(Reading time: 24 - 48 minutes)

ய்... நிலாபொண்ணு' என்று பின்னிருந்து அணைத்தபடி கட்டிக்கொண்டான் ப்ரபு.

மரியாதையா கையை எடுங்க... அதுதான் தாத்தா கல்யாணம் செஞ்சு வெச்சதுதான் காலத்தின் கொடுமையா இருக்கே... நீங்க போங்க போய் உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துக்கோங்க... என்னைவிடுங்க அத்தான்.

என் நிலாபொண்ணு... என் தங்கம்ல... நான் சும்மா விளையாட்டுக்குதான்.. அதுக்கு அத்தான் மேல இவ்வளவு கோபமா என் நிலாகுட்டிதானே!

சும்மா ஒன்னும் கொஞ்ச வேணாம்...நானும் பார்த்துட்டுதான் இருக்கேன்... வந்ததுல இருந்து மிரட்டறீங்க... கண்ணை உருட்டறீங்க... முறைக்கறீங்க... கோபமா பேசறீங்க... என்ன இதேல்லாம் ஹும்ம்?

அச்சோ... நிலாபொண்ணு... நான் சும்மா விளையாட்டுக்கு தாண்டா அப்படி செய்தேன்... உன்னை மீறி நான் ஏதாவது செய்திருக்கேனா சொல்லு.... என் நிலாபொண்ணு கோடு போட்டா... நான் ரோடு போட மாட்டேனா சொல்லு?? 

என்ன உங்க டெரர் பார்ட்டி இமேஜை என்கிட்ட காட்டனும்னு பார்க்கறிங்களா??

அச்சோ அப்படியேல்லாம் இல்ல நிலாபொண்ணு... உன்கிட்ட நான் ஏன் இமேஜை காட்டனும்.. நீயே சொல்லு...இத்தனை வருஷத்துல நாம பார்த்துக்கற்தே கொஞ்ச நாள் தன்... சரி... வெளியில புலி போல இருக்க நம்ம ஸ்ரிக்ட் ஐ ஏ ஸ் ஆப்பீஸர் மேடமை கொஞ்ச நேரம் எலியா மாத்தினால் என்னனு தோணிச்சு... அதான்....

ஹலோ யாரு புலி...யாரு எலி???

ஹிஹிஹிஹி... - ப்ரபு தான்.

முப்பது வருஷ லவ்வாமே... யாரோ சொன்னாங்க..

பின்னே இல்லையா... நம்ம சஞ்சு பிறந்ததிலிருந்தே உன்ன நான் லவ் பண்ணறேன்...

ஹலோ அஞ்சு வயசிலிருந்தா?? இந்த கதையேல்லாம் என்கிட்ட வேண்டாம்... நான் மட்டும் உங்களை ஆள் வெச்சு கடத்தி கூட்டிப்போய் மிரட்டல... நீங்க அந்த அனிதாவை தானே கல்யாணம் செய்திருப்பீங்க!' என்று அவள் கண்ணை கசக்க.

ஹலோ மேடம்... உங்களுக்கு அந்த ஐடியாவை யாரு கொடுத்தாங்கனு யோசிச்சு பார்க்கனும்... என் தம்பிதானே..அவனுக்கு இதை சொன்னதே நான்தான்...

நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றது தாத்தாவுக்கு தெரிஞ்சிருக்கு...நம்ம ரெண்டு பேரும் சொல்லிக்கிடாததுக்கூட தெரிஞ்சிருக்கு... தாத்தாவுக்கு வேற உடம்பு முடியாம இருந்தார்..அத்தை வேற உனக்கு கல்யாணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க... நான் தான் பிளான் செய்து.. நீ என்னை கடத்தரா மாதிரி காட்டி... ஆனா நிஜமா அப்போ நாம ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓடிப்போனா மாதிரி தான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அதனால தான் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி உடனே உன் கழுத்தில தாலியை கட்ட சொல்லிட்டார் தாத்தா... நானும் சந்தோஷமா கட்டிடேன்... இல்லைனா இவ்வளவு வேலை செய்தது வெஸ்ட்டா போயிடுமே... எப்படி இந்த அத்தானோட பிளான்...

போங்க அத்தான்... இத்தனை வருஷமா இதை ஏன் சொல்லவேயில்ல நீங்க???

எங்க மேடம் என்னை நெருங்கவிட்டா தானே!! சரி சின்ன பொண்ணுனு பார்த்தே கொஞ்ச காலம் போச்சு... அப்புறம் ஐ ஏ ஸ் படிக்கனும் சொன்ன... சரி என் நிலாபொண்ணு ஆசைப்பட்டுடூச்சு... அதையும் சரினாச்சு... அப்புறம் பிஸ்னஸ் ஐடியா...சோஷியல் சர்வீஸ் பிளான்... சமூக அக்கறை... இதுல உன் நாலேட்ஜ் எல்லாம் பார்க்கும் போது இந்த தாலியை கட்டி உன்னை கட்டி போட்டா மாதிரி தோணுச்சு... என்ன தான் வெளியில புலியா தெரிஞ்சாலும் இந்த ஆசை அத்தான்கிட்ட நீ எலி மாதிரி பயப்படற...உன் பயம் உன் வளர்ச்சிக்கு தடையாகிடுமோனு தான்...அதனால தான் நமக்கு மேரேஜ் ஆனதை வெளிப்ப்டுத்திக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்... அதனால தான் உன்னை வேற ஊருக்கு போஸ்டிங்க் போட்டப்பகூட தனியாவே அனுப்பிச்சேன்...

ஹலோ யாரு உங்களை பார்த்து யாரு பயப்பட்டது... அதுவும் எலியா நானு??

என்னோட கியூட் எலி... என் நிலாபொண்ணு!

முகம் சிவக்க அவன் மார்பில் தலைவைத்து இறுக கட்டிக்கொண்டாள் நிலா

அப்புறம் நிலாபொண்ணு... ' என்று அவன் விலக்க

இல்ல அத்தான்.. இப்படிதான் இருப்பேன்...'

சரிங்க மேடம்... இவ்வளவு அன்பு எங்க வெச்சிருந்தீங்க??' என்றான் சிரித்துக்கொண்டே

இல்ல அத்தான் நிஜமாவே உங்களை பார்த்தா எனக்கு பயம்தான்... கொஞ்சம் முரடா...பெரிய ரவுடி மாதிரி... ஒரு ஹிரோ மாதிரி...அதனாலதான்....' என்று அவள் இழுக்க

ரவுடியா... இல்ல ஹிரோவா??

ரெண்டுமேதான்!!!

நிலாபொண்ணு... உன் ஆசை அத்தைக்கு என் தம்பிகளுக்கு கல்யாணம் சீக்கிரமா செய்யனுமா... ஏன்னா தாத்தாவுக்கு பேர பிள்ளைகளோட வாரிசை பார்க்கனுமாம்..

இவ்வளவு வயசாகியும் இந்த தாத்தாவுக்கு ஆசைவிடுதானு பாருங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.