போங்கம்மா, நீங்க கூட்டிட்டு போங்க.  இதுக்கெல்லாம் நேரம் இல்லை."

அகல்யா முகம் வாடினாள்," என்ன நந்து. என்ன பேச்சு இது?"

நந்து பதில் சொல்வதற்கு முன்,

"ஐயோ அத்தை நாளை ஞாயிறு கண்டிப்பா கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.  அதுக்குள்ள நீங்களே கேட்டுடீங்க. என்னங்க நான் சொல்றது சரிதானே?"

அஹா! என்ன உலக மாஹா நடிப்பு!  காப்பாற்றுகிறாளா?

".அதெல்லாம் இல்லை, நான் ஒன்னும் இவளை அழைச்சிட்டு ஊர் சுத்த போகலை. பொய் சொல்கிறாள்."

"ஒ மை காட்! இவர் பொய் சொல்கிறார் அத்தை. உள்ளே வேற மாதிரி பேசுகிறார் வெளியே வேற மாதிரி பேசுகிறார்" என்றவள் கலகலவென்று சிரித்த அகல்யாவை பார்த்து தானும் கலகலவென்று சிரித்து இறுக்கமான சூழலை அகற்றினாள். அகல்யா நந்துவை திரும்பி கூட பாராமல் மருமகள் பின்னாடி சென்றாள்.

மறுநாள் காலையிலேயே ப்ளூ கலர் சுடிதார் பிங்க் பாட்டமுமாக அழகாக நின்ற மிருதுளா

"ஏங்க நான் கிளம்பிட்டேன். நீங்க இன்னுமா கிளம்பல?", என்று அகல்யாவிற்கு கேட்கும் அளவு குரலை உயர்த்தினாள்.

நந்து அவளருகில் வந்தான்,

"ஏய் நீ மனசுல என்ன நெனச்சிட்டு இப்படி ஆடுகிறாய்?" என்று கீழ் குரலில் கோபத்தில் இரைந்தான்.

"ஏன் இதை சத்தமா கேளுங்களேன்", என்றாள் மிருதுளா.

"டேய் நந்து!

"இதோ கிளம்பிட்டேன் மா..."

"அது! அது!" என்று கிசுகிசுத்தாள் மிருதுளா.

"மா... இங்கே வாங்க", என்ற நந்து தாயிடம் தனியாக கிசுகிசுத்தான்.

"மா, எனக்கு கொஞ்சம் டைம் கொடும்மா. ஏன் நீயும் புரிஞ்சிக்க மாட்டேன்ற?"

"டேய் நந்து, நான் சும்மா உன்னை சீண்டலை டா. மிருதுளா மனம் வாடி விடுவாளே என்று அவளிடம் பேச்சு கொடுத்தேன். அன்று நீ கோவப்பட்டு பேசிய போது தான் அவளிடம்,  மிருதுளா என் பையன் உன்னை சரியாக புரிஞ்சிக்கலைன்னு வருத்தபடாதேன்னு ஆறுதலாக பேசினேன்."

"அட போங்க அத்தை. என் நிச்சயதார்த்தம் நின்று போனப்ப எனக்காக கலங்கவில்லை என்னை பெற்றவர்களுக்காக கலங்கினேன். ஆனால் எனக்கு இப்படி ஒரு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்பதினாலேயே, அந்த கல்யாணம் நின்றதினாலே தானே இன்று நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றேன்னு சொன்னாடா. மேலும், அவருக்கு என் மேலே கொள்ளை பிரியம், என் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்த திணறுகிறார். நான் சரிபடுத்துகிறேன். நீங்கள் கவலைப் படாதீர்கள் என்று என்னிடம் சொன்னாள்."

"என்ன பொண்ணும்மா இவள்", என்று சிலாகித்தான்.

நான் அவள் மேல் வைத்திருந்த அன்பை எப்படி கண்டு பிடித்தாள் என்று குழம்பியவாறு சென்றான்.

வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மிருதுளா வாயை திறக்கவில்லை. நந்துவுக்கே இவள் என்ன இப்படி ஒரு அமைதியாக வருகிறாள் என்று மனதிற்குள் ஆச்சரியபட்டான். ஆனாலும் அவள் ஏதாவது பேசமாட்டாளா என்று ஏங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.