(Reading time: 16 - 31 minutes)

 

தன் பின் வந்த நாட்களில் திவாகர், சம்யுக்தா திருமண பேச்சு தொடங்கப்பட்டு, ஒரு மாதத்தில் திருமணம் என நாளும் குறிக்க பட்டது...

திவாகர் தனி லோகத்தில் இருந்தான் என்று சொல்லவும் வேண்டுமா...?

சம்யுக்தாவுடன் பேசும் நேரம் போக அவளுக்காக என ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து வாங்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது....

அன்று கவுதமுடன் காரில் கிளம்பியவன், சந்தோஷத்துடன் விசிலடித்துக் கொண்டிருந்தான்.

“என்னால நம்பவே முடியலைடா.... அந்த அளவுக்காடா அவளை லவ் செய்ற? என்னால அந்த சாம்ராட் பாலை தடுத்து விளையாட கூட முடியாது.... இப்படி சிக்சர் மழை அடிச்சுட்ட???”

“கவுதம் நீ என் பெஸ்ட் பிரெண்ட்... உன் கிட்ட நான் பொய் சொல்ல விரும்பலை.... இன்னும் கொஞ்சம் நேரம் அமைதியா வா.... உனக்கே விஷயம் தெரியும்....”

“என்ன பெருசா சஸ்பென்ஸ் வைக்குற?”

‘இன்னும் கொஞ்சம் நேரத்துல தெரிஞ்சிடும்டா....”

சொன்னது போலவே சிறிது நேரத்தில் காரை ஒரு ஓரமாக நிறுத்திய திவாகர், கவுதமை இறங்கி வர சொல்லி விட்டு, அவர்களுக்கு சற்று  முன்னே நிறுத்தி இருந்த இன்னொரு காரின் அருகே சென்றான்...

அவனை கவனித்து விட்டு காரில் இருந்து இறங்கினான் சாம்ராட்!

“சாம்ராட், நீ என்ன செய்ற இங்கே? இரண்டு பேரும் சொந்தக்காரங்க ஆக போறீங்க, இங்கே எதுக்கு ரகசியமா சந்திக்குறீங்க???”

கவுதம் கேள்வி மேல் கேள்வி கேட்க, சாம்ராட் அவனை சந்தேகமாக பார்த்தான்.

“இவரை எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்தீங்க சீனியர்?”

“கவுதம் என் பெஸ்ட் பிரெண்ட், அவனுக்கு உண்மை தெரிஞ்சா ஒண்ணுமில்லை ஜூனியர்... இந்தா ஒரு லட்சம் ரூபாய்.... உனக்கு ஒரு பாலுக்கு பிஃப்டீன் தவுசண்ட் வச்சு 90000.... அந்த அம்பயருக்கு பத்தாயிரம்....”

“நான் அம்பயரையும் நம்ம டீல்ல சேர்த்துக்கலாம்னு சொன்னது எவ்வளவு நல்லதா போச்சு பார்த்தீங்களா சீனியர்.... அவர் மட்டும் அந்த பாலை வைட் சிக்னல் செய்திருக்காட்டி எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும்....”

“நீ ரொம்ப ஸ்மார்ட் ஜூனியர்....”

அவர்களின் பேச்சை கேட்டு திகைத்து நின்றிருந்த கவுதம்,

“அட பாவிங்களா இங்கேயும் பிக்ஸிங்கா???” என்றான்.

“பிக்ஸிங் எல்லாம் இல்லை கவுதம் சார். எங்களுக்கு ம்யூச்சுவல் நன்மை....” என்றான் சாம்ராட்

“அப்படி என்ன நன்மை???”

“எனக்கு மேலே படிக்க பணம் வேணும்.... மத்தபடியும் என் டாலி வேற எனக்காக இரண்டு வருஷமா வெயிட் செய்துட்டு இருக்கா.... எங்க அக்காக்கு இது ஏதாவது புரிஞ்சா தானே? ரூட்டை க்ளியர் செய்யாமல் தொல்லை செய்துட்டு இருந்தா....”

“அடப்பாவி!!! நல்ல தம்பிடா நீ....”

“என்ன கவுதம் சார், நான் ஏதோ எங்க அக்காக்கு கெட்டது செய்துட்ட மாதிரி சொல்றீங்க? சீனியர் சார் போல எங்க அக்காக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பாரா?”

“இல்லை தம்பி ஒத்துக்குறேன்....” என்ற கவுதம், நண்பனை பார்த்து,

“நீ ஸ்மார்ட் தான்டா.... ஆனால் இது உன் ஹீரோயினுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சீயா???” என்றான்.

“விடுடா..... அவ தானே லைப்ல த்ரில் வேணும்னு சொன்னது.... சாம்ராட்டோட பவுலிங்கையே சமாளிச்சுட்டோம், இதை சமாளிக்க மாட்டோமா???”

“அதானே....!”

நாட்கள் வேகமாக ஓட, திவாகர் – சம்யுக்தா கல்யாண நாளும் வந்து சேர்ந்தது...

மணப்பெண் அலங்காரத்தில் அழகு மின்ன அவனருகே வந்து அமர்ந்தவளை கண்களை இமைக்காமல் பார்த்திருந்தான் திவாகர்....

அவனை முழங்கையால் மெல்ல இடித்தவள்,

“இப்படியே பார்த்துட்டே இருந்தா எப்படி? எனக்கு என்னவோ மாதிரி இருக்கு... கண்ணை திருப்ப போறீங்களா இல்லை கண்ணை நோண்டவா?” என்று மெல்ல கிசுகிசுத்தாள்.

“செல்லம்ஸ்.... இப்போ மட்டும் தானே உன்னை பார்த்து பார்த்து ரசிக்க போறேன்...”

‘ஏன்? கல்யாணம் முடிஞ்சா ரசிக்க கூடாதா???”

“அப்போ இப்படி சும்மா தள்ளி நின்னு பார்த்து ரசிக்க வேண்டாமே.... வேற....”

அவன் மேலே பேசாத வண்ணம் மெல்ல அவன் கையில் கிள்ளியவள்,

“போதும்... போதும்.... முதல்ல தாலியை கட்டுங்க” என்றாள்....

இப்படி இருவரும் செல்லம் கொஞ்சி, கொஞ்சி ஒரு வழியாக அவன் அவளுக்கு தாலியை கட்ட திருமணம் இனிதே நடந்தது....

தொடர்ந்து மற்ற சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்தன....

பின் நண்பர்கள், உறவினர்கள் என வரிசையாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்....

இவர்களின் நடுவே சாம்ராட்டும் வந்தான்....

‘டேய் நீ என்ன இப்போ வர்ற?”

“சும்மா தான்க்கா.... கங்கிராட்ஸ் சீனியர்....”

“தேங்க்ஸ் ஜூனியர்....”

“என் அக்காவை கல்யாணம் செய்துக்க இப்போ காட்டின இன்ட்ரஸ்ட்டை போலவே எப்போதும் அவளை பார்த்துக்கோங்க சீனியர்....”

இவன் என்ன வித்தியாசமாக பேசுகிறான்....! எதையாவது உளறி வைக்க போகிறான்....!

யோசனையுடனே,

“நீ கவலை படாதே ஜூனியர்.... உங்க அக்காவை நான் சூப்பரா பார்த்துப்பேன்.... நீ அமைதியா இருந்தாலே போதும்...!” என்றான் திவாகர்.

“நான் அமைதியா இருக்கேன்..... எதையுமே சொல்ல மாட்டேன்.... இப்போ நீங்க எனக்கு காசு கொடுத்து அல்வா மாதிரி பவுல் செய்ய சொன்னதை இவக் கிட்ட சொல்வேனா???”

சம்யுக்தாவின் கண்கள் நம்ப முடியாமல் விரிந்தன....!

சாம்ராட் பேசிக் கொண்டே போனான்...

“....இல்லை உங்களுக்கு சிக்சர் அடிக்குற மாதிரி ஈசியா பவுல் செய்ய சொல்லி எதுக்கும் என் கிட்ட கெஞ்சி இராத அக்கா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினதை உங்க கிட்ட சொல்வேனா....”

இப்போது திவாகரின் கண்களும் விரிந்தன....

மணமக்கள் இருவரும் ஒருவரோ ஒருவர் பார்த்துக் கொண்டு, அப்படியா என பார்வையால் கேட்டுக் கொண்டனர்....

‘இதை ஏன் நான் இப்போவே சொல்றேன்னா, கல்யாணம் பொய்ல ஸ்டார்ட் ஆக கூடாது... இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க, அப்புறம் ஏன் என்னை மாதிரி ஒரு மிடில் மேனை உள்ளே வர விடுறீங்க??? நாம வாழ்க்கை துணை கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைச்சு வச்சிருக்கோம்ங்கற பீல் இல்லாமல் இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்க்கையை ஸ்டார்ட் செய்ங்க....”

சாம்ராட் பேசிக் கொண்டே போக.... அப்போதும் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் மணமக்கள்....

மெல்ல சம்யுக்தாவின் இதழ்களில் புன்னகை தோன்றியது....

அது மெல்ல மெல்ல திவாகரிடமும் தொற்றிக் கொண்டது....

“பிராடு....” என முனுமுனுத்தாள் அவள்....

“நீ மட்டும் என்னவாம்.... த்ரில், ஹீரோ அது இதுன்னு இம்சை செய்யும் ராட்சஸி” என்று செல்லம் கொஞ்சினான் அவன்....

அவள் மெல்ல சிரிக்க, அவனும் சிரித்தான்...

இருவரும் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தனர்....

அதுவரை பேச்சு சத்தத்தில் சலசலத்துக் கொண்டிருந்த அந்த மண்டபம், அமைதியாகி போனது....

பின்னே, மணமக்கள் இருவரும் பைத்தியம் போல ஒருவரை ஒருவர் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தால் எல்லோரும் என்ன செய்வார்கள்...

அது எதை பற்றியும் கவலை படாமல் தங்களுக்குள் ஆழ்ந்திருந்த மணமக்கள் இருவரும், ஒருவர் மீதிருந்த அன்பு பல் மடங்காகி இருக்க மற்றவர்களை மறந்து சிரித்துக் கொண்டே இருந்தனர்...

“செல்லம், அன்னைக்கு கிரவுண்டுல போல இப்போவும் கட்டி பிடிக்கலாமுல....” ஆசை பொங்க கேட்டான் அவன்....

“அப்போ, அவ்வளோ வெட்க பட்டுட்டு இப்போ கேட்குறதை பாரு...” என அவனை சீண்டினாள் அவள்...

இந்த காதல், சீண்டல், ஆசை, சிரிப்பு எல்லாம் இவர்களின் வாழ்வில் என்றென்றும் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்க போகிறது....

…. And they lived happily ever after…

This is (guest) entry #06 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.