(Reading time: 16 - 32 minutes)

"ல்லடா சிவா... இவதான் எனக்கு ஃபோன் பண்ணி நான் சொன்னா... சிவா கேக்கமாட்டான்... நீ தான் எனக்கு சப்போர்ட்டா பேசனும்... நீயும் எனக்கு ஹெல்ப்க்கு வரலைன்னா... நான் வேறெங்காவது போய்டுவேன்னு... மிரட்டினா...

அதுமட்டுமில்லாம... சரியா சாப்பிடறதேயில்ல போல... ரொம்ப டயர்டா தெரிஞ்சா... அதான் என்ன கெட்டியா பிடிச்சுக்க சொல்லி கூட்டிட்டு வந்தேன்....

"ஏன் சிவா... இது தப்பா... எத்தனை முறை நாம ஃபிரண்ட்ஸ் எல்லாம் வெளியே போய்ட்டு நைட் ரிடர்ன் வரும்போது கேர்ள்ஸ் தனியா போகறது ஸேஃப் இல்லன்னு நாம பைக்ல ட்ராப் பண்ணியிருக்கோம்... அப்படி கூட்டிட்டு போய் விட்டப்ப கூட கயலோட அம்மா அப்பா ஒன்னும் சொன்னதில்லையேடா...????

"ரகு அது அப்போ... ஆனா கயலுக்கு இப்போ கல்யாணம் ஆகப்போகுது... இந்த நேரத்துல உங்க ரெண்டுப்பேரையும் பார்த்துட்டு மாப்பிள்ளை வீ்ட்ல தப்பா சொல்லி அவ கல்யாணம் நின்னுடுச்சுன்னா... நாம போய் நாங்க ஃப்ரண்ட்ஸ்ன்னு எல்லார்க்கிட்டயும் நிரூபிச்சிக்கிட்டு இருக்க முடியாது...

ஃப்ரண்ட்ஷிப் மனசுக்குள்ள இருந்தா போதும்டா... நம்ம ஃப்ரண்டுக்கு நாமே அவப்பெயர் தேடி தரக் கூடாது..."

"ஸாரி டா..."

"சிவா... இப்போ எதுக்கு இவனுக்கு லெக்சர் குடுத்துக்கிட்டு இருக்க... நானே இந்த கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன்... இதுல இந்த கல்யாணம் நின்னுடக்கூடாதுன்னு இவன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க..."

"கயல் நீ செய்யறது தப்பு... அம்மாவும் அப்பாவும் பத்திரிகை வைக்க ஊருக்கு போயிருக்க இந்த சமயத்துல நீ பாட்டுக்கு பேகை தூக்கிக்கிட்டு இங்க வந்திருக்க... உன் மேலே எவ்வளவு நம்பிக்கை இருந்தா அவங்க உன்னை தனியா விட்டுட்டு போயிருப்பாங்க....

நீ இப்படி செய்தன்னு தெரிஞ்சா அவங்க தாங்கிப்பாங்களா..."

"நானும் அவங்களுக்கு எதிரா எதுவும் செஞ்சிடக்கூடாதுன்னு தான் இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்.... ஆனா கல்யாண நாள் நெருங்க... நெருங்க... என்னோட ஆசையெல்லாம் நடக்காம போயிடுமோன்னு பயமாயிருக்கு சிவா.."

"இங்கப் பாரு கயல்... நீ அவங்களுக்கு ஒரே பொண்ணு... உனக்கு கல்யாணம் செஞ்சு பார்க்கறது தான் அவங்களோட ஆசை... நீ கல்யாணத்துக்கு பிறகு கூட உன்னோட ஆசையை நிறைவேத்திக்கலாமே..."

"என்ன சிவா... நாமெல்லாம் நம்ம படிப்பு முடிஞ்சதும்... என்ன முடிவு பண்ணியிருந்தோம்... உங்க அம்மா ஞாபகமா...உங்க அப்பா நடத்தற இந்த இல்லத்தை நீ தொடர்ந்து நடத்தப் போறன்னு சொன்னதும்... நாங்களும் உனக்கு பினான்ஷியலா... ஹெல்ப் பண்றோம்ன்னு சொன்னோமே... அதுமட்டுமில்ல எனக்கு இந்த இல்லத்துக்கு இன்னும் ஏதாவது செய்யனும்... இந்த இல்லத்தை இம்ப்ரூவ் செய்யனும்... நான் முழு ஈடுபாட்டோட செய்யனும்...

இதுக்கெல்லாம் கல்யாணம் தடையா இருக்கும்... அம்மா அப்பாவே சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க.... என்னோட புகுந்த வீட்டில் எப்படி புரிஞ்சிக்குவாங்க...

நீ கூடத்தான் இந்த இல்லத்தை பார்த்துக்க... கல்யாணம் செஞ்சுக்க போறதில்லைன்னு உறுதி எடுத்துருக்க..."

"என்னோட கதை வேற கயல்... என்னை லவ் பண்ண சுதா என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும்... உனக்கு துணையா இருப்பேன்னு

சொல்லிட்டிருந்தவ... அப்புறம் இதெல்லாம் ஒத்து வராதுன்னு சொல்லிட்டு வேற கல்யாணம் செஞ்சுக்கிட்டா...

இதுக்குமேலே நான் இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சு... அவ எனக்கு துணையா இந்த இல்லத்தை பார்த்துப்பான்னு நம்பிக்கையில்லை... அதான் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்லைன்னு சொன்னேன்"

"அப்போ அருணா கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்லி இந்த இல்லத்துக்கே வந்துட்டாளே... அதை நீ ஒத்துக்கிட்டியே.."

"கயல், அருணாவுக்கு கர்ப்பபையில் ஏதோ பிரச்சினை... குழந்தை பொறக்காது... அதனால அவ கல்யாணம் தடையாகுது... அவங்க அப்பா அம்மாக்காக கல்யாணத்துக்கு ஒத்துகிட்டவ... இப்போ எந்த வரனும் சரியா அமையாததால... கல்யாணம் வேண்டாம்ன்னு முடிவுப்பண்ணி இங்க இருந்து சேவை செய்ய வந்துட்டா... அதுவும் அவங்க அப்பா அம்மாவுக்கு இவ இல்லாம ரெண்டு பசங்க இருக்காங்க... அவங்க ரெண்டுப்பேரும் அப்பா அம்மாவை பார்த்துப்பாங்க"

"அப்போ பொண்ணுங்களுக்கு ஏதாவது குறை இருந்தா தான் இந்த மாதிரி சேவையெல்லாம் செய்யனுமா..?? சிவா"

"நா அப்படி சொல்லல கயல்... குறை இருந்தா தான் சேவை செய்யனும்னு இல்லை... ஆனா மனசு நிறைவோட தானே சேவை செய்யனும்...

அனாதை குழந்தைகளையும், ஆதரவற்றவங்களையும் பார்த்துக்க... உன்னோட அப்பா அம்மாவை தவிக்க விட்டுட்டு வரப்போறியா...???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.