(Reading time: 22 - 43 minutes)

முதல் காதல் - வாழ்க்கைக்கு வலி தரும் தடமா? வழித் தடமா? - உஷா

This is entry #40 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

Only love

ன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

“போராடுவோம்... போராடுவோம்.. கல்லூரி இடமாற்றத்திற்கு போராடுவோம்”,

கோஷமெழுப்பி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் அந்த சட்டக்கல்லூரி மாணவர்கள். கல்லூரியை விரிவாக்கும் பொருட்டு வேறு இடத்திற்கு மாற்ற நிர்வாகம் முடிவெடுத்து இருக்க அதை தடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது!

கோஷமெழுப்பி கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்ட  மாணவர் தலைவனான வினயனிடம்,

“மச்சி, கத்தி கத்தி தொண்டை வலிக்குது.. ஒரு தம் போட்டு வரலாமா?”, அவன் நண்பன் கிசுகிசுக்க...

“ம்ம்.. போலாம்! அதுக்கு முன்னால எல்லாரும் ஸ்ட்ரைக்கிற்கு வந்துட்டாங்களான்னு செக் பண்ணியாச்சா?”

“எல்லா இயர் பசங்களும் வந்துட்டாங்கடா..”,

“ஹாஸ்டல் பசங்க??”,

“வந்துடாங்க மச்சி!”

“பொண்ணுங்க சைட்ல?”

“அது நம்ம கல்பனா தான் பார்த்துக்கிட்டு இருந்தா!”, என்று சொல்ல, கூட்டத்தில் அமர்ந்து கோஷமெழுப்பிக் கொண்டிருந்த கல்பனாவை வருமாறு வினயன் கையசைக்க, எழுந்து வந்தவளிடம்,

“பொண்ணுங்க எல்லாரும் வந்துட்டாங்க தானே?”, கேட்டான் வினயன்.

“அல்மோஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்க வின்னி”, என்று அவள் சொல்ல..

“அதென்ன ஆல்மோஸ்ட்? எல்லாருக்காக தானே ஸ்ட்ரைக் பண்றோம்! எவ எவளாம் எஸ்கேப் ஆகியிருக்கா?”

“செகன்ட் இயர்ல ராஜிக்கு டைபாய்ட்! நம்ம செட்ல காயத்ரிக்கும் ஏதோ பெர்சனல் எமர்ஜென்சின்னு நேத்தே போயிட்டா.. இது தவிர பானுன்னு பர்ஸ்ட் இயர் பொண்ணை தான் ஆளையே காணோம்.. விசாரிச்சா யாருக்கும் தெரியலை!”

“பானுவா? பர்ஸ்ட் இயர்! யார் அந்த பர்தா பார்ட்டியா?”,

வினயன் கேட்டதும்... அவள் ஆமாமென்று தலையசைக்க..

இவனுக்கு நினைவிற்கு வந்தது அந்த பர்தா போட்ட பெண் பானு. வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. முதல் நாள் அன்றே, சீனீயர் மாணவனாய் தன் நண்பர்களுடன் சேர்ந்து  அவளை சுற்றி வளைத்து ராகிங் செய்தான் வினயன்.

“இப்படி அங்கியை போட்டுக்கிட்டு முகத்தை மூடிகிட்டு வந்தா.. எங்களுக்கு எப்படி பொழுது போகும்?”, என்று முகத்தை காட்ட சொல்லி மிரட்ட, அதை தடுத்தான் இவன் முஸ்லீம் நண்பன்.  நம் ஆர்வத்திற்காக, மத உணர்வுகளை தூண்ட கூடாது என்று இவனும் விட்டு விட்டான்

கல்பனா பானுவை சொன்னதும்,

“எவ்வளோ கொலுப்பு இருந்தா ஸ்ட்ரைக்கிற்கு வராம கம்பி நீட்டியிருப்பா?”, கொதித்தனர் வினயனை சுற்றி இருந்த அவன் நண்பர் குழு. அவர்களை அடக்கிய வினயன் கல்பனாவிடம்,

“எங்க போயிருக்காளாம்? விசாரிச்சியா?”, என்று வினவ அதற்கு அவள்,

“யாருக்கும் தெரியலை!  அவ ஃப்ரண்ட்டை கூப்பிட்டு வரட்டா? கேட்டு பார்க்கிறியா?”, என்று கேட்க ..

அவன் பதில் பேசவில்லை.. அமைதியாய் சிகரெட்டை உள்ளிழுத்து, புகையை வெளி விட்டவன்,

“எப்படியும் காலேஜ்க்கு தானே வந்தாகணும்! அவளை படுத்துற பாடுல இனி ஒருத்தியும் இப்படி செய்ய மாட்டா”, என்றான் கோபக் குரலில்.. எஞ்சிய சிகரெட்டை காலில் போட்டு நசுக்கிய  படி...

பானு கல்லூரிக்கு திரும்ப இரவாகி விட்டது. பேருந்தில் இருந்து இறங்கியவள், அலைபேசியை உயிர்ப்பித்த படி கல்லூரிக்குள் நுழைந்த பொழுது தான் தோழியின் குறுந்தகவலைப் பார்த்தாள் பானு. 

மாலையே போராட்டம் முடிவிற்கு வந்து விட்டதாகவும், சீனியர்கள் அவள் வராததை பெரிதாக கண்டு கொள்ளவில்லை  என்ற அந்த தகவலைப் படித்ததும்,

‘ஹப்பாடா தப்பிச்சோம்’, என்று நிம்மதியாய் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அந்த கல்லூரி வளாகம் மிகவும் பெரியது. சில மைல்கள் நடக்க வேண்டியிருந்தது பெண்கள் விடுதிக்கு! கல்லூரி விடுதிக்கு செல்லும் வழி முழுக்க இருள் கவ்வியிருந்தது!

ஆள் நடமாட்டம் இல்லாமல் நிசப்தமான அந்த இருளில்  தன் காலடி சத்தத்தை கேட்கவே  ஒரு வித பய உணர்வை உருவாக்கியது - பானுவிற்கு! மனதிற்குள் தைரியத்தை வரவழைத்து கொண்டு, வேக எட்டுக்குள் வைக்க ஆரம்பித்தாள்...

அப்பொழுது அவள் காலடி சத்தத்துடன் இணைந்தது ஒரு சத்தம்! பயம்! பயம்! திரும்பி பார்க்கக் கூட பயம்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.