(Reading time: 18 - 35 minutes)

முதல் காதல் என்றாலே , அழகு இனிமை மட்டுமே நமது கண்களில் தெரிகிறது .. ஆனால் முதல் காதலின் வலியும் , அது தருகின்ற படிப்பினையும் பலரின் வாழ்வின் திருப்புமுனையாகிறது .. இந்த முதல் காதல் சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர் சிலர் .. மூழ்கி ஆழம் கண்டு திரும்பி போனவர் சிலர் .. மூழ்கி மூச்சு திணறி கை கொடுக்க பட்டு மீண்டும் காதலில் விழுந்தவரே பலர் ..

முதல் காதலில் தோல்வியுற்று அது தரும் பயத்தையும் சோகத்தையும் சரியாய் கையாளாவிட்டால், உளவியல் பிரச்சனைகள்  வரவாய்ப்புகள் உள்ளது ..இங்கு சமீராவின் நிலையம் அதுவே .. கோகுலின் வார்த்தையால் காயம் அடைந்தவள் , காதல் என்றால் இப்படித்தான் என்ற முடிவிற்கு வந்தாள் .. இந்த நம்பிக்கையின்மையை உளவியல் மொழியில்  “"Pistanthrophobia” எனலாம் .. ஒரு உளவியல் மருத்துவானான கிருஷ்ணனுக்கு இது கூடவா தெரியாது ? இதோ இன்று அந்த பயத்தையும் போக்கி, உண்மையான காதலை அவளுக்கு உணர்த்தி தனது முதல் காதலில்  வெற்றியும் கண்டான் சஞ்சய் கிஷன் ..

" மீரூ பசிக்கிறது டா" என்று குரல் கொடுத்து மனைவியின் சிந்தனைக்கு முற்றுபுள்ளி வைத்தான் கிருஷ்ணன் ..

" அச்சோ .. சாரி டா .. பத்து நிமிஷத்துல ரெடி பண்ணுறேன் " என்று நடக்க எழுந்தவளை தூக்கி சுற்றியவன்

" எல்லாம் சமைச்சாச்சு .. நீ வந்து ஊட்டி விட்டா போதும் "என்று கண்ணடித்தான் ..

" திருடா ... " என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு முதல் முறையாய்

" ஐ லவ் யு கிருஷ்ணா .. ஐ லவ் யூ சோ சோ சோ மச் " என்று அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள் .. முத்தத்தில் தொடங்கிய காதல் யுத்தங்களை சந்திக்காமல் இனிதாய் தொடர வாழ்த்துவோம் ..

ஹாய்  நண்பர்களே .. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு கதை அனுப்புவோம்னு நினைச்சேன் .. ஆனா சமீராவும் கிஷனும் என்னை சும்மா விடலை .. அதான் முதல் என்ட்ரீ கொடுத்தாச்சு ..

முதல் காதல் என்றாலே மூணு படம் தனுஷ் சுருதி ஹாசன் அளவுக்கு சந்தோஷமான வாழ்க்கையை தான் கற்பனை பண்ணுறோம் .. ஆனா முதல் காதல் தான் முதல் படிப்பினை , முதல் வலி, முதல் ஏமாற்றமாய் அமைந்துவிடுகிறது .. அதை நினைவூட்டனும் , மேலும் அப்படி முதல் காதலை கடந்து மகிழ்ச்சியாய் இருக்கும் நண்பர்களையும் ஊகுவிக்கனும்னு எழுதிய கதைதான் இது ..

"Pistanthrophobia" பற்றி கூறிய நண்பன் ஷக்திக்கும்  என் ஸ்பெஷல் நன்றிகள் ..

இது முடிவல்ல ஆரம்பம் ..ஹா ஹா ..மேலும் சில கதைகளுடன் உங்களை சந்திக்கிறேன் .. பாய் ..

This is entry #11 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.