(Reading time: 16 - 32 minutes)

னால் ஏன் திருமணம் வேண்டாமென்று மறுக்கிறாள்... கயலின் பெற்றோர் ஏன் அவளை கட்டாயப்படுத்துகிறார்கள்... இதை அவள் பெற்றோரிடமே கேட்டுவிட்டான்...

அதற்கு அவள் பெற்றோர் கூறியது சாதாரணமாக தான் இருந்தது... திருமணம் என்றதும் கொஞ்சம் பயப்படுகிறாள் என்றும்... அவர்களை விட இவர்கள் வசதியாக இருப்பதால்... திருமணத்திற்கு பின் வேலைக்கு அனுப்புவார்களோ... என்றும் பயப்படுகிறாள் என்று கூறினார்கள்.

அவளின் பயத்தை திருமணத்திற்கு பின் பக்குவமாக பேசி சரி செய்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்துக் கொண்டு.... அவன் சந்தோஷமாக நிச்சயத்தார்த்தத்தில் கலந்துக் கொண்டான்,

இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்... அந்த மோதிரம் மாற்றும் தருணத்தில் கூட கயல்விழி இவனிடம் "இப்பக் கூட டைம் இருக்கு இந்த நிச்சயத்தை நிறுத்திடுங்க.." என்று சொல்லும் போது எப்படியாவது அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற மன உறுதி இவனுக்கு அதிகரித்தது.

அதன்பிறகு இன்றுவரை அவள் இவனுடன் தொடர்பு கொண்டு திருமணத்தை நிறுத்த சொல்லி கேட்கவில்லை... கயல் இந்த திருமணத்தை செய்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டாள் என்று இவன் நினைத்தான்,

இவனும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை... வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறிவிட்டால்... அதனால் திருமணம் நடக்கும் வரை பொறுத்திருந்தான்.

ஆனால் இன்று  அவள் இதுவரை காத்த மௌனம் இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என்ற யோசனையோ..?? என்று இவனுக்கு தோன்றியது, திருமணத்தை நிறுத்த ஊரை விட்டுப் போக முடிவெடுத்து விட்டாளோ..??

முதலிலேயே அவளிடம் பேசி பிரச்சினையை தெரிந்துக் கொண்டிருக்கலாமோ...?? கொஞ்ச நாட்களில் திருமணம் என்ற நிலையில் இவள் ஏதாவது செய்து வைத்தாள்... இரண்டு குடும்பத்திற்கும் எவ்வளவு அவமானம்...

அதை விட இவளுக்கு இதனால் என்னென்ன பிரச்சினைகள் வருமோ... இவளுக்கு இந்த திருமணத்தில் இருக்கும் குழப்பத்தை... யாராவது தவறாக உபயோகித்தால்...?? இப்போது அவளுடன் போகிறவன் நண்பன் என்ற பெயரில் அவளுக்கு உதவி செய்கிறேன் என்று கூறி அவளுக்கு ஆபத்தை விளைவித்தால்...

இதெல்லாம் இப்போது இவனின் கற்பனை தான்... ஒருவேளை சாதாரணமாக கூட அவனுடன் அவள் செல்லலாம்... ஏன் இது அவனுடைய பேகாக கூட இருக்கலாம்... ஆனால் அவளின் வாட்டமான முகம் தான் இதையெல்லாம் சிந்திக்க வைக்கிறது... திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை என்று அவள் கூறியபோது கூட அவள் முகம் பொலிவாகவும் அழகாகவும் இருந்தது... ஆனால் இன்று ஏன் அப்படியிருக்கிறாள்.

ஒருவேளை அவளுக்கு வேண்டியவர்களுக்கு ஏதாவது பிரச்சினையோ... இவன் சிந்தித்து கொண்டிருந்தபோது அந்த பைக் திருவான்மியூரில் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் சென்றது, கயல்விழிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்தால் போதும் அவனுக்கு... அவனும் பின் தொடர்ந்தான், அப்போது அந்த பைக் ஒரு வீட்டு வாசலின் முன் நின்றது... இவனும் கொஞ்சம் தள்ளியே அவன் பைக்கை நிறுத்தினான்.

அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்... இவனும் சில நிமிடங்கள் கழித்து அவர்களுக்கு தெரியாமல் மெதுவாக அந்த வீட்டின் பக்கம் சென்றான்... அந்த வீட்டின் மதில் சுவரின் வெளிப்பக்கம் ஒரு மரம் இருந்தது.... அதன் பின் நின்று கொண்டான்... வெளியில் இருந்து மதில் சுவரை தாண்டி அந்த வீடு நன்றாக தெரிந்தது... அந்த வீட்டின் முன் சாரதா ஆர்பேன்ச் என்று ஆங்கிலத்திலும்... சாரதா இல்லம் என்று தமிழிலும் எழுதியிருந்தது,

யல்விழியும் அவளுடன் பைக்கில் சென்றவனும் இன்னும் ஒரு புதியவனும்... நின்று கொண்டிருந்தார்கள்... இவன் நின்று கொண்டிருந்த மதில் சுவரின் உள்புறம் ஒரு சிறிய விளையாட்டு பூங்கா போல் அமைக்கப்பட்டிருந்தது,

அந்த பூங்காவின் பக்கம் அவர்கள் மூவரும் வந்தார்கள்... அவர்களுக்கு தெரியாமல் பிரசாத் மறைந்துக்  கொண்டான்... இப்போது அவர்கள் இவனுக்கு அருகில்... அவர்கள் ஏதாவது பேசினால் கூட நன்றாக கேட்கும்...

இப்போது இங்கு நிற்கலாமா... இவர்கள் பெசுவதை கேட்கலாமா.. இது தவறு இல்லையா... என்று பிரசாத்திற்கு குழப்பமாக இருந்தது... இருந்தாலும் கயலுக்கு எதுவும் பிரச்சினை இல்லை என்று தெரிய வேண்டுமே... அதனால் அங்கேயே அவர்களுக்கு தெரியாமல் நின்று கொண்டான்.

முதலில் அந்த புதியவன் தான் பேச ஆரம்பித்தான்..

"ரகு... அவ சொன்னா... அவளை கூட்டிட்டு வந்துடுவியா.... என்கிட்ட அத சொல்லனும்ன்னு உனக்கு தோனாதா...??

அதுவும் பைக்கில வச்சு கூட்டிட்டு வந்துருக்க... அவளுக்கு கொஞ்ச நாளில் கல்யாணம் நடக்கப் போகுது... மாப்பிள்ளை வீட்டு சைட்ல யாரவது பார்த்தா என்னடா ஆகறது... இவ நம்மல அவ ப்யான்ஸ்க்கு இண்ட்ரடியூஸ் கூட பண்ணல..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.