(Reading time: 18 - 35 minutes)

" ன் முதல் காதல் .. அந்த பொண்ணு யாரு கிஷன் ? நீ அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணலையா " என்றாள்..

" பண்ணிருக்கேனே  " என்றான் அவனும் அசால்ட்டாய் ..

" என் முதல் கேள்விக்கு பதில் சொல்லல நீ "என்று அவள் கூறவும்

" அடியே , என் முதல் காதலிகிட்ட என் காதலை சொல்லி கல்யாணமும் பண்ணிகிட்டேன் ..இருந்தாலும் நீ இவ்வளவு மக்கு பொண்ணா  இருக்க கூடாது " எனவும் ஸ்தம்பித்து போனாள்  சமீரா .. மனைவியின் திகைப்பை பார்த்து அருகில் வந்தவன் , அவள்  கன்னத்தில் லேசாய் முத்தமிட்டான் ..

" ஏன் ஐ லவ் யூன்னு சொன்னா தான் லவ் ஆ ? நானும் நீயும் ஒரே க்ளாஸ் ல தானே படிச்சோம் ? ஒண்ணா படிக்கும்போதே, ஆயிரம் முறை லவ் சொல்லிருக்கேன் " என்று அவன் கூறவும் விழிகளை விரித்தாள்  சமீரா ..

" குட் மார்னிங் மீராபொண்ணு,

சாப்பிட்டியா டீ ,

ஏன் சோகமா இருக்க ?,

உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னை கேளு ,

 ஐ மிஸ் யூ சம்டைம்ஸ் டீ ,

கோகுல் ரொம்ப லக்கி,

மீரா கோகுலுக்கு பதிலா கிருஷ்ணனுக்கு கிடைச்சு இருக்கலாம் ,

சிரிச்சுகிட்டே இரு,

அழுமூஞ்சி ராணி,

என்னம்மா வேணும் ?

நான் கூட வரவா ?

பசிக்கிறதா ?

உன்னை எனக்கு தெரியும் .... இப்படி நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலுக்கும் பின்னாடி நான் என் காதலை சொல்லிட்டு தான் டீ இருந்தேன்... ஆனா நீ சின்ன பொண்ணா , அதுனால என் காதல் உன் கண்ணுக்கு நட்பாய் தெரிஞ்சது.. சரி கிடைச்சவரை லாபம்னு நானும் உனக்கு ப்ரண்டா  இருந்தேன் "  என்றான் சிரித்து கொண்டே ..

" என்னை காதலிச்சுகிட்டே , எப்படி டா நான் கோகுலை காதலிக்கிறேன்னு சொன்னப்போ சகிச்சுகிட்டு இருந்த நீ ? "

" சிம்பல் , எனக்கு நம்பிக்கை இருந்துச்சு .. நீ எனக்கு தான்னு "

" எப்படி சொல்லுற "

" நாம எது நடக்கனும்னு நினைக்கிறோமோ அதை வாய் திறந்து சொல்லிட்டே இருக்கனுமாம் .. நான்தான் அடிக்கடி உன்கிட்ட சொல்லுவேனே , மீரா கோகுலுக்கு இல்ல கிருஷ்ணாவுக்கு தான்னு  அதான் பலிச்சிருச்சு "

" இதெல்லாம் ஏன் டா ஏற்கனவே சொல்லல நீ "

" ஹும்கும் .. காதலே பொய்ன்னு ஒரு முடிவுக்கு நீ வந்த பிறகு எப்படி நான் சொல்லுவேன் கண்ணம்மா ? உனக்கு காதல் மேல உள்ள  நம்பிக்கை திரும்ப வரணும் ..காதலின் அர்த்தம் உனக்கு புரியணும்னு நினைச்சேன் .. "

" பாரேன் "

" ம்ம்ம் ஒரு பாட்டுல கூட வரும் ..பாடவா "

" இதென்ன கேள்வி ? பாடு கிருஷ்ணா "

" இருபது வயதில் வருவதுதானா காதல்

அறுபதுவரையில் தொடர்வதுதானே காதல்

சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல்

அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹே...

காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா

காதலை நான் பாடவா ஹே...பூவிலே தேன் தேடவா " என்று பாடியபடி அவள் இதழ்களில் தனது காதல் கவியை தீட்டினான் அவன் .. அவன் முதல் தொடுகையில் திணறி உருகி அவனோடு ஒன்று நின்றாள்  சமீரா.. அவளை அப்படியே தூக்கி கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தான் கிருஷ்ணன் ..

" ஏன் , பாட்டை நிறுத்தி விட்டாய் கிருஷ்ணா .. உன் காதல் பாட்டை கேட்க ஆவலாய் ஓடோடி வந்த இந்த மீராவை ஏமாற்றாதே "என்று அவள் குறும்புடன் கூற அவள் நெற்றியில் முத்தமிட்டு பாடலை தொடர்ந்தான் ..

கண்ணை மெல்ல மூடிச் சாய்ந்துகொள்ளும்போது மடியாக வேண்டுமே

தட்டுத்தடுமாறி சோர்ந்து விழும்போது பிடியாக வேண்டுமே

உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு

உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல்தானே காதல்

மலர் விட்டு மலரைத் தாவுவதா நல்ல காதல்

ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே காதல் ஹே...

காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா

அவன் பாடி முடிக்கும்போது அவன் மார்பில் உறங்கியே போயிருந்தாள்  சமீரா .. தன் மார்பில் உறங்கியவளை அப்படியே தாலாட்டி கொண்டே நிலவை ரசித்தான் கிருஷ்ணன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.