(Reading time: 12 - 24 minutes)

 

ங்கே போவது என்று தெரியாமல் நந்து திணறிகொண்டிருந்தான். அவளோ கூலாக வெளியே பார்த்தபடி வந்தாள். சட்டென்று செல்போன் சிணுங்கிய போது  திடுக்கிட்டு நிமிர்ந்தான். சாலையோரமாக காரை நிறுத்திய பின்னர் போனை அட்டெண்ட் செய்தான்.

"ஹேய் பாலா என்னடா இந்த நேரத்தில போன்?"

"நந்து என்ன விளையாடரீயா?  நீ தானே டா நம்ம எம்.டி கொடுக்கற பார்ட்டி அட்டெண்ட் பண்ணலாம்னு சொன்ன. கொள்ளபோகிறேன் பார் உன்னை. உனக்காக ஹெரிடேஜ் ஹோட்டல் முன்னாடி வெயிட் பண்றேன் டா."

"அச்சச்சோ! நான் மிருதுளாவோட வெளியே வந்துருக்கேன் டா. ப்ளீஸ் நீ மட்டும் போய்ட்டு வாயேன்."

"போடா இடியட்! மனைவி வந்த பிறகு ரொம்ப மாறிட்ட டா."

"டேய் என்னை பற்றி தெரியாதா? அம்மாவுக்காக இந்த நாடகமெல்லாம் நடத்தறேன்னு புரிஞ்சிகோடா."

வர வர நான்  பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டேனே என்று நந்து நினைத்து கொண்டான்.

"வைடா போனை."

போனை அலட்சியமாக வீசிவிட்டு மிருதுளாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அலட்சியமாக காரை எடுத்த போது பின்னால் வந்த லாரியை கவனிக்காமல்........................

ரத்த வெள்ளத்தில் நந்துவும் மிருதுளாவும்,.. நல்ல உள்ளங்கள் படைத்த சிலரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். செல்போன் கொடுத்த தகவலில் குடும்பமே கூடியிருந்தது. மிருதுளா தலையில் கட்டுடன் ட்ரிப்ஸ் ஏறிய நிலையில் பார்க்க அனுமதிக்கபட்டார்கள். தலையில் சிறு கட்டுடன் நந்துவும் அந்த அறைக்குள் நுழைந்தான். கண்களை மூடிய நிலையில் இருந்த மிருதுளாவை பார்த்து கண் கலங்கினார்கள். டாக்டர் எல்லோரையும் அமைதிபடுத்தி வெளியே அனுப்பினார். நந்துவை மட்டும் அந்த அறையில் அனுமதித்தார்.

"மிஸ்டர் நந்தகுமார், உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். மிருதுளா கிட்ட தட்ட கோமா நிலையில் உள்ளாள் . இதிலிருந்து வெளியே வாருவாள் என்பது மெடிக்கல் மிராக்கிலாகத் தான் இருக்கும். சாரி டு ஸே திஸ்."

"டாக்டர்!!!" அலறினான் நந்து.

"கடவுளை நம்புங்கள்."

"நோ டாக்டர் நோ..... நீங்கள் என் மிருதுளாவை பத்திரமாக திருப்பி தர வேண்டியது உங்கள் பொறுப்பு."

"மிஸ்டர் நந்தகுமார், எங்களால முடிந்தது செய்திருக்கிறோம்.  நினைவு எப்போ திரும்பும் என்பது சொல்வதற்கில்லை. யாராவது நல்ல நர்ஸை வேலைக்கு போட்டு கொள்ளுங்கள். நாங்கள் சொல்லும் மருந்துகளை தவறாமல் கொடுங்கள்."

"ஸ்டாப் டாக்டர். உங்களுக்கு என் மிருதுளாவை பற்றி தெரியாது. அவளால் ஐந்து மிமிடம் படுக்க முடியாது. ஒ மை காட்! அவளால் இப்படி ஓய்ந்து இருக்க முடியாது."

"மிருதுளா! மிருதுளா! மிருது!மிருது! பரிதவித்தான் நந்து.

"திசை தெரியாமல் நின்ற என்னை உன் பக்கமாகத் திருப்பினாயே, உன் குரல் கேட்காமல் காதே அடைத்தது போல் இருக்கிறதே. யாதுமாகி நின்றாயே! உன்னை மனதார விரும்பினேனே. உன்னை பழைய நிலைக்கு கொண்டு வரும் வரை நான் ஓய மாட்டேன்."

"மிருதுளா!மிருதுளா!, எழுந்திரும்மா" என்று குரலை உயர்த்திய டாக்டர் கலகலவென்று சிரித்தார்.

"உன் வீட்டுக்காரர் படும் பாட்டை என்னால் பார்க்க முடியவில்லை."

அதிர்ச்சியில் நந்து .உறைந்தான். திகிலுடன் எழுந்து உட்கார்ந்த மிருதுளாவை பார்த்தான்.

அவளருகில் வேகமாக சென்று, "உனக்கு ஒன்றுமில்லையா? என்ன? என்னாச்சுமா? ஏன் இப்படி படுத்திருந்தாய்?"

மிருது அவனை பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

டாக்டர், ".மிஸ்டர் நந்தகுமார் இவள் என் நண்பரின் மகள் இங்கே வந்த போது நீ மயக்கமாகி இருந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டாள். நீ அவளை விரும்புகிறாயா என்பதை அறிய நினைத்தாள்."

"ஆமாம் அங்கிள், நாங்கள் வெளியே வந்த போது தன் நண்பரிடம் அவங்க அம்மாவுக்காக நாடகம் போடறேன் என்றார். ஆனால் அவர் என்னை விரும்புகிறார் என்று என் உள் மனது கூறியது. அது மட்டும் போதாது காதால் கேட்க வேண்டும் என்று தோன்றியது அங்கிள். ஒத்துழைத்த உங்களுக்கு நன்றி அங்கிள்."

"கல்யாணத்திற்கு பின் காதலிக்க ஆரம்பிக்கும் காதலர்களே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்", என டாக்டர் கலாய்த்தார்.

நந்துவும் மிருதுவும் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.