(Reading time: 18 - 35 minutes)

 

நாட்கள் உருண்டோடியது .. காதல் என்றாலே ஏதோ பெரிய சுமை என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனதில் குடியேறி விட்டது.. "உன்னை மாதிரி திமிர் பிடிச்சவளை எவனுமே விரும்ப மாட்டான்" என்று அவன் கூறிய வார்த்தை அவளை அதிகமாகவே பாதித்தது.. சில சமயம் அவளது தன்னம்பிக்கையை கூட சீண்டி பார்த்தது அவன் கூறிய வார்த்தைகள்! சில நாட்கள் ஆண்களை நம்பவேண்டாம் என்று நினைப்பாள் .. சில நாட்கள் தன்  மீதுதான் தவறு ..தனக்குத்தான் காதலிக்க தகுதியே இல்லை என்று நினைத்து வருந்துவாள் .. இப்படி ஒரு கூட்டுக்குள் ஒளிந்து கொண்டவளை கொஞ்சம் கொஞ்சமாய் வெளியில் கொண்டு வந்தான் கிஷன் ..

" சோ இந்த காதல் எல்லாம் வேணாம் கிஷன் "

" உனக்கு என்னை பிடிக்காதா மீரா "

" ஐயோ .. உனக்கு ஏன் புரியல ... நான் இப்போவரை நம்புற ஒரே ஆள் நீதான் .. நீ ரொம்ப நல்லவன் ... என்னை நல்லா பார்துப்பன்னு எனக்கு தெரியும் .. ஆனா காதல் மட்டும் வேணாம் கிஷன் .. "

" அதான் ஏன் "

" அவன் கூட எனக்கு முதலில் நண்பனாய் தான் இருந்தான் .. ஆனா , காதலனாய் மாறியதும் எவ்வளவு மாற்றம் "

" சோ நானும் மாறிடுவேன்னு சொல்லுறியா ?"

" ..."

" என்னை அவனோடு ஒப்பிட்டு பார்க்க முடியுதா உன்னால் ?"

" முடியல கிஷன் ..அதனால் தான் அவன் இருந்த இடத்திற்கு நீ வராதேன்னு சொல்லுறேன் .. காதல்ன்னா இப்படிதான் இருக்கும்னு எனக்கு ஒரு மைண்ட் செட் ஆச்சு கிஷன் ..அதை யாராலும் மாற்ற முடியாது .. "

" சரி உன் இஸ்டம் " என்று அன்றோடு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கிருஷ்ணன் .. பேச்சுக்கு மட்டும் அல்ல .. இத்தனை நாளாய் பேணி காத்த நட்புக்கும் தற்காலிகமாய் முற்றுபுள்ளி வைத்தான் .. அவளை விலகி இருக்க தொடங்கினான் .. எல்லா ப்ரச்சனைகளையும் அவள் தனியாகவே சமாளிக்க வேண்டும் என்றே விட்டுவிட்டான் .. அவள் கண்களுக்கு அவன் தூரமாய் இருந்தாலும் அவளுக்கு தெரியாமலே நிழல் போல தொடர்ந்திருந்தான் கிருஷ்ணன் ..

வன் இல்லாமல் தடுமாறித்தான் போனாள்  மீரா ..அவனது நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை ஆக்ரமிக்க தொடங்கியது .. ஒருமுறை பார்த்துவிடுமாட்டோமா ? என்று ஏங்கியே மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன .. சரியாய் இரண்டு மாதங்களுக்கு முன் அவளை தேடி வந்தான் சஞ்சய் கிஷன் ..

" வா கிருஷ்ணா " முதல் முறையாய் அவனை கிருஷ்ணா என்று அழைத்திருந்தாள்  அவள் ..அதை உணர்ந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல்,

" எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு" என்றான்.. அவனை மூன்று வருடங்களுக்கு பிறகு கண்ட சந்தோஷத்தில் அவள் திளைக்கும் முன்னே , இடியாய் இறங்கியது அவன் சொன்ன செய்தி .. மனதில் தோன்றிய் ஏமாற்றமும் வலியும் அவள் கண்களில் கண்ணீராய் நிறைந்து நின்றது ..அதை மறைப்பதற்காக விழிகளை சிமிட்டி பெரிதாய் சிரித்தாள் .

" வாவ் சூப்பர் .. பொண்ணு யாரு " என்றாள் ..

" பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் சம்மதம் .. இப்போதான் பேசினேன் .. பொண்ணுதான் இப்போ கூட என்னை பார்த்ததும் அழுவுறா .. ஓகே சொல்ல மாட்டளோன்னு பயம்மா இருக்கு " என்றபடி திருமண அழைப்பிதழை நீட்ட அதில்  குழப்பத்துடன் அதை வாங்கியவள் , தனது பெயரை அங்கு கண்டதும் அவனை அணைத்து  கொண்டு கண்ணீர் விட்டாள்  அவள் ..

" ஹே என்னமா .. உனக்கு இதில் இஸ்டம் இல்லையா ?"

" ..:"

"சொல்லுடா"

" தெரியல .. ஆனா நீ இல்லாம எப்படி இருந்தேன்னு தெரியல .. உன்னை பார்த்ததுமே ஹக் பண்ணிருப்பேன் .. ஆனா நீதான் கல்யாணம்ன்னு சொன்னதும்  அப்படியே நின்னுட்டேன் "

" இதை நான் காதல்ன்னு எடுத்துக்கவா ?" அவனை நிமிர்ந்து பார்த்தவள்

" எனக்கு தெரியல கிருஷ்ணா .. ஆனா , நீ எனக்கு வேணும் " என்று அழுதாள் ..

" சரி.. அப்போ அட்லீஸ்ட் ஒரு ப்ரண்டா  என்னை கல்யாணம் பண்ணிப்பியா " என்றான் விடாமல் ..

" ம்ம்ம்ம் " என்று புன்னகையுடன் சம்மதித்தாள்  சமீரா .. பெற்றோரின் ஆசியுடன் அவளை கரம் பிடித்தான் கிருஷ்ணன் .. தாலி கட்டும் நேரத்தில் கூட

" இது சரிதானா கிருஷ்ணா ? சரி வருமா ?" என்று கேட்டு கொண்டே இருந்தாள்  அவள் ..

" சரிதான் டி .. உன்னைய ஒன்னும் கொடுமை பண்ண மாட்டேன்  நம்பு டீ " என்று கண்ணடித்தான் அவன் .. ஒருவழியாய் அவனுடன் அதே வீட்டில் தனது வாழ்க்கையை தொடங்கினாள்  சமீரா .. அவள் மனம் மாறும் என்ற நம்பிக்கையுடன் நல்ல தோழனாய் இருந்தான் கிருஷ்ணன் ..

அவளுடைய சின்ன சின்ன ஆசைகள் ரசனைகளை கேட்டு தெரிந்து கொண்டு பரிசளித்தான் .. அவன் ஒரு சாப்பாட்டு பிரியன் ..அவனுக்காக விதவிதமாய் சமைத்து அவனை சாப்பிட வைத்து ரசித்தாள்  மீரா .. நாட்கள் நிம்மதியாய் நகர இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த கேள்வியை கேட்டாள்  சமீரா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.