(Reading time: 22 - 43 minutes)

 

வள் முகம் சட்டென்று வாடுவதை கவனித்த வினயன்,

“பானு! இந்த ஸீட் கூட காலியா தான் இருக்கு!”, என்று தன் மறு பக்கம் இருந்த காலி இருக்கையை காட்டவன் தன்னை அருகில் வந்து உட்கார சொல்கிறான் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை! ஆனால்..

‘வைஃப்பை வைச்சிகிட்டு என்ன பேசுறான்?’, திகைத்தவள் அந்த பெண்ணைப் பார்க்க...

“என் ஒருத்தியாலே சமாளிக்க முடியலை! இனி நீங்க தான் டேக் ஓவர் பண்ணனும்”, என்று அவள் சொல்ல.. இவள் மொத்தமாக குழம்பி விழிக்க..

“டேக் ஓவர்ன்னு  சொன்ன பத்தாது... கிளம்பணும்! பாரு ஆன்ட்டியும், அங்கிளும் டீசன்ட்டா கிளம்பிட்டாங்க!”, என்று அவன் சொன்ன பொழுது தான் கவனித்தாள் அவள் அம்மாவும், அப்பாவும் அங்கிருந்து எழுந்து கொள்வதை...

“நீ பேசிகிட்டு இரு! நாங்க வந்துடுறோம்”, என்று கிளம்பியவர்களிடம்  பேசி விட்டு திரும்புவதற்குள்.. தன்னருகில் வந்து அமர்ந்தவனை பானு வியந்து நோக்க...

இவர்களுக்கு பின்னாலிருந்தவளோ அவளை அழைத்து,

“பானு! எங்க அண்ணா அல்ரெடி நாலு வருஷம் வெயிட் பண்ணிட்டான்.. இனி நாலு செகன்ட் கூட வெயிட் பண்ண மாட்டான்!”, அவனுக்கு சிபாரிசு செய்து விட்டு

“டேய், பாரு! நான் எவ்வளோ டீசன்ட்டுன்னா ஐஸ் ப்ரேக் செய்துட்டேன்.. இனிமேலாவாது ஒழுங்கா க்ன்ட்டின்யூ!”, அவன் தலையில் தட்டி சொல்லி விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விட..

‘நாலு வருஷம் வெயிட் பண்ணிட்டான்’

அவன் தங்கை சொல்லி சென்றதை உள்ளூர ரசித்தவளின் தோள் மேல் சலுகையாக கை போட்டு அவன் நெருங்கி அமர... உள்ளுக்குள் பொங்கிய புது உணர்வு ஒன்று அவன் செய்கையை தடுக்காது, அவனையே அண்டிக் கொள்ள துடித்தது!

அவளைப் போல அவன் இன்னும் உணர்வு தாக்கத்தில் ஆட்படவில்லை! அவனிடம் ஒரு  தீவிரம் இருந்தது. இத்தனை நாள் மவுனம் காத்திருக்கிறானே! மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி விட வேண்டும் என்ற ஒரே எண்ணமே ஓட... அவள் கரம் பற்றி..

“உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்ன தோணும் தெரியுமா?”

என்று ஆழ்ந்த குரலில் அவன் சொன்ன பொழுது, காதல் என்று சொல்வான்  என்று இவள் எதிர்பார்த்திருக்க.. அவனோ,

“உன் வலியை... அதாவது இன்னும் ஆறாமல் உன் மனசில் உள்ள வலியை பகிர்ந்துக்கணும்ன்னு தோணும்!”,

வேதனையுடன் அவன் சொன்னது அவளையே அசைத்தது போல அவனை நோக்கி நிமிர்ந்தாள்..

“ஆமாடா!!! உன் வலியை ஷேர் செய்ய தோணும்! ஆனா, அதை சொல்றதுக்கும் ஒரு தகுதி வேணும்ல!”,

“உன்னை விரட்டி வந்த அன்னைக்கு கூட குடிச்சிருந்தேன்!  குடிச்சிட்டு மிரட்டினா தான் பொண்ணுங்களுக்கு பயம் இருக்கும்!  எங்களைப் பார்த்ததாலே ரவுடின்னு பயந்து விலகி ஓடுவாங்கன்னு நினைச்சு தான் அப்படி செய்தோம்!”

“ஆனா, உன் மேல இருக்கிற தடங்களை பார்த்தப்போ.. விரக்தியில் நீ பேசுனதை கேட்டப்போ... அதுலயும் பொம்பளையா பிறக்கிறதை விட என்ன பாவம் செய்தேன்னு கேட்டியே! இந்த நிலைக்கா ஒரு பொண்ணை கொண்டு வந்துட்டோம்ன்னு... ஆம்பிள்ளையா இருக்கிறதே அந்த நிமிஷம் அவமானமா தோணுச்சு”

“பாழாப்போன உடம்புன்னு சொன்னியே.. அந்த உடம்பு எத்தனை வேதனை அனுபவிச்சு இருந்தா அப்படி சொல்லியிருப்ப!! நினைச்சு பார்க்க கூட முடியலை!”, என்றவனின் குரல் தேய்ந்தது...

பின்னர், தொண்டையை செருமி தன்னிலைக்கு வந்தவன், 

“உலகத்திலே  கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா? நாம கஷ்டத்தில் இருக்கிறப்போ.. மத்தவங்க சிரமத்தை நினைச்சு.. அவங்களுக்கு உதவணும் நினைக்கிறது தான்! அடையாளமே அழிஞ்ச நிலையிலும்.. உனக்கு அந்த மனசு வந்தது பாரு!!!”

“அப்பேர்ப்பட்ட பொண்ணோட  வலியை பகிர்ந்துக்கிறேன்னு சொல்றதுக்கும் ஒரு தகுதி வேணும்ல... அந்த தகுதியை அடைஞ்ச பிறகு தான் பேசணும்னு நினைச்சேன்!”

“அதான் வைராக்கியமா ஃபேர்வெல் அப்போ கூட பேசலை!”, என்று சொல்லி விட்டு அவளைப் பார்க்க...

அவளுக்கு என்ன பேசவென்றே தெரியவில்லை...

‘என்னை இவ்வளவு உயர்வாக நினைத்திருக்கிறானா!’, என்ற சந்தோஷம்.. ‘இதற்கு போய் பேசாமல் தவிக்க விட்டானே’ என்ற கவலை..

உணர்ச்சி கலவையாக இருந்த அவள் முகத்தை பார்த்தவனுக்கு இப்பொழுது குறும்பு எட்டி பார்த்தது..

“நான் தான் உன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை! ஆனா, நீ பேசிகிட்டே தான் இருந்தே!”, என்று அவன் சொன்னதும் துணுக்குற்ற பானு,

“நானா?”, என்று கேட்க..

“ம்ம்.. நீ தான்”, இவன் சொல்ல...

“நான் தம் அடிச்சா.. சைட் அடிச்சா... எப்படி திட்டுவ என்னை?”, என்று கேட்க பெரிதாக விழித்தவள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.