(Reading time: 18 - 35 minutes)

கோகுல்.. காலேஜில் மிகவும் பிரபலமான மாணவன் .. இசையில் அவனுக்கு ஆர்வம் அதிகம் .. அவர்கள் கல்லூரியின்  இசைக்குழுவிற்கு அவன்தான் தலைவன் .. அவனுக்கு துணையாகவும் தோழியாகவும் இருந்தவள்தான் சமீரா .. ஒரே போன்ற சிந்தனை கொண்டதாலோ என்னவோ அவனிடம் பேசுவதற்கு தயங்கவே மாட்டாள்  சமீரா .. இளம் வயதின் வேகமும் , நண்பர்களின் தூண்டுதலும் அந்த புரிதலை தான் காதல் என்று உசுப்பிவிட, ஒருநாள் நண்பர்கள் அனைவரின் முன்னிலையிலும் மண்டியிட்டு தனது காதலை சொன்னான்  கோகுல் .. சமீராவும் பெருமையுடனேயே அதை ஏற்றுகொண்டாள் ..

நாட்கள் முன்னேறி செல்ல , இருவருக்கான அடிப்படை எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டுதான் போனது .. சாதாரண பேச்சுக்கள் கூட சண்டையிலே முடிந்தது ..

" கோகுல் என்ன பண்ணுற ?"

" கிரிகெட் .. ஏன் என்ன விஷயம் "

"ஒன்னும் இல்ல சும்மா கூப்டேன் .. "

"சரி .. அப்பறம் பேசலாம் "

" சோ, என்கிட்டே பேச உனக்கு வேற எதுவும் இல்லையா ?"

" அதான் கிரிக்கெட் விளையாடுறேன்னு சொல்லுறேன்ல "

" சரி  ..பாய் " என்று போனை வைத்து விட்டாள்  அவள் .. மீண்டும் அவனே அழைத்தான்..

" ஹே உனக்கு என்னதான் பிரச்சனை இப்போ ?"

" ஒன்னும் இல்ல .. நீ போயி விளையாடு .. என்னைவிட அதுதானே முக்கியம் "

" உனக்கு கூடத்தான் புக்ஸ் படிக்க பிடிக்கும் .. எனக்காக அதை விடுன்னா  விட்டிருவியா ?"

" ஏன் கத்துற ? சண்டை போடத்தான் போன் பண்ணியா ?"

" ஓ  நான் பேசினா உனக்கு சண்டை போடுற மாதிரி இருக்கா "

" நீ ஒழுங்கா பேசினா நான் ஏன் அப்படி சொல்ல போறேன் "

" எல்லாத்தையும் என் தலையிலேயே கொட்டுற நீ  "

" சரி என் மேல தான் தப்பு .. போதுமா ? மன்னிச்சிரு ... இபோ ஆளை விடு "

" ஆளை விடுன்னா  ? "

" .."

" விடுன்னு என்ன சொல்ல வர்ற ?"

" அப்பறமா பேசலாம் கோகுல் "

" இல்ல இப்போவே சொல்லு "

"விடு அப்பறம் பேசுவோம் "

" உனக்கு நான் போர் அடிச்சு போயிட்டேனா சமீரா ? ப்ரேக் அப் பண்ணிப்போம் " வார்த்தைகளை யோசிக்காமல் பேசினான் அவன் ..

" வாட் டூ யூ மீன் ? ஹொவ் டெர்  யூ ? போர் அடிச்சு போச்சான்னு கேக்குற  ? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது  கோகுல் ?"

" எல்லாம் தெரியும் டீ .. வெளில கூப்பிட்டா  வரமாட்ட .. போன் பண்ணா 10 மணிக்கு மேல பேச முடியாதுன்னு ரூல்ஸ் போடுவ .. ஒரு ஐ லவ் யூ சொல்ல ஓவரா சீன் காட்டுவ .. ப்ரண்டா  இருந்தப்போ மட்டும் என்கிட்டே மணிகணக்கா பேசுவியே " என்று குற்றபத்திரிக்கை வாசித்தான் அவன் ..

" கடைசியில நீ இவ்வளவு தானா கோகுல் ? எத்தனை முறை சொல்லி இருக்கேன் , நம்ம காதலை வீட்டுல மறைக்க கஷ்டமா இருக்கு .. சோ கொஞ்சம் அளவா பேசுவோம்னு ? எனக்கு நீ  எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தானே , என் வீட்டுல உள்ளவங்க என்மேல வெச்சு இருக்கும் நம்பிக்கையும் முக்கியம் ? நாம அதிகம் பேசினா , அவங்க கேள்வி கேட்கும்போது நான் தேவை இல்லாமல் பொய் சொல்ல வேண்டிவரும் ..அதுக்காக தானே அளவாய்  பேசுவோம்னு சொன்னேன் "

" இவ்வளவு பேசுறவ என்னை காதலிக்காம இருந்திருக்கணும் " என்று மீண்டும் அவன் வார்த்தையை விட இந்த முறை  கோபத்தில் குரல் உயர்த்துவது அவளது முறையானது ..

" ஷட் அப் ! நீ தான் என்கிட்ட எல்லாரு முன்னாடியும் ப்ரொபோஸ் பண்ணின கோகுல் ! நான் இல்ல .. உன் மானத்தை காப்பாற்றி நான்தான் சரின்னு சொன்னேன் " என்று விட்டாள் ..

" வாட் மானத்தை காப்பத்தனும்னு  சொன்னியா ? இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா சமீரா ?"

" காதலிச்ச பொண்ணுகிட்ட , நான் உனக்கு போர் அடிச்சு போயிட்டேனான்னு கேட்க உனக்கு அசிங்கமா இல்லையா ? "

" சோ நான் ப்ரொபோஸ் பண்ணதுக்காகத்தான்  நீ சரி சொன்ன ? அப்படிதானே "

" கோகுல் , நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்குற .. "

" இல்ல இல்ல .. இப்போதான் சரியா புரியுது ! மனசுல பெரிய ரதின்னு நெனப்பா உனக்கு ? எவ்வளவு இறுமாப்பு இருந்தா இப்படி பேசுவ நீ ? காதல் என்ன பிட்சையா சமீரா ? அப்படி நீயெல்லாம் பிச்சை போட்டு எதை எடுத்துக்குற அளவுக்கு கோகுல் தரம் கேட்டு போகல "

" வார்த்தையை ரொம்ப கொட்டுற கோகுல் "

" பரவாயில்ல .. இனிமே என்ன இருக்கு ? நீயும் வேணாம் உன் காதலும் எனக்கு வேணாம் டீ .. நான் இல்ல, உன்னை மாதிரி திமிர் பிடிச்சவளை எவனுமே விரும்ப மாட்டான் .. உனக்கும் குட் பாய் .. உன் காதலுக்கும் குட் பாய் " என்று அழைப்போடு சேர்த்து அவர்களது உறவையும் துண்டித்து விட்டான் கோகுல் .. அதன்பின் சமாதானத்திற்காக தொடங்கிய பேச்செல்லாம் சண்டையில் தான் முடிந்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.