(Reading time: 24 - 48 minutes)

வாட் ஏ சர்ப்பரைஸ்.. நீங்க இங்க... மேடமை பார்க்க வந்தீங்களா? பட் அவங்களை இப்போ பார்க்க முடியாது சார்... அவங்களுக்கு இப்போ பர்சனல் அப்பாயின்மண்ட்ஸ் தான்... ஐ வில் மேக் ஆன் அப்பாயின்மண்ட் அண்ட் லெட் யூ நோ!' - ஷீலா.

பேப்பர்ஸை எடுத்துக்கொண்டு வந்தவள் தன் பிஏ கள் அவனிடம் வாக்குவாதம் செய்வதை பார்த்து விரைந்து வந்தாள்.

இந்தாங்க மிஸ்டர் ரவீந்தர்... இதை உடனே ஃபேக்ஸ் செய்திடுங்க... நீங்க இப்போ கிளம்பலாம்!' என்று உத்தரவிட்டாள்.

திரும்பி நின்றிருந்தவனிடம்.. 'வாங்க.. உட்காருங்க...' என்றாள் நீலாம்பரி. அமர்ந்தவனது கூர்மையான பார்வை அவள் நெற்றியில் இருந்து வேர்வையினால் வழிந்த குங்குமத்தில் இருந்தது.

ஓ... இதுவா..' என்று கைகளால் துடைத்திட அதுவரை அங்கேயே நின்றிருந்த பிஏ களை பார்த்தாள்.

நீங்க கிளம்பலாம்னு சொன்னேன்'  கிட்டத்தட்ட புலியின் உறுமலாக தான் இருந்தது. அதற்கு மேல் அங்கே நிற்க அவர்கள் முட்டாள் அல்லவே!

கையால துடைக்காதனு எத்தனை முறை சொல்றது உனக்கு... சொல் பேச்சை கேட்கறதேயில்ல...' என்று கடிந்தவாறே கைகுட்டையை எடுத்து துடைத்துவிட்டான் ப்ரபு... ஆமாங்க நம்ம ப்ரபு சிவநாதன்!

இல்ல அது வந்து...' என்று இவள் திக்க

என்ன வந்து.. போய்னு கதை அளக்கற? இத்தனை நாள் கழிச்சு பார்க்கறவனை எப்படி கவனிக்கறதுனே தெரியல உனக்கு...

இல்ல.. நீங்க... உட்காருங்க நான் இதோ வரேன்..' என்று திரும்ப 'நாங்க உள்ளே வரலாமா செக்ரட்டிரி மேடம்' என்றபடி வந்தனர் ப்ரபுவின் தம்பிகள் சஞ்ஜய் அண்ட் சந்தோஷ், அவர்களை தொடர்ந்து ஆராதனா (சஞ்ஜயின் காதலி) அண்ட் ப்ரீத்தீ.

வாங்க.. வாங்க.. என்ன அங்கேயே நின்னுட்டீங்க?? வாங்க உட்காருங்க..எப்படியிருக்கீங்க?' என்று உபசரித்தாள். அவளும் இவர்களுடனே அமர அனல் பார்வை வந்தது ப்ரபுவிடம் இருந்து.

அந்த பார்வையை கவனித்தவள் 'ரெண்டு நிமிஷம்.. இதோ வரேன்..' என்று எழுந்து சென்றாள்.

எங்கே போறோம் னு சொல்லாமலே கூட்டி வந்துட்டீங்க... நீலா மேடமை பார்க்கதானு சொல்லியிருக்கலாம்ல?? உங்களுக்கு தெரிஞ்சவங்களா இவங்க?? காலையில பார்த்தற்கும் இப்போ பார்க்கறதுக்கும் எவ்வளவு டிவரன்ஸ்ல! யாரவது பதில் சொல்லுங்களேன்' என்று ப்ரீத்தீ கேட்க விஷ்வா வாயை திறப்பதற்குள் ப்ரபு குறுக்கிட்டான்.

அறிவிருக்கா டா உங்களுக்கு?? இப்போவே வர சொன்னேனா உங்களை?? நான் தான் கால் செய்றேனு சொன்னனே. அதற்குள் ஆள் வரும் அரவம் கேட்க அமைதியாகினர். 

திரும்பி வந்தவள் தண்ணீர் டம்ளர் ட்ரேவோடு வர பின்னே சமையல்காரர் சுடசுட கேசரியும் மசால் வடையும் எடுத்து வந்தார்.

ப்ரபு பார்த்த பார்வையில் அவரிடமிருந்து ட்ரேவை வாங்கிவைத்துவிட்டு அவரை அனுப்பிவிட்டார். அதற்குள் ப்ரீத்தீ பதறியடித்து 'மேடம்... நீங்க ஏன் இதையேல்லாம் செய்யறீங்க? உங்க சர்வண்ட்ஸ கூப்பிடுங்க' என்றாள்.

ஆமாம் நீங்க ஏன் இதை செய்யனும்..... என்று தோய்ந்தது விஷ்வாவின் குரல் தன் தமையனின் பார்வையால்!

சந்து.... உனக்கு இந்த காம்பினேஷன் ரொம்பவும் பிடிக்குமேனு செஞ்சேன்... எப்படியிருக்குனு சொல்லு!'

சஞ்சு... கேசரி எப்படி??

விஜய் வந்தானா சஞ்சு? அவன் பிரபோசலை பார்த்தீங்களா?

அதுவந்து...நீலா...' என்று சஞ்சு இழுக்க..

வந்து கிழிச்சான்...உன் ஆருயிர் நண்பன் விஜய்....இன்னோரு முறை ரெக்கமண்டேஷன் எடுத்துட்டுவா... அப்போ இருக்கு உனக்கு... என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல...சீஃப் செக்ரடரியா இருந்தா நீ சொல்றத எல்லாம் கேட்கனும்னு எங்களுக்கு... முக்கியமா எனக்கு எந்த அவசியமும் இல்ல... புரிஞ்சுதா???' என்று எரிந்து விழுந்தான் ப்ரபு.

அண்ணா... சும்மா அவங்களை திட்டாதே.....- சஞ்சு என்கிற சஞ்ஜய்.

இல்ல பரவாயில்ல சஞ்சு.. தப்பு செய்தது நான்... விடு...ஊருல எல்லாரும் எப்படியிருக்காங்க?

அதை அங்க வந்து பார்க்கனும்... இங்க உட்கார்ந்துகிட்டு கதை பேசக்கூடாது' - சுள் என்று வந்தது பதில் ப்ரபுவிடமிருந்து.

ஏன் சார் யார்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா? விஷ்வா உங்க அண்ணாகிட்ட சொல்லுங்க... - ப்ரீத்தீ

அதற்குள் நீலாம்பரியின் முகம் வாடிவிட பதறியடித்து அவளருகில் அமர்ந்து தோளோடு அனைத்துக்கொண்டான் சந்தோஷ்!

அவள் கைகளை எடுத்து தன் வலது கையில் வைத்தவாறு  பேசத்தொடங்கினான். சஞ்சுவும் இப்போது அவள் அருகில் வந்து இன்னொரு பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

இங்க பாருங்க முதல்ல.. - சந்து.

நீலா... இங்க பாரு... - சஞ்சு

....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.