(Reading time: 24 - 48 minutes)

இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - நீலா

This is entry #32 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

டில்லியில் உள்ள மத்திய அரசின் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மிகவும் பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த அமைச்சகத்தின் செயலர் வரும் நேரம். இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அந்த செயலரின் பர்சனல் செக்ரட்டிரி ரவீந்தரும் ஷீலாவும் பதட்டத்துடன் சுழன்று கொண்டிருந்தனர். 

இருவருக்கும் சூடான விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. (நம்ம வசதிக்காக தமிழில கொடுத்திருக்கேன்)

ஷீலா... இஸ் எவ்ரிதிங் ரெடி? அவங்க வந்தா உன்னை மட்டும் காய்ச்சமாட்டாங்க... என்னையும் சேர்த்துல வறுத்து எடுப்பாங்க?

Heartsஇப்போ எதுக்கு இவ்வளவு சத்தம் போடறீங்க ரவீந்தர்?? அந்த ஃபைல் காணாம போனதுக்கு நான் தான் காரணமா? நீங்களும் பர்சனல் செக்ரட்டிரி தான்.

அதனால???? டிப்பார்ட்மேண்ட்ல யாரு தப்பு செய்தாலும் அவங்களோட சேர்த்து என்னையும் தானே வறுக்கறாங்க! இப்போ மட்டும் என்ன தனியாவா நடக்க போகுது??? சீஃப் வரர்த்துக்குள்ளே ரீவர்க் வேணா செஞ்சிடலாம்... பிரிண்ட் அவுட்ஸ் மட்டும் தானே! சீக்கிரம் எடுக்கலாம்..

சீனியர் அட்வைசர், ஜாயிண்ட் செக்ரட்டிரிஸ், டேப்யூடி செக்ரட்டிரி என்று அந்த அமைச்சகத்தின் முக்கியமான அதிகாரிகள் எல்லோரும் அங்கு வருகிறார்கள். அந்த அமைச்சகத்தின் அத்தனை உயர் பதவியில் இருக்கும் ஐ ஏ ஸ் அதிகாரிகள் முதல் எல்லா உட்துறை அதிகாரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த சீஃப் செக்ரட்டிரி வேற யாரும் இல்லை... நம்ம டேரர் பார்ட்டி நீலாம்பரி ஐ ஏ ஸ்.

நீலாம்பரி ஐ ஏ ஸ். அந்த அமைச்சகத்தின் முதல் பெண் செக்ரட்டிரி. முப்பத்தியிரண்டு வயதிலும் இளமையான தோற்றம்...வேலை என்று வந்துவிட்டால் வெளுத்துக்கட்டிவிடுவாள் எல்லோரையும். எப்போதாவது வரும் சிரிப்பை தவிற கடுமையான கட்டுக்கோப்பான ஆள். நேர்மை நாணயம் என்று கறிக்கு உதவாத விஷயங்களை வைத்து வாதிட்டு மற்றவர்களையும் படுத்துபவள்! ஒரு வகையில் இவள் படையப்பாவின் நீலாம்பரி தானோ என்று நினைத்துக்கொள்வாள் தமிழகத்தை சேர்ந்த ஷீலா.

இப்படியேல்லாம் நம்மளை காய்ச்சி எடுக்கற இந்த மேடமுக்கு எங்க தெரிய போகுது ஒருத்தரோட உணர்ச்சிகள்.. அதனால தான் அவங்களுக்கு கல்யாணமே ஆகலியோ எண்ணமோ?' என்றபடி வந்து நின்றாள் ஷீத்தல், டேப்யூடி செக்ரட்டிரியின் பி ஏ. 

ஷ்ஷ்... வேலை நேரத்துல அதை மட்டும் பார்ப்போம்.. அடுத்தவங்க அதுவும் நம்ம உயர் அதிகாரிய பத்தி இப்படி தவறா பேசக்கூடாது' என்றபடி வேலையை தொடர்ந்தார்கள்.

டில்லியில் 'தி லீலா பேலஸ்' ரிசப்ஷனில் நின்று கொண்டு சஞ்ஜய் தன் மொபைலில் கத்திக்கொண்டு இருந்தான். 

'எவ்வளவு முறை உங்களுக்கு சொல்றது? பங்க்சுவாலிட்டி ரொம்பவும் முக்கியம் நு?

...

இல்லை உங்களுக்கு அப்பாயிண்மண்ட் கொடுத்ததே பெரிய விஷயம்! இதுல ஈவ்னிங் நிச்சயமா முடியாது விஜய்! இல்லை வேற அப்பாயின்மெண்ட்ஸ் இருக்கு... இல்லை ஓட்டல் வந்தாலும் பார்க்க முடியாது.... நீங்க கொண்டுவந்த ரெக்கமண்டேஷனை பார்த்துதான் மீட்டிங் அரேஞ்ச் செய்தத்தே...இல்லை ஐ டோண்ட் வாண்ட் ஏனி எகஸ்கீயூஸ்... ஐ வில் டிஸ்கஸ் அண்ட் லெட் யு நோ இன் டூ டேஸ்!' என்று அழைப்பை துண்டித்துவிட்டு  ஒரு நிமிடம் ஆசுவாச படுத்தியவன் இப்போது நடுங்க தொடங்கியிருந்தான். 

இப்போ மீட்டிங் கேன்சல் ஆன விஷயத்தை எப்படி இந்த சிங்கத்திடம் சொல்ல போறேன்??' என்று யோசித்தவாறு அவன் திரும்ப எதிரில் வந்துகொண்டிருந்தான் அவன் சொன்ன அந்த சிங்கம்!

என்ன சஞ்ஜய்??? அந்த விஜய் வரவில்லைல???' என்றபடி அவனருகில் வந்தான் ப்ரபு சிவநாதன்.

அதுவந்து....' என்று இழுத்தபடி ஞே என விழித்தான் சஞ்ஜய். அதற்குள் அங்கு வந்த சஞ்ஜயின் பிஏ ப்ரீத்தீ அவனை காப்பாற்ற முனைந்தாள்.

சார்.. அதுவந்து... சஞ்ஜய் சார் உங்ககிட்ட சொல்லலாம்னு தான் வந்தார்.. அப்போ நீங்க இன்னோரு மீட்டிங்க்ல இருந்ததால சொல்ல முடியலை..விஷ்வா உங்ககிட்ட சொல்லிடறேனு சொன்னார்..' என்றபடி விஷ்வாவை தேடினாள் அந்த ப்ரீத்தீ.

உங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் அறிவே கிடையாது... யார் ரெக்கமண்டேஷனை எடுத்துக்கறதுனு ஒரு விவரம் வேண்டாம்? ஐ டோண்ட் வாண்ட் டூ மீட் தட் விஜய் அகேயின்... புரிஞ்சிதா?? க்விக்... சீக்கிரம் பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு நாம வந்த வேலையை போய் கவனிக்கலாம்..ஹும் சூன்... க்விக்.. க்விக்..விஷ்வா இப்போ வரலைனா இன்னைக்கு பட்னிதான்!' என்றபடி அங்கிருந்த உணவகத்திற்குள் நுழைந்தான் ப்ரபு.

அவன் சாப்பிட்டு நகர மெல்ல  சஞ்ஜயிடம் கேட்டாள் ப்ரீத்தீ..'எப்படி சார் இவரை வீட்டுல வெச்சு சமாளிக்கறீங்க? ஆண் பெண் வித்யாசம் இல்லாம எல்லாரையும் வாட்டி எடுக்கறாரே? அவரை தட்டி கேட்க ஆளேயில்லையா...?? நாங்ககூட பரவாயில்லை... நீங்க, விஷ்வா எல்லாம் அவர் தம்பிதானே? உங்ககிட்டகூடவா இப்படி நடந்துபார்? உங்க சிஸ்டர் சித்ரா கிட்டகூடவா???'

ஷட் அப் அண்ட் டூ யுவர் வர்க் ப்ரீத்தீ!' என்று எரிந்து விழுந்தான் விஷ்வா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.