(Reading time: 24 - 48 minutes)

நாங்க யாரும் அந்த மீட்டிங் ரூம்குள்ள வர முடியாது நீயும் அண்ணனும் தான் உள்ளே போறீங்க. கவர்மண்ட் மீட்டிங்க் அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்க' என்று ப்ரீத்தீயை கடித்துக்கொண்டிருந்தான் விஷ்வா.

ஏண்டா இவளை இந்த பாடு படுத்தற? உனக்கு வேற ஆளே கிடைக்கலியா ப்ரீத்தீ? அண்ணனுக்கு ஏத்த தம்பி இவன்!' என்றான் சஞ்ஜய்.

நீங்க மட்டும் என்னவாம்? விஷ்வாவை மாதிரிதான்! ஆனா உங்களுக்கு எல்லாம் கோவத்தை தவிர மற்ற உணர்ச்சிகளையும் காட்ட தெரியுதே! அதுதான் ஆச்சர்யமா இருக்கு எனக்கு! உங்க சிஸ்டர்கிட்டவும் இப்படி தான் நடந்துபாரா?? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்க ஆசைப்படற மாதிரி உங்க பெரிய அண்ணாவையும் கல்யாணம் செய்துக்க சொல்லலாம்ல??

தம்பிகள் இருவரும் அர்த்தமுள்ள பார்வையை பரிமாறும் போதே...'நோ பர்சனல் டாக்ஸ் இன் அவ்விஷியல் ஹவர்ஸ்!' என்றபடி வந்தான் ப்ரபு, சக்தி க்ரூப் ஆஃப் கம்பெனிசின் தலைமை நிர்வாகி. உடன் இருப்பது அவன் தம்பி சஞ்ஜய் சுவாமினாதன், சந்தோஷ் விஷ்வநாதன்... விஷ்வாவின் காதலி..ப்ரீத்தீ!

ரியாக ஒன்பது மணிக்கேல்லாம் அந்த அமைச்சகத்திற்குள் சீஃப் செக்ரட்டிரியின் கார் உள்ளே நுழைந்தது. அந்த கஞ்சியிட்டு அயர்ன் செய்யப்பட்ட பெங்கால் காட்டன் சாரியும் கழுத்தில் ஒரு தங்க செயின்..காதில் சின்னதாக கம்மல்.. ஒரு கையில் தங்க வளையல் மற்றோரு கையில் வாட்ச்... நிதானமான ஆனால் நேர்க்கொண்ட அழுத்தமான வேகமான நடையுடன் உள்ளே நுழைந்தாள் நீலாம்பரி! எதிர்க்கொண்டவர்களின் காலை வணக்கத்திற்கும் சல்யூட்டிற்கும் லேசாய் தலை அசைத்தபடி சென்றாள். கிட்டத்தட்ட பத்து வருட அனுபவம் ஐ ஏ ஸ் அதிகாரியாய்! மிகவும் சிறுவயதிலேயே அதாங்க.. இருபத்திரண்டு வயசிலே ஐ ஏ ஸ் கிளியர் செய்த தமிழ் பெண் என்ற பட்டம் வேறு.

என்ன ஷீலா... ரவீந்தர்.. இஸ் எவ்ரிதிங் ஃபைன் வித் தி மீட்டிங்? இது எவ்வளவு இம்பார்டண்ட் மீட்டிங்க் நு உங்களுக்கே தெரியும்னு நினைக்கறேன்!' என்று அவர்களை அழைத்து கேட்டாள்.

அவர்கள் தயங்கி நிற்க.. பிரச்சனையை அறிந்தவள்...' எவ்வளவு நேரமாகும் ரீவர்க் செய்ய?' என்று கேட்டாள்.

தயங்கி தயங்கி அவர்கள் அரை மணி நேரம் என்று சொல்ல... சரி க்விக்.. ஹாவ் அன் ஹவர் தான் டைம்! என்றாள். 'அதற்குள் மற்ற அஃவிசியல்ஸோட ஒரு க்விக் மீட்டிங்க்... அப்புறம் வந்திருக்க டேலிக்கேட்ஸ் பிஏஸ் கூட ஒரு க்விக் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்க!' என்று விரட்டியடித்தாள். 'முக்கியமான விஷயம்... நீங்க ரெண்டு பேரும் மீட்டிங் முடிஞ்சவுடன் என்னை வந்து பார்த்துட்டு போங்க!'

பதட்டத்துடன் அவர்கள் செல்ல.. அடுத்த ஐந்து நிமிடத்தில் மற்ற அதிகாரிகளுடன் மீட்டிங்க் நடந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் இந்தியாவின் பல முக்கியமான நிறுவனங்களுடைய தலைமை நிர்வாகிகளின் பிஏ களுடன் கேட்ச் அப் மீட்டிங்க் தேனீருடன்!

பொதுவான பேச்சு.. அவர்கள் தலைமை நிர்வாகிகள் பற்றி சிறு தகவல்கள்.. இவர்களின் எண்ணங்கள் என்று அனைத்தையும் மனதில் குறித்துக்கொண்டாள். அவளது பேச்சு, நிர்வாக திறமையை பார்த்த ப்ரீத்தீ வாய்யை பிளந்து நின்றாள்.

மீட்டிங்கில் 'இளமை இந்தியா' திட்டத்திற்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பெரிய நிறுவனங்களின் உதவி.. தொழில் முனைவோருக்கான இன்குபேஷன், வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் என அவர்களின் பங்கேற்பை பற்றி.. விதிமுறைகள் சவால்கள்... அவர்களின் பங்கு என்று பல விதமான பேச்சுகள் நடந்தன.

காலை முதல் மாலை வரை ப்ரபுவின் பின்னாலேயே அலைந்துக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு அமைச்சகத்தின் செயலரையும் சைட் அடித்துக்கொண்டிருந்தாள் ப்ரீத்தீ. 

மீட்டிங் முடிந்து 'ஹை டீ' யில் மெல்ல நீலாம்பரியை நெருங்கியவள் தயங்கி பேச முனைந்தாள்.

நீலாம்பரியோ சிநேகமான புன்னகை ஒன்று வீச சற்று மயங்கியே போய்விட்டாள் ப்ரீத்தீ. ரவீந்தர் உட்பட சுற்றி இருந்த அனைவரும் தான். 

அதற்குள் ஷீலா மினிஸ்ட்ரியில் இருந்து வந்த அழைப்பை பற்றி கூற.. 'வில் மீட் யூ லேட்டர் ப்ரீத்தீ!' என்று கூறி சென்றுவிட்டாள்.

'லீலா'விற்கு திரும்பும் வரையில் ப்ரீத்தீ அதை கூறி அங்கலாய்த்துக்கொண்டேயிருந்தாள். 

லீலாவிற்கு திரும்பியவர்கள் சற்று இளைபார அந்திபொழுதில் வெளியே செல்ல தயாரானான் ப்ரபு. சரிடா சஞ்ஜய்... மற்ற வேலைகளையேல்லாம் நீ பார்த்துக்கோ... இந்த விஷ்வாவையும் ப்ரீத்தீயையும் சேர்த்து தான்!' என்று கண்களால் ஜாடை காட்டி நகர்ந்தவனை தடுத்தது வேற யாரு நம்ம அதிகப்ரசங்கி ப்ரீத்தீ தான்.

சார்.. உங்களுக்கு இப்போ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு இந்த ரெஸ்டாரேன்டில்! நீங்க எங்க போறீங்க இப்போ??

டேய் சந்தோஷ்...!' ப்ரபு தான் அலறினான் தன் தம்பியை பார்த்து. பதறியபடி ஓடி வந்தான் விஷ்வா.

அண்ணா...?

'இத எங்கேயிருந்து டா பிடிச்ச?? போகும் போதே எங்க போறனு??' என்றான் ப்ரீத்தீயை பார்த்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.