(Reading time: 16 - 32 minutes)

" யூ இடியட் ம் சொன்னா புரியாதா ? கூடிய சீக்கிரம் உன் முகத்திரையை ஜான்சியின் முன்னிலையில் கிழிக்கிறேன் இரு " என்று ஆவேசமாய் அங்கிருந்து நகர்ந்தான் பகலவன்  .. தன்னை பார்பதற்காக ஆசையாய் வந்த பனித்ராவை  கூட கவனிக்காமல் நடந்து சென்று விட்டான் அவன் .. மனதில் அத்தனை ஆக்ரோஷம் அவனுக்கு ..

காரணம் , அவர்களுடன் படிக்கும் மாணவன் ஜான் .. காதல் என்ற பெயரில் அவன் செய்யும் லீலைகள் பலருக்கும் தெரிந்தும் கூட எப்படித்தான் அப்பாவித்தனமாய் ஜான்சி அவளை காதலிக்கிறாளோ ! என ஆயாசமாய் இருந்தது அவனுக்கு .. எப்படியாவது சக மாணவி அவனுக்கு இரையாகிவிட கூடாது என்பதில்  கவனமாய் இருந்தான்  பகலவன்  .. ஆனால்  கவனமாய் இருக்க வேண்டிய ஜான்சியோ காதல் எனும் பேரில் இளமை தந்த கிளைர்ச்சியில் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருந்தாள்..

தன்னை மறந்து

மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

தன்னை மறந்த வண்டு

தேக சுகத்தில் கவனம்

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு மண்ணில் அணையா ?

மோகமும் கங்கை நதிதானோ ? வாழ்வில் மோகமும் ஓர் அங்கமாக இருந்தாலும் கூட நதியின் விஸ்வரூபம் பேரழிவை தருவது போல தானே மோகமும் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது ! இது ஏன் இவர்களுக்கு புரியவில்லை ? தலை பாரமாய் இருப்பது போல இருந்தது பகலவனிற்கு.. சரியாய் அந்த நேரம் அவன் கரங்களை பற்றினாள்  பனித்ரா ... ஆச்சர்யமாய் அவளை நிமிர்ந்து பார்த்தான் பகலவன்  ..

" உங்களுக்கு என்ன கஷ்டம்னு எனக்கு தெரியல ..ஆனா எதுவா இருந்தாலும் நானும் உங்களோடு இருக்கேன்னு மறக்க வேணாம் " என்று தேவதை போல மொழிந்துவிட்டு மந்தகாச புன்னகையுடன் மறைந்துவிட்டாள்  அவள் . அவனுக்கே நடந்ததெல்லாம் கனவா என்பது போல இருந்தது !

என்ன காரியம் செய்து விட்டாள்  அவள் ? ஒரு புறம் தனது மனதை கோடிட்டு காட்டி விட்டாள் .. இன்னொரு புறமோ அவன் மனகாயத்தை ஆற்றி விட்டாள்  .. அந்த ஆனந்தத்தில் இருந்தவன் தூரத்தில் இருந்து தன்னை குரோதத்துடன் பார்த்த ஜானை கவனிக்க தவறினான் ..

" அழிக்கிறேன் .. உன் சந்தோஷத்தையும் , நல்லவன்னு பெயர் வாங்கின கர்வத்தில் இருக்கும் உன் திமிரையும் அழிச்சு இப்போ உன்னை ஆசையாய் பார்த்தவள் உன் முகத்தில் உமிழ வைக்கிறேன் "  என்று சூளுரைத்தான் ஜான் ..

அன்று பகலவனின் பிறந்தநாள்.. அதுதான் அவன் படிக்கும் கடைசி வருடம் என்பதால் நண்பர்கள் அனைவருடனும் கோலாகலமாய் பிறந்தநாள் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது .. கிடைத்த வாய்ப்பை சரியாய் பயன்படுத்த காத்து கிடந்தான் ஜான் ..

சூழ்நிலையும் அவனும் சாதகம் ஆகிவிட்டது போலவே, அந்த விழாவிற்கு பகலவனிற்காக தனியே வந்திருந்தாள் பனித்ரா ... வெள்ளை நிற புடவையில், நீண்ட கூந்தலை தோளில்  படரும்படி விரித்து , புடவைக்கு தகுந்த அணிகலன்களுடன் அப்சரசாய் மிளிர்ந்தாள் அவள்.. பகலவனோ அவள் பக்கம் பார்வையை திருப்புவதற்கு பெரும்பாடு பாட்டான் .. கிடைத்த சந்தர்ப்பத்தில்

" ஏனடி  இப்படி அழகாய் வந்து என்னை சோதிக்கிற ?" என்று அவள்  காதில் ரகசியமாய் கிசுகிசுத்தான் .. வெட்கத்தில் இன்னும் அழகாகவே தெரிந்தாள்  பனித்ரா ... திட்டமிட்டிருந்தபடி இருவரின் குளிர்பானத்திலும் போதைமருந்து கலந்திருந்தான் ஜான் ...

அதை உணராமல், தனது நிலை தடுமாறுவதை முற்றிலுமாய் உணருமுன் பனித்ராவிடம்  தனியாய் பேசுவதற்காக அவளை  தன்னுடன் அழைத்து சென்றிருந்தான் பகலவன் .. அவர்கள் தோட்டத்தை அடைந்த நேரம்  சரியாய் அடைமழை தொடங்கியது .. குளிர்பானத்தின் செயல்பாடும் , இயற்கையின் இனிய தருணமும் , அருகில் இருந்த மனம் கவர்ந்தவளின் வனப்பும்  பகலவனின் மூளையில்  அபாயமணியை ஒலிக்க  வைத்தது .. அவனை விட சற்று தெளிந்துதான் இருந்தாள்  பனித்ரா ... அவன் முகத்தை கண்டவளுக்கோ ஏதோ சரியில்லை என தோன்றியது ..

" வனு.. என்ன ஆச்சு வனு ?" என்று கேட்டாள் ..

" நீ முத்து அண்ணனுக்கு போன் பண்ணு  பனி .. உன் போன் எங்க ? "

" என்னன்னு சொல்லுங்க "

" எனக்கு தெரில .. நீ ... நீ இங்க இருக்க கூடாது .. முதலில் போ " என்று அவளை விரட்டினான் அவன் ..

" என் போன்  எங்க வெச்சேன்னு தெரில .. " என்று லேசான மயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்  பனித்ரா ...

" வா தேடலாம் " என்று கை பற்றி இழுத்தவன் அவளோடு சில அடிகள் நடக்கும்போது கால் இடறி அவள்மீதே விழுந்திருந்தான்.. மழைநீர் முகத்தில் கோலமிட , மிகஅருகில் அவளது முகம் பார்த்தவன் மெல்ல தடுமாறினான் .. அவளது மருண்ட விழிகளில் எதைகண்டானோ, தன்னையும் மீறி அவள் இதழோடு இதழ் இணைத்திருந்தான் ..

அங்கம் முழுதும் பொங்கும்  இளமை

இதம் பதமாய் தோன்ற

அள்ளி அணைத்த கைகள்

கேட்க நினைத்தாள்  மறந்தாள்

கேள்வி எழும்முன் விழுந்தாள் 

அவள் விழுந்திருந்தாள் .. ஒருநொடியில் தன்னிலையில் இருந்து அவன் வசம் விழுந்திருந்தாள்  தன்னை முற்றிலுமாய் இழந்திருந்தாள்.. பகலவனின் பார்வையில் கரையும் பனித்துளி போல , அவனதொடு தொடுதலில் கரைந்தே இருந்தாள்  அவள் முற்றிலுமாய் .. காதலும் மோகமும் இணைந்து நடத்திய போராட்டத்தின் விளிம்பில் கண்ணீரே எதொரோளியானது இருவரின் விழிகளிலும்.. இருவரும் தன்னிலை திரும்பிய நொடி, அவர்களுக்கு பாதகாமான நிலைதான் .. பனித்ராவின்  முகத்தை ஏறிட்டு பார்க்கும் துணிவில்லாமல் இருந்தான் பகலவன் ..

ஆண்மகன் எளிதில் அழுவதில் என யார் சொன்னது ? தன்னை நம்பி தனக்காக வந்தவளை ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணர்வில் அழுதான் அவன்.. பனித்ரா  தான் வார்த்தையால் கூற முடியாத உணர்வில் துடித்தாள் .. இந்த நிலையிலும் அவனது கண்ணீரை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை .. தன்னை தேற்றுவதற்கே ஆளில்லாமல் இருந்தவள், அவனை தேற்ற முயன்றாள்  ..

" வனு நான் உங்களை நம்புறேன் வனு ..எனக்கிதை தவிர வேறேதும் சொல்ல முடியல .. முதலில் அழறதை நிறுத்துங்க .. நாம முதல்ல இங்கிருந்து போகலாம் " என்றாள்  விசும்பியபடி .. அவளை பத்திரமாய் வீட்டில் விட்டவன் நேராய் தனது வீட்டில் இருந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தான் ..

" பொருக்கி நாயே ... மனுஷனா டா நீ ? ச்சி  .... உனக்கும் மிருகத்துக்கும் என்னடா வித்தியாசம் ... அப்பாவி பொண்ணுடா அவ " என்று  கண்ணாடியை பார்த்தபடி வெறித்தனமாய் கத்தியவன் தனது பலத்தை ஒன்று திரட்டி கண்ணாடியை உடைத்தான் .. பனித்ராவோ தனது அக்காவின் முகத்தில் விழிக்க தைரியம் இல்லாமல் மௌனமாய் அழுது தீர்த்தாள் ..

" நடந்ததை நியாயப்படுத்திவிட முடியாது எனினும் , அதை சரி படுத்திவிட வேண்டும்" என்று முடிவெடுத்தவள்   மறுநாள் பவித்ராவிடம் உண்மையை கூறிவிட வேண்டும் என முடிவெடுத்தாள் .. ஆனால்  விடிவதற்குள் இன்னோர் முடிவு காத்திருந்தது ..காலையிலேயே அவளது போனின் அலறலில் துள்ளி எழுந்தாள்  பனித்ரா  .. போனில் பேசியவன்  பகலவனின் நண்பன் சந்துரூ ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.