(Reading time: 10 - 20 minutes)

"தேங்க்ஸ்ப்பா" என தந்தையை முத்தமிட்டு சிட்டாய் பறந்து சென்றவள் நேரே சென்றது ப்ருத்வியிடம் தான்.

திடீரென வர்ஷா புயலாய் வருவாள், வந்ததும் இல்லாமல் இப்படி இறுக்கமாய் தழுவிக் கொள்வாள் என்று சற்றும் எதிர்பார்க்காத ப்ருத்வி நெகிழ்ந்து தான் போனான்.

அவனுள் புதைந்தவள் என்னை பிரியாதேயேன் என்று சொல்லாமல் சொல்ல, மெல்ல அவளை விலக்கி

"வர்ஷு, என் உயிரே நீ தாண்டி. இருந்தாலும் எனக்குன்னு லட்சியம் இருக்கு கடமை இருக்கு" என்று அவன் மேலும் சொல்லும் முன்னே

" ப்ருத்வி நீ என்ன சொல்ல வர்றன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அப்பப்போ மட்டும் கொஞ்சம் நேரம் கொஞ்சமே கொஞ்சம் நேரம் உன்கூட ஸ்பென்ட் பண்ணிட்டு போறேன். அதுக்கு மட்டும் மறுக்காத" என்று கெஞ்சலாய் கூற

அந்த கொஞ்சமே கொஞ்சம் நேரத்துக்காக நான் காத்துட்டு இருப்பேன்" என்று தன்னவளுக்கு பிரியா விடை கொடுத்தான்.

காலம் உருண்டோட இவர்கள் காதலும் உறுதியாய் வளர்ந்து கொண்டே வந்தது. தன்னவளை வெவ்வேறு அழகிய வடிவங்களில் அலங்கரித்து அழகு பார்த்தான். அந்த வடிவங்களை தன் நெஞ்சினிலே பொரித்தும் வைத்தான்.

" ப்ருத்வி, நீ முன்ன மாதிரி இல்ல இப்போ. உன்ன சேர்ந்தவங்க உன்ன எக்ஸ்பிளாயிட் பண்றாங்க. அவங்களுக்காக நீ எவ்ளோ செய்ற. கொஞ்சம் கூட நன்றியே இல்லாம உன்ன சுரண்டுறாங்க. என்னால தாங்க முடில உன்ன இப்படி பார்க்க" வர்ஷா ப்ருத்வியின் நிலை கண்டு வலியில் துடித்தாள்.

யாரின் நலனுக்காக ப்ருத்வி தன்னையே அற்பணித்தானோ அவர்களே அவன் செல்வங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டு அவனை மேலும் அழிக்க முற்படுகிறார்கள்.

முன்பெல்லாம் அடிக்கடி நிகழும் ப்ருத்வி வர்ஷா சந்திப்புகளையும் தடை செய்து வருகிறார்கள்.

வர்ஷா எவ்வளோ எடுத்து சொல்லியும் ப்ருத்வி பொறுமையாக இருந்தான்.

"அவங்க தான் அறியமையில அப்படி செய்றாங்க. நானும் அவங்க மேல கோபப்பட்டு பழி வாங்கின அப்புறம் எனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்" என்று கேட்டு வர்ஷாவின் வாயை அடைத்து விடுவான்.

இப்போது ப்ருத்வியைத் தேடிச் சென்ற வர்ஷா அவனை காணாமல் தவித்தாள். பல முறை சென்றும் அவனை காண முடியவில்லை. என்ன ஆனான். எங்கு சென்றான் என்றும் அவளுக்கு விளங்கவில்லை. அவனை சேர்ந்தவர்களோ யாரும் இவளுக்கு ஒழுங்கான விவரம் கூறப் போவதில்லை.

ந்நிலையில் அவள் உடைந்து உணர்விழந்து இருந்த போது தான் ரவிக்குமார் ப்ருத்வி மரித்து விட்டிருக்க வேண்டும் என்றும் தன் மற்ற மாணவர்களில் ஒருவரை அவள் மணம் புரிந்து வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

"ஜெயந்த் உன்ன விரும்பினான் போல. தெரிய வந்துச்சு வர்ஷு. நீ ப்ருத்விய மட்டுமே பார்க்க போற வேற யாரையும் பார்க்கலைன்னு எனக்கு எப்போவோ தெரியும்.. எனக்கும் ப்ருத்வி மேல பிரியம் அதிகம். மத்த எல்லோரையும் விட அவன் தான் தன்னோட லட்சியத்த அடைந்து எனக்கு பெருமை சேர்த்திருக்கான். ஒரு வகையில் அந்த லட்சியத்துக்கு நீயும் துணையா இருந்திருக்க " என்று கூறியவர்

"அப்பா அது வந்து " என்றவளை கை அசைத்து நிறுத்தி

"நான் சொல்லி முடிக்கிறேன் நீ அப்புறம் சொல்லு" எனவும்

"சரிப்பா " என்றாள் வர்ஷா.

"நீ அவனோட சந்தோஷமா வாழணும்னு எனக்கும் விருப்பம் கண்ணா. ஆனா அவன சேர்ந்தவங்க அவனை அழிசுட்டாங்க.. அதை எந்த விதத்திலும் என்னாலும் தடுக்க முடில. நீ என் மகள். நீ வாழனும். அந்த விதத்தில் நான் சுயநலவாதி தான். ஜெயந்த் வேண்டாம்னா வேற யாரையும் சொல்லு. ஆனா இனியும் ப்ருத்விய தேடி நீ போய் எந்த பிரயோசனுமும் இல்லை வர்ஷு குட்டி" என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தார் ரவிக்குமார்.

ன் அன்னையிடம் சொல்லிவிட்டு மீண்டும் ப்ருத்வியை தேடி அலைந்தாள். இம்முறை எப்படியாவது அவனை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில் பைத்தியமாய் அலைந்தாள். ப்ருத்வியை அழித்து அவனுக்கு கிட்டத்தட்ட சமாதியே கட்டி விட்டிருந்த அவன் சுற்றம் இவளின் ஆக்ரோஷத்தில் மிரண்டு போனது.

ஒரு பெண்ணின் காதல் முதலும் முடிவுமாய் ஒன்றிலே உறுதியாய் இருக்கும் காதல். தன் காதலுக்காய் எதையும் தியாகம் செய்ய துணிபவள். தன்னவனுக்கு துன்பம் நேர்ந்தால் யாவரையும் அழித்து விடும் ஷக்தியாய் உருவெடுப்பாள்.

அந்நிலையில் வர்ஷா சீற்றம் கண்டு, வர்ஷாவை ப்ருத்வின் சுற்றத்தார் நிந்திக்க ப்ருத்வியால் பொறுமையை கட்டிக் காக்க முடியவில்லை. தன்னை எவ்வளவு துயரத்துக்கு உள்ளாக்கிய போதும் தாங்கிக் கொண்டிருந்தவன் தன்னவளை பழித்து பேசிய ஒரு சொல்லைத் தாங்க முடியாது சீற்றம் கொண்டான். எரிமலையாய் வெடித்தான். பூகம்பமாய் தாக்கினான். யாரின் நல்வாழ்வுக்காக இத்தனை காலம் உழைத்தானோ அவர்களை தானே அழித்தான்.

" போதும் ப்ருத்வி. எங்கள மன்னிச்சிடு . சுயநலமா நடந்துகிட்டோம். உன்ன அழிக்கவே துணிந்திட்டோம் . நீ நல்லா இருந்தா தான் நாங்களும் நல்லா இருப்போம்ன்னு தெரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டோம் . எங்கள மன்னிச்சிடு. உங்க காதலை புரிஞ்சுக்காம வர்ஷாவையும் பழித்தோம். நீயும் எங்கள மன்னிச்சிடும்மா. நீ வந்து கொண்டிருந்ததால தான் எங்களுக்கு செழிப்பான வாழ்க்கை கிடைச்சுதுன்னு தெரிஞ்சும் புத்தி கெட்டு உன்னையும் தடை பண்ணினோம் " ப்ருத்வின் சுற்றம் மனம் திருந்தி வேண்டினர்.

விக்குமார் இந்துமதி தம்பதி மகிழ, சௌமியன் பார்கவ் ஜெயந்த் ஜனார்த்தன் ஆயுஷ்மன் வாழ்த்த நிலைத்து வெற்றிக் கொண்டது ப்ருத்வி வர்ஷா காதல்.

பிரபஞ்சத்தின் முதல் காதல்...

காதலுக்கே அர்த்தமாய்; காதலின் ஆதி அந்தமாய்

சாகவரம் பெற்ற முதல் காதல்...

ப்ருத்விராஜன் மேகவர்ஷினியின் காவியக் காதல்.

குறிப்பு

சௌம்யன் - புதன்

பார்கவ் - வெள்ளி

ஜனார்த்தன் - வியாழன்

ஜெயந்த்- செவ்வாய்

ஆயுஷ்மன் - சனி

நவக்ரஹ ஸ்தோத்ரம் 108 நாமாவளியில் இருந்து எடுத்த பெயர்கள்)

சென்னை நகரின் கான்கிரீட் சிறைகளில் தன் காதலனான மண் அரசனை தேடி அலைந்த மழையவளின் தவிப்பு மனிதிலே தங்கிருந்த தருணம் முதல் காதல் என்ற தலைப்பு... அதுவே கதையென பெற்றது வடிவு.

This is entry #01 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.