(Reading time: 16 - 32 minutes)

"ஹே... எங்களுக்கு எதுக்கு இன்விடேஷன்... மண்டபத்து பேரை மட்டும் சொல்லு... நாங்கெல்லாம் ஆஜராகிவிடுவோம்..."

"அய்ய... உங்களுக்கு யாரு இன்விடேஷன் வைக்கப் போறது... அப்பா அம்மாக்கெல்லாம் வைக்கனும்..."

"ஆமாம் கயல் அம்மா கூட கேட்டாங்க... என்னடா கயலுக்கு கல்யாணம்ன்னு சொன்ன... ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாம நீங்க எல்லாம் அமைதியா இருக்கீங்கன்னு.."

"அம்மாக்கிட்ட சொல்லிடு ரகு... நான் அப்பா அம்மாவை கூட்டிகிட்டு வரேன்னு... அப்படியே மத்த ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கும் போகனும்...

சிவா அப்பாக்கும் இன்விடேஷன் வைக்கனும்... அப்பா எப்போ ஊரிலிருந்து வராரு..."

"ஹே... அப்பா ஆல்ரெடி வந்தாச்சு... உள்ள தான் இருக்காரு... அவருக்கு நீ வீட்டை விட்டு வந்தது தெரியக் கூடாது... அதான் இங்க நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கேன்..."

"ஓ... சரி அப்பாக்கூடவும் குட்டீஸ் கூடவும் கொஞ்ச நேரம் இருந்துட்டு நான் வீட்டுக்கு போறேன்..."

"ஆமாம் அம்மா அப்பா வருவதுக்குள்ள போய்டு...

ரகு... போகும் போது அவளை காரில் ட்ராப் பண்ணிடு..."

"சரிடா..."

"வாங்க உள்ளே போகலாம்..." அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள்.

தையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரசாத்திற்கு ஏதோ மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறைந்தது போல் இருந்தது... என்னத்தான் கயலை திருமணம் செய்யும் நாளுக்காக காத்திருந்தாலும்... அவன் மனதிற்கு அவள் நெருக்கமாக இருந்தாலும்... அவள் இந்த திருமணத்திற்கு விருப்பம் சொல்லாதது அவனுக்கு உறுத்தலாக இருந்தது.

அவளுடன் இவனுக்கு திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று தினம் தினம் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான்... அந்த உறுத்தல் தான் இன்று கூட அவளை பார்த்த போது என்னென்னவோ நினைக்க தோன்றியது... ஆனால் அவன் நினைத்தது போல் அவள் இந்த திருமணம் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாளே...

ஆனால் இன்று அவள் வாயால் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதை கேட்ட பின்பு தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கிறது,

அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவன் அறியாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு... இப்பொழுது அவள் மனதில் உள்ளதை அறிந்த போது அவனுக்கு பெருமையாகவே இருந்தது,

அதுவும் அவளின் நண்பர்களை பார்க்கும் போது வியப்பாக இருந்தது... சும்மா ஊர் சுற்றுவதற்கும்... அரட்டை அடிப்பதுக்கும் மட்டுமே நண்பர்களின் வேலையில்லை... துன்பத்தில் தோள் கொடுப்பதும்... குழப்பத்தை தெளிய வைப்பதும் தான் அவர்கள் வேலை என்பதை நிரூபித்துவிட்டார்கள், அதுமட்டுமல்ல... வெளிநாடு வேலை, அதிக சம்பளம் இதை லட்சியமாக வைத்திருக்கும் இளைய தலைமுறைக்கு மத்தியில் கயல்விழியையும் அவள் நண்பர்களையும் பார்க்கும் போது பிரசாத்திற்கு வியப்பாக இருந்தது.

பிரசாத் இப்போதே முடிவெடுத்துவிட்டான்... திருமணத்திற்கு பின் அவளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும்... அந்த நண்பர்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக ஆக வேண்டும் என்றும்....

ஆனால் அதை அவளிடம் இப்போது அவன் சொல்லப் போவதில்லை...இப்போது சொன்னால் அவனுக்கே கூட அதை அவன் காதல் மயக்கத்தில் சொன்னது போல் ஆகிவிடும்....

திருமணத்திற்கு பின் அவளின் விருப்பத்தை நிறைவேற்றி தான் அதை நிரூபிக்க வேண்டும்... கயல்விழியின் காதல் கணவனாக இவன் மாற வேண்டும்... முக்கியமாக ஒரு நல்ல நண்பனாக இவன் இருக்க வேண்டும்... இந்த உறுதியோடு சத்தமில்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.

This is entry #39 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.