(Reading time: 24 - 48 minutes)

நீ கிளம்புணா நான் பார்த்துக்குறேன்' 

என்னவோ போ.. உன்னை நினைச்சா தான் டா எனக்கு கஷ்டமாயிருக்கு!' என்று சிரித்துவிட்டு செல்லும் ப்ரபுவையே 'ஆ'வேன பார்த்து நின்றாள் ப்ரீத்தீ. 

மீட்டிங்  முடிந்து வீட்டிற்கு வந்த நீலாம்பரி ஒய்வு எடுக்க செல்லாமல் ஃபரஷ் அப் செய்து இளம் பச்சை நிறத்தில் ஒரு சாதாரண காட்டன் புடவையை கட்டிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள்.

அதற்குள் அங்கு வேலை செய்யும் சமையல்காரரும் மற்ற இரண்டு பெண்மணிகளும் பதட்டமாக ஓடி வந்தனர்.

மேடம்.. நீங்க... எங்க... இங்க???

நாங்க ஏதாவது தவறு செய்தா எங்களை மன்னிச்சிடுங்க... மேடம்...உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க... நாங்க செய்து தரோம்! 

எனக்கு இந்த சமையல் கட்டு வேணும் இப்போவே!' என்றாள் சிறு புன்னகையுடன்.

மேடம்!!!' அவர்களுக்கும் ஆச்சர்யம் தான். அவள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால் எந்த வித உணர்ச்சிகளையும் பார்த்ததில்லை அவர்கள் இவளிடம். அந்தம்மா ரொம்ப ஸ்ரிக்ட் ஆப்பீசர்' என்று

அந்த சிரிப்புக்கு பதிலை அவளே கொடுத்தாள். இன்னைக்கு ரொம்பவும் முக்கியமான கெஸ்ட் வராங்க. அதனால நானே குக் செய்ய போறேன். பஹயா நீங்க எனக்கு ஹெல்ப் செய்தா மட்டும் போதும். நீங்க ரெண்டு பேரும் அந்த இடத்தை கொஞ்சம் க்ளீன் செய்யுங்க!' என்று விட்டு தன் வேலையை தொடங்கினாள் நீலாம்பரி.

'பஹயா' அதாங்க அண்ணா.. என்று இவள் அழைத்தாலேயே உச்சி குளிர்ந்து போயிறுந்தார் அந்த சமையல்காரர்.

அவள் கேட்ட உதவிகளை செய்து கொடுக்க அவள் சமையல் செய்வதிலேயே குறியாக இருந்தாள். எல்லாம் முடிஞ்சிடுச்சு பஹயா... இந்த வெங்காயத்தை மட்டும் இந்த மாவுல கலந்து வெச்சிடுங்க... இந்த கேசரியை கின்னத்துல மாத்திடுங்க... நான் ரெண்டு நிமிஷத்துல வரேன்' என்று சென்றுவிட்டாள்.

அங்கே வேலை செய்யும் மூவருக்கும் இன்னமும் தலைகால் புரியவில்லை!

சரியாய் ஐந்து நிமிடத்தில் வந்தவளை 'ஆ'வேன பார்த்து நின்றிருந்தனர். ஆனால் அவளிடம் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. 'நீங்க எல்லாம் போகலாம்... நான் கூப்பிட்டா மட்டும் வாங்க... பஹயா நீங்க மட்டும் டேன் மினிட்ஸ் இருங்க... நான் சொல்லறேன்...'

எப்ரனை கட்டிக்கொண்டு அந்த மசால் வடையை தட்டி எடுத்துக்கொண்டிருந்தாள். வெளியில் லிவ்விங் ரூமில் பேச்சு சத்தம் கேட்க அடுப்பை அணைத்துவிட்டு கையை கழுவி துடைத்துகொண்டே பரபரப்பாக முன்னே விரைந்தாள். ஆனால் அவள் வாங்கியது பல்ப்...

அங்கே இருந்தது அவளின் பர்சனல் செகரட்ரிஸ் ஷீலாவும்.. ரவீந்தரும்! அப்போது தான் நினைவு வந்தது காலையில் அவள் சொன்னது! இப்போ இவங்களை எப்படியாவது இங்க இருந்து கிளப்பனுமே' என்று நினைத்தபடி அதே டிரேட்மார்க் முகத்துடன் வந்தாள். ஷீலாவும்.. ரவீந்தரும் ஆச்சர்யத்தில் அமர்ந்திருந்தனர். 

பின்னே... பச்சை நிற காட்டன் புடவை... மேட்சிங் கண்ணாடி வலையல்கள்... தழைய பின்னலிடப்பட்ட தலைமுடி... காதில் ஜிமிக்கி.. நெற்றி வகுட்டில் குங்குமம்... கழுத்தில் மோப்பு வைத்த தடி சங்கிலி... எப்போதும் பார்க்கும் அதே மறைவான செயின்... ஆனால் இப்போது மறைவாய் இல்லாமல் திருமாங்கல்யத்துடன் வெளியே இருந்தது...அடக்கடவுளே இந்த அம்மா தாலியை அந்த மெல்லிசு செயின்லியா போட்டிருந்தது...'

அப்போ இவங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா??' என்று கிசுகிசுத்தான் ரவீந்தர்.

சொல்லுங்க மிஸஸ் ஷீலா.. மிஸ்டர் ரவீந்தர்!

மேடம்.. நீங்க வர சொல்லியிருந்தீங்க..

எஸ்... ஒன் மினிட்..' என்றபடி சமையல்காரரை பார்க்க அவர் ஓடி சென்று இரண்டு ஸ்வீட் பாக்ஸ் எடுத்து வந்தார்.

அதை வாங்கி அவர்களிடம் நீட்டியபடி 'இன்னைக்கு மீட்டிங் நல்லபடியா முடிஞ்சதுக்கு ஒரு ஸ்மால் டிரீட்...' என்றாள்.

மேடம்...!' 

இந்தாங்க... வாங்கிக்கோங்க!'

மேடம்... திஸ் இஸ் நாட் ரைட் அண்ட் அகைன்ஸ்ட் யூவர் நேச்சர்!?? - ஷீலா.

மேடம்.. அந்த பேப்பர்ஸ் உங்ககிட்டதான் இருக்கா?' என்று சரியாக யூகித்துவிட்டான் ரவீந்தர்.

அவள் முகத்தில் இருந்த புன்னகை மெல்ல விரிந்தது.

தேங்க்ஸ் எனக்காக ரீவர்க் செய்ததற்காக!'

இட்ஸ் ஓகே மேம்! நாங்க கிளம்பறோம்! நாளையில இருந்து உங்க வெக்கேஷன் மேம்...

யேஸ்...எதுவானாலும் என்னை தில்லி நம்பர்லியே ரீச் செய்யலாம்... ஆர் எல்ஸ் டராப் மீ ஈ மெயில். சில இம்பார்டண்ட் பேபர்ஸ் இருக்கு... அதை மினிஸ்டரிக்கு அனுப்பிடுங்க ஷீலா...டூ மினிட்ஸ்...' என்று உள்ளே செல்ல வந்து சேர்ந்தார் நீலாம்பரியின் விருந்தாளி.

எக்ஸ்கியூஸ் மீ சார்... உங்களுக்கு என்ன வேணும்?' என்று ரவீந்தர் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.