(Reading time: 16 - 31 minutes)

 

ம்யுக்தா திகைத்து போயிருந்தாள்....!

அவள் ஏதோ உதாரணத்திற்கு சொல்ல போக, இவன் இப்படி சிக்ஸர் அடிக்க கிளம்புவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அவள் தம்பி சாம்ராட், மாநில அளவில் கிரிக்கெட் விளையாடுபவன்.... அவனுடைய வேக பந்து வீச்சு மிகவும் பிரசித்தி பெற்றது...

இவன் இனி எப்போது கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டு அவனின் பவுலிங்கை அடித்து துவைப்பது....

“சம்யூ.... சம்யூ...”

ப்ரியாவின் குரலில் யோசனையில் இருந்து விடுபட்டவள், எதிரில் திவாகரை காணாமல் கண்களால் தேடினாள்.

“யாரை தேடுற, திவாகரையா? அவர் அங்கே கவுதம் கூட பேசிட்டு இருக்கார் பாரு...”

ப்ரியா சுட்டி காட்டிய திசையில் இருந்த திவாகரை பார்த்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.

ன்னது சாம்ராட் ஓவர் முழுக்க சிக்ஸர் அடிக்க போறீயா? காமெடி செய்யாதேடா.... அவனோட ஒரு பாலை நீ சமாளிப்பீயான்னே சந்தேகம் தான்...”

“அதை பத்தி எல்லாம் நான் பார்த்துக்குறேன்.... நீ என் பேரை டீம்ல சேர்த்துக்கோ....”

“இல்லை திவா....”

“இங்கே பார் ஜெயிக்கனும்னு முடிவு செய்தாச்சு... பாரதிதாசன் என்ன சொல்லி இருக்கார்? மனசுக்கு பிடிச்ச பொண்ணு கடை கண் காட்டினால், பெரிய மலையை தூக்குறது கூட கடுகை தூக்குறது போலன்னு சொல்லி இருக்கார்.... என் சம்யுக்தாவிற்காக நான் ஆறு சிக்ஸர் கூடவா அடிக்க மாட்டேன்??”

“பாரதி தாசன் இன்னும் எவ்வளவோ சொல்லி இருக்கார்...’

“இங்கே பார் ரொம்ப யோசிச்சு குழம்ப கூடாது.... நம்ம டார்கட்டை பத்தி மட்டுமே யோசிக்கனும்....”

“அது சரி.... அப்போ நீ என்ன செய்ய போற?”

“முதல்ல பேட்டிங் கத்துக்க போறேன்....”

“ஹி ஹி ஹி.... நீ ஹீரோவும் இல்லாமல், ஜீரோவும் இல்லாமல், காமெடி பீஸ் ஆக போற....”

நாட்கள் நகர்ந்து செல்ல, திவாகர் – சம்யுக்தா காதலை நிர்ணயம் செய்யும் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் நாளும் வந்து சேர்ந்தது.

சம்யுக்தா நகங்களை கடித்தபடி அமர்ந்திருந்தாள்....

திவாகரை சீண்ட என்று அவள் சொன்னதை வைத்துக் கொண்டு அவன் இப்படி கிரிக்கெட் விளையாட போவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும் அவளுக்காக தான் இதை செய்கிறான் என்பதில் பெருமையாகவும் இருந்தது....

கூடவே ஒருவேளை அவன் சொதப்பி விட்டால் என்ன செய்வது என்று கவலையாகவும் இருந்தது.

“சின்ன குழந்தை மாதிரி பீகேவ் செய்யாமல் முதல்ல கையை வாயில இருந்து எடு சம்யூ...” என்றபடி ப்ரியா அவள் அருகே அமர்ந்தாள்.

“ஒரே டென்ஷனா இருக்கு பிரியா...”

“ஆமாம் இது பெரிய வேர்ல்ட் கப் மேட்ச்.... சும்மா ஓவரா பிலிம் காட்டாதே.... ஒழுங்கு மரியாதையா ஐ லவ் யூ சொன்னால், ஐ லவ் யூ டூன்னு சொல்லாமல், திவாகரை சீண்டி விட்டுட்டு, இப்போ வந்து டென்ஷனா இருக்குனு சொன்னால் எப்படி....”

“நானா சீண்டினேன்??? நீங்க எல்லோரும் தான் காரணம்.... எப்போ பார் திவாவை பழம்ன்னு சொல்லி சொல்லி கிண்டல் செய்வீங்க.... அவரோட பொட்டன்ஷியலை உங்களுக்கு எல்லாம் காட்டனும்னு நினைச்சேன்....”

“நல்லா நினைச்ச.... ஆனால் ஒன்னு சொல்லனும்... திவாகர் தவிர வேற யாரும் அவரோட ஸ்டேடஸ்க்கு இப்படி காதலுக்காக கிரிக்கெட் விளையாட எல்லாம் போக மாட்டாங்க...”

“எனக்கு தெரியும் பிரியா.... ஹீ இஸ் சச் அ வண்டர்புல் பெர்சன்....”

“சரிங்க மேடம்.... உங்க லவ்ஸ் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.... இப்போ மேட்சை பாருங்க....”

கிரவுன்டின் பக்கம் பார்வையை திருப்பிய சம்யுக்தாவின் விரல்கள் அவளையும் அறியாமல் அவளின் பற்களின் அருகே சென்றது...

ந்த இருபது ஓவர் மேட்ச் பெரிதாக பரபரப்பு இல்லாமலே தொடங்கியது....

திவாகர் விளையாடிய “சூப்பர் ஸ்மார்ட்ஸ்” டீம் முதலில் பேட் செய்ய தொடங்கியது...

முதல் விக்கெட் வீழ்ந்து, திவாகர் பேட் செய்ய களம் இறங்கிய போது, சம்யுக்தாவிற்கு இதயமே நின்று விடும் போல் இருந்தது....

இப்போதே போய் அவனை தடுத்து நிறுத்தி இந்த விஷ பரீட்சை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது....

ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம்...

தொடர்ந்து சில நிமிடங்கள் பெரிதாக எதுவும் நிகழாமல் சென்றது...

சாம்ராட் பவுல் செய்ய வருவதை பார்த்து சம்யுதாவிற்கு மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது....

திவாகர் சாம்ராட்டின் பவுலிங்கை சமாளிக்க பெரிதும் பாடு பட வேண்டி இருந்தது....

சம்யுக்தா கண்களை மூடிக் கொண்டாள்....

சாம்ராட்டிற்கு இருப்பது இன்னும் ஒரே ஒரு ஓவர்... இந்த ஓவரில் ஒரு ரன் எடுக்க தடுமாறுபவன் எங்கிருந்து ஆறு சிக்சர் அடிப்பது...

அவளுடை பயத்தை பற்றி கவலை படாமல் மணித்துளிகள் சென்றது...

சாம்ராட் அடுத்த ஓவர் வீச வந்தான்...

சம்யுக்தாவின் விரல்களை மீண்டும் பற்கள் பதம் பார்த்தன....

இந்தமுறை திவாகர் ‘பூஸ்ட்’ குடித்தவனை போல எனர்ஜியுடன் காணப் பட்டான்.

முதல் மூன்று பந்துகள் சிக்ஸர் அடித்து தூள் கிளப்பினான்...

நான்காவது பாலை அடிக்க அவன் பேட்டை வீசிய வீச்சுக்கு அது எங்கேயோ சென்றிருக்க வேண்டும் ஆனால் பால் பேட்டை மிஸ் செய்ததால் ரன் இல்லை....!

சம்யுக்தாவிற்கு ஏமாற்றத்தில் அழுகையே வந்து விடும் போல் இருந்தது....!

என்ன இது இந்த வயதில் அழுகிறோம் என்று அவள் தன்னை சமாளிக்க முயல, பிரியா அவளை உலுக்கி,

“ஹேய் சம்யூ, அழாதேடி அம்பயர் அதை வைட்ன்னு சொல்லிட்டார்... வைட்ல எப்படி சிக்ஸர் அடிக்க முடியும்?” என்றாள்.

எல்லா தெய்வங்களுக்கும் நன்றி சொல்லி விட்டு மீண்டும் படபடக்கும் இதயத்துடன் கிரவுண்டை பார்த்தாள்....

சரியாக அதே வினாடி திவாகரின் பார்வையும் அவள் பக்கம் விழுந்தது....

கவலை படாதே.... என்பதை போல் அவளை பார்த்து புன்னகைத்தவன், அடுத்த பந்தை சந்திக்க தயாராக தொடங்கினான்....

அடுத்த மூன்று பந்துகளும் சிக்ஸர் தான் என்று சொல்லவும் வேண்டுமா???

தோழிக்காக என்றாலும் படபடப்புடனே மேட்சை பார்த்துக் கொண்டிருந்த பிரியா சந்தோஷத்துடன் சம்யுக்தா பக்கம் திரும்பினாள்...! ஆனால் அவள் அங்கே இல்லை....

அதற்குள் எங்கே போய் விட்டாள் என அவள் திகைக்கும் போதே, அங்கிருந்த சின்ன கூட்டத்தில் எழுந்த சலசலப்பு புரியாமல் திரும்பி பார்த்தாள்....

அங்கே.... கிரவுண்டின் நடுவில் சம்யுக்தா திவாகரை கட்டி பிடித்து நின்றுக் கொண்டிருந்தாள்....

திவாகருக்கும் சந்தோஷம் என்றாலும், கொஞ்சம் சங்கோஜமாகவும் இருந்தது....

“சம்யுக்தா செல்லம் எல்லோரும் பார்க்குறாங்க....” என்றான் மெல்லிய குரலில்...

“பார்க்கட்டும்... என் ஹீரோ... என் திவா.... நான் கட்டி பிடிப்பேன்... என்னை யார் கேள்வி கேட்குறது....” என்றாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.