(Reading time: 16 - 32 minutes)

"நா அப்படி சொல்லலை சிவா... நான் அவங்கக் கூட இருந்துதான் இதைப் பண்ணனும்ன்னு இருந்தேன்... ஆனா அவங்கத்தான் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க... கல்யாணம் செஞ்சுக்கிட்டு நீ என்னவேணும்னாலும் செஞ்சுக்கன்னு சொல்றாங்க... எனக்கு அதுல விருப்பமில்லை... நான் என்ன பண்ணட்டும்..."

"கயல் அவங்களை விட்டுட்டு வருவதும்... அவங்க மனசை கஷ்டப்படுத்துவதும் ஒன்னு... உன்னோட கல்யாணம் தான் அவங்களுக்கு சந்தோஷம்...

நீ ஏன் பிரசாத் கிட்ட உன்னோட விருப்பத்தை சொல்லக் கூடாது... அவர் உன்னோட விருப்பத்துக்கு ஒத்துக்கலாமே.."

"ஒத்துக்கலாமே என்ன... ஒத்துப்பாரு தான்... அப்படி அவள் சொல்லும் போது பிரசாத்தே அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான்,

"நான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னதுக்கே என்னைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு பிடிவாதமா இருக்காரு... நான் சொன்னா ஒத்துப்பாரு தான்... ஆனா அது என்மேலே இருக்க மயக்கத்துல சொன்னதா தான் இருக்கும்...

அதை நம்பி நான் அவரை எப்படி கல்யாணம் செஞ்சுப்பேன்... அப்புறம் அவர் மாறிட்டாருன்னா... இதுவரைக்கும் நான் ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றேன்னு அவர் என்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க முயற்சி செய்யவேயில்லையே..."

"........"

"அப்படியே நான் கல்யாணம் செஞ்சுக்க ஒத்துகிட்டு... என்னோட விருப்பத்தை பிரசாத் கிட்ட சொல்லி அவர் ஒத்துக்கலன்னா... அப்புறம் இன்னொருத்தர்... அவர் ஒத்துக்கலன்னா இன்னொருத்தர்...

என்னோட ஆசையை நிறைவேத்திக்க... நான் அவங்கக்கிட்ட அனுமதி வாங்கனும்... இது தான் பொண்ணுங்களுக்குன்னு இருக்க விதிமுறை... இல்ல சிவா..??"

"நீ பேசறது சரிதான்... ஆனா பிரசாத் நீ வேண்டாம்னு சொல்லியும்... உன்னை கல்யாணம் செஞ்சுக்க பிடிவாதமா இருக்காருன்னா... அது உன்மேலே வச்ச அன்பா கூட இருக்கலாமில்ல... அதனால அவர் உன்னோட ஆசையை நிறைவேத்தலாம் இல்ல... அவர் மேலே நம்பிக்கை வையேன்...

பிரசாத்தை கூட விடு... உன்னோட அப்பா அம்மா மேலே நம்பிக்கை வை... உன்னோட ஆசையெல்லாம் தெரிஞ்சவங்க... இந்த கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறாங்கன்னா... கல்யாணத்துக்கு அப்புறம் இதையெல்லாம் நிறைவேத்துற மாப்பிள்ளையை தானே பார்த்துருப்பாங்க..."

"..........."

"நீ பாஸிட்டிவா யோசியேன் கயல்... ஒருவேளை உன்னோட ஆசைக்கு பிரசாத் ஒத்துக்கிட்டா... அவரோட ஹெல்ப் கூட நம்ம இல்லத்துக்கு கிடைக்கலாமே.... அவர் மூலமா அவர் ஃப்ரண்ட்ஸ் ஹெல்ப் கூட கிடைக்கலாம்...

அப்படி அவர் ஒத்துக்கலன்னா கூட உன்னோட பினான்ஷியல் ஹெல்ப் கிடைக்கலன்னா என்ன...??? நீ உனக்கு டைம் கிடைக்கறப்போ இந்த இல்லத்துக்கு வந்து இவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணாலே போதும்...

நீ எங்களுக்கு உதவி செய்யலைன்னு நாங்க உன்னை ஒதுக்கிடமாட்டோம்... என்ன ரகு அப்படித்தானே..."

"ஆமாம் கயல்... நீ எங்க ஃப்ரண்ட் உன்னை நாங்க அப்படி ஒதுக்கிடுவோமா..."

"சே..சே.. உங்களை பத்தி எனக்கு தெரியாதா..."

"இங்கப் பாரு கயல்... நம்பிக்கையோட இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ... எல்லாம் நல்லதாவே நடக்கும்..."

"சரி சிவா... அப்பா, அம்மா, நீ எல்லாரும் என்னோட நல்லதுக்கு தான் சொல்வீங்க... நான் பிரசாத்தை கல்யாணம் செஞ்சுக்கிறேன்... என்னோட விருப்பத்தை அவர் புரிஞ்சிப்பாருன்னு நம்பறேன்..."

"ஆ... அப்புறம் அருணா அம்மாக்கூட என்கிட்ட அவ வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தப்பட்டாங்க... நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்... நானே அருணாவை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு... ரெண்டுப்பேரும் இங்க இருந்து இந்த இல்லத்தை கவனிச்சிப்போம்... நீங்க வெளிய இருந்து ஹெல்ப் பண்ணுங்க...

இன்னும் இதை அப்பாக்கிட்டயோ... அருணா கிட்டயோ... சொல்லலை, உங்கக்கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்றேன்..."

"ஹே சிவா... கங்கிராட்ஸ் டா... இது நல்ல முடிவு..."

"சிவா... உனக்கு கல்யாணம்ன்னு சொல்றப்போ... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..."

"எனக்கு கல்யாணம்னா நீ எவ்வளவு சந்தோஷப் படுற... அந்த மாதிரி தானே உனக்கு கல்யாணம்னா எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்...

இங்கப் பாரு உன் கல்யாணத்துக்கு நாங்கெல்லாம் வருவோம்... நீ உன்னோட ஹஸ்பண்ட்க்கு எங்களை அறிமுகப்படுத்தி வைக்கனும்..."

"கண்டிப்பா சிவா... முதலில் எல்லோருக்கும் இன்விடேஷன் வைக்கனும்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.