(Reading time: 20 - 40 minutes)

"ன்னை மணக்க உனக்கு என்ன தகுதியிருக்கு...நீங்களெல்லாம் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்க ஆசைப்படுவீர்கள்... பொழுதுபோக்குகாகவே உன்னுடன் பழகினேன்... என் வீட்டில் வேலை செய்பவரின் பெண்ணை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது..." என்ற கொடுமையான வார்த்தைகளால் இவளை நோகடித்தான், அவனின் தாயே அவனை அதட்டினார்... உடைந்து போன மனதோடு இவள் வீடு வந்து சேர்ந்தாள்.

அதன்பிறகு அங்கு இருக்கப் பிடிக்காமல் அவர்கள் வேறு ஊருக்கு சென்றனர், ஒரு வருடம் ஓடியது.. அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் பாண்டியன் என்பவன் குடி வந்தான்.. அவன் இவளிடமும் இவள் குடும்பத்தாரிடமும் நட்பாகவே பழகினான், சிறிது காலம் சென்ற பின் இவளை மணக்க விரும்புவதாக கூறினான், இவள் காதல், கல்யாணம் பற்றி யோசிக்காத நிலையில் இவளின் தாய், தந்தை தான் இவளை வற்புறுத்தினர், இவள் விரும்பிய வாழ்க்கை தான் கிடைக்காமல் போனது... பெற்றவர்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டால் அந்த வாழ்க்கையாவது நன்றாக இருக்கும், அவனை திருமணத்திற்கு பிறகு நேசித்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.

இவள் விருப்பத்தை அவனிடம் சொல்ல சென்ற போது தான் அவனைப் பற்றி இவளுக்கு தெரிந்தது, அவன் அலைபேசியில் யாருடனோ பேசுவதை கேட்டாள்... இவளை திருமணம் செய்து கொண்டு நன்றாக அனுபவித்து விட்டு பிறகு மும்பையில் இவளை விற்று விடுவதுதான் அவனது திட்டம்... அதன்பிறகு அவனிடம் இருந்து இவர்கள் வெகுதூரம் விலகிவிட்டனர்.

இவளுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..?? இந்த நிலையில் கதிரவனை பற்றிய செய்தி் இப்போது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் தாய்க்கு தெரிந்தவர் என்பதால் அவள் மூலம் இவள் காதுக்கு வந்து கொண்டு தான் இருந்தது... இவளை புறகணித்த பின் சில மாதங்களில் அவனுக்கு ஒரு பணக்கார பெண்ணோடு திருமணம், உடனே குழந்தை பிறகு அவள் வேறொருவனோடு சென்று விட்டாள்.

 இவளின் இந்த நிலைக்கு அவன் தான் காரணம்.. ஆனால் அவன் மனைவியை பற்றிய செய்தியை இவள் கேள்விப்பட்டும் இவளால் சந்தோஷப் பட முடியவில்லை.

ன்னும் ஒரு வருடம் சென்றது... மனதில் பட்ட காயங்கள் முழுமையாக ஆறவில்லை என்றாலும் கொஞ்சம் வலிக்காமல் இருந்தது, இந்நிலையில் இவள் அக்காவின் புகுந்த வீட்டில் இருந்து வந்து அக்காவின் மச்சினனுக்கு இவளை பெண் கேட்டனர், அக்காவுக்கே சரியாக சீர் செய்யவில்லை என்று குறை கூறும் அவள் புகுந்த வீட்டார் இப்போது அதை கூட செய்ய கூட முடியாமல் இருக்கும் இந்த நிலைமையில் இவளை பெண் கேட்டது அதிசயம் தான்... ஏற்கனவே பட்ட காயங்கள் ஆறாத நிலையில் புதிய காயத்தை இவள் ஏற்க தயாரில்லை.

ஆனால் இவளை பெற்றவர்களுக்கு மகளின் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்று தானே ஆசை... இவளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர், முதல் காதல்... அந்த திருமண கனவுதான் இவளுக்கு இனித்தது.. அதன் பிறகு திருமணம் என்ற போது திருமணம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது, ஆனால் இந்த திருமணத்தில் காதலை கட்டாயமாக்கி கொள்ளத்தான் வேண்டும்... அவளும் சம்மதித்தாள்.

அவர்கள் பெண் கேட்க... இவள் சம்மதிக்க... வேகமாக வேலைகள் நடந்து, எளிதான முறையில் திருமணமும் நடந்தது, திருமணம் நடந்த பின் மறு வீடு சடங்கு முறையில் பெண் வீட்டுக்கு மணமக்கள் செல்ல வேண்டும், இவள் வீட்டிற்கு சென்ற பின் வெளியில் சென்று வருவதாக சொல்லிச் சென்றவன் வரவே இல்லை..

ஆம் அவன் மறு வீட்டிற்கு தான் சென்றான்... அவனும் அவன் முதல் மனைவியும் வாழப்போகும் வீட்டிற்கு, அதன்பிறகு தான் விவரங்கள் வெளியே வந்தது, அவன் வேற்று மதப் பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டு வந்ததை அவன் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை, அவளை துரத்தி விட்டு அவனை வீட்டில் சிறை வைத்து இவளுக்கு மணம் செய்துவிட்டார்கள், அவள் அக்காவையும் மிரட்டி விஷயத்தை வெளியே வர விடவில்லை.

அவனுக்கு இந்த திருமணத்தால் தான் விடுதலை என்று நன்றாக காய் நகர்த்திவிட்டான், கிடைத்த சந்தர்ப்பத்தில் வெளியேறி விட்டான், இவளுக்கு ஏனோ அவன் மீது கோபம் வரவில்லை, அவன் காதலாவது ஜெயித்ததே..!! படிக்கும் வயதில் படித்து முன்னேறாமல் காதல் செய்து கொண்டிருந்ததற்கு இந்த தண்டனைகள் இவளுக்கு தேவைதான் என்று தான் இவள் நினைத்தாள்.

ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது இவளின் தாய் தான்.. மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் அவர் இதயம்  பலகீனமாகிவிட்டது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறி விட்டார், ஆனால் பணத்திற்கு எங்கே போவது..

ந்த நிலையில் தான் கதிரவனின் தாய் பார்வதி இவர்களை பார்க்க வந்தார், தன் மகனை இரண்டாவதாக இவள் திருமணம் செய்துக் கொண்டால், இவள் தாயின் மருத்துவ செலவையும், அதன் பிறகு இவள் பெற்றோர் நல்லபடியாக வாழவும் வழி செய்வதாக கூறினார், கதிரவனின் மேல் கோபம் இருந்தாலும் பார்வதியின் மேல் இவளுக்கு எப்போதும் மதிப்பு உண்டு, ஆனால் அது இப்போது உடைந்து விட்டது,

இவள் அவனை மணக்க மறுத்தாள், ஆனால் இவளின் தந்தையோ... தன் மனைவியை காப்பாற்ற இதை விட வேறு வழியில்லை என்பதால் இவளிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினார், தன் தாயை காப்பாற்ற நரகத்திற்கு செல்வதற்கு இவள் முடிவு செய்துவிட்டாள், அதன்பிறகு இவளுக்கு நடந்த திருமணத்தை முறைப்படி ரத்து செய்துவிட்டு கதிரவனுடன் திருமணம் செய்துவைத்தார்கள்.

நடந்த விஷயங்களை நினைத்துக் கொண்டிருந்தால் மனதில் பாரம் ஏறிக் கொண்டு தான் இருக்கிறது, அதனால் அதை ஒதுக்கி விட்டு தூங்க முயற்சித்தாள் அமுதா.

ண்ணன், கதிரவனின் மூன்று வயது மகன், மழலைப் பேச்சு, துறு துறுப்பு,  அழகான முகம் ஆகியவற்றால் அனைவரையும் வசியப்படுத்தி விடுவான், இவள் புதியவள் என்பதால் இவளிடம் ஒதுக்கம் காட்டினான், கதிரவனின் மேல் உள்ள வெறுப்போ... பணத்திற்காக தானே கதிரவனை மணந்தோம்... அதனால் தான் குழந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என்ற சலிப்போ... இல்லாமல் முழு மனதுடன் கண்ணனை ஏற்று கொண்டாள் அமுதா.

சில நாட்கள் கடந்தது, கண்ணனின் அன்பை பெறுவதிலேயே இவள் நேரத்தை செலவு செய்தாள், கதிரவனிடமும் அவன் அன்னையிடமும் இவள் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தாள், கதிரவனும் இவளிடம் அப்படித்தான் இருந்தான். இந்நிலையில் பார்வதி இவளிடம் வந்தார், சாவிக்கொத்தை அமுதாவிடம் கொடுத்து... வீட்டு பொறுப்பையும், தன் மகனையும், பேரனையும் பார்த்து கொள்ளும் பொறுப்பையும் இவளிடம் ஒப்படைத்து விட்டு தோழிகளுடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதாக கூறினார், அவர் மீது இவளுக்கு கோபம் இருந்தாலும் இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தாள்.

மூன்று மாதம் கடந்திருந்தது, இப்போதெல்லாம் கண்ணன் "அம்மா அம்மா என்று அமுதாவின் பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறான். வீட்டை நிர்வகிப்பதும், கண்ணனை கவனிப்பதிலுமே இவள் பொழுது சென்று விடுகிறது, அமுதா, கதிரவனை பொறுத்த வரை வீட்டு பொறுப்பு இவளிடம் இருப்பதால் பண விஷயமாகவும், கண்ணனின் விஷயமாகவும் பேசும் அளவுக்கு முன்னேற்றம் வந்திருக்கிறது.

ஐந்து மாதங்கள் கடந்திருந்தது, இப்போதெல்லாம் கதிரவன் சோர்வாக இருப்பதாக அமுதாவிற்கு தோன்றுகிறது, வேலையில் இருந்து வந்ததும் கண்ணனுடன் பொழுதை கழிப்பதும்... இரவில் அவனை பக்கத்தில் படுக்க வைத்து தூங்குவதுமே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.