(Reading time: 15 - 30 minutes)

ப்படியோ பேருந்து நிலையம் வந்து சேர்ந்தவளுக்கு தந்தை கண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. ‘ஜீவா எங்கடா இருக்க?’. ‘கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன்பா.. மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன் அப்புறம் கூப்புடுறேனு சொல்லியிருக்காங்க.. ஆனா எனக்கு கூப்புடுவாங்கனு தோணலப்பா’.

‘பரவாயில்லைம்மா நீ பத்திரமா வா’.. ‘ம்ம்ம்’, வைத்துவிட்டாள்.

நல்ல மதிப்பெண், தொழில்நுட்ப அறிவு, பொது அறிவு, பேச்சுத்திறமை, நாகரிகத்தோற்றம் என எல்லாம் இருந்தும் ஏனோ ஜீவாவிற்கு வேலை மட்டும் கிடைக்கவில்லை. அந்த ஐந்து மணிநேர பயணமும் சுயஅலசலிலும் சுயபச்சாதாபத்திலுமே போனது.  

ஜீவா வீட்டிற்கு வந்த மறுநாள் சுசிலா வீட்டின்முன் மூன்று பேர் நின்று வாசலில் இருந்த வேப்பமரத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘அம்மா பாலா வீட்டு முன்னாடி யார்யாரோ நின்னுகிட்டு வேப்பமரத்தையே பாத்துகிட்டு இருக்காங்க’-ஜீவா.

‘அவுங்க வீட்ல மரத்த வெட்டபோறங்களாம் அதான் ஆள் வந்து பாத்துட்டு இருப்பாங்க’-சித்ரா

‘ஓ! சரி.. நா பாலா வீட்டுக்கு போய்ட்டுவரேன்’ என்றபடி ஜீவா அவர்கள் வீட்டை நோக்கிச் சென்றாள்.

சுசிலாத்த.. என்று அழைத்துக்கொண்டே உள்ளேச் சென்றாள்.  ‘வா ஜீவா வந்து உட்காரு’ என்றார் சுசிலா. ‘அத்த வாசல்ல இருக்குற மரத்த வெட்டபோறீங்களா??’ கேட்டாள் ஜீவா.

‘ஆமா ஜீவா.. போர்டிகோ கட்டபோறோம் அதான் இப்பகூட ஆளுங்க வந்துப் பாத்துட்டுப் போனாங்க’ என்றார் சுசிலா.

அதுக்கு ஏன் மரத்த வெட்டனும் என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே வாசலில் சுசிலாவின் கணவர் வரும் சத்தம் கேட்டது.

‘அடடே ஜீவாவா! வா வா’ என்றபடி வந்தார் மாதவன்.

‘மாமா வேப்பமரத்த வெட்டபோறீங்களா??’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். ‘ஆமாம்மா போர்டிகோ கட்டனும் அதுக்கு மரத்த வெட்டனும்’. என்று பதிலளித்தார் மாதவன். ‘அதுக்கு ஏன் மரத்த வெட்டனும் அது பாலா தாத்தா வச்ச மரம்தானே , நாமளால இப்ப ஒரு மரம் வச்சு இவ்ளோ பெருசா வளர்க்கமுடியுமா, மரத்த வெட்டாம கட்டலாம்ல’ என்று கேட்டாள் ஜீவா.

எனக்கும் கூட விருப்பம் இல்ல மா ஆனா மரம் இடைஞ்சலா இருக்கே.. அத வெட்டாம கட்டமுடியாதே ஜீவா.

‘ஏன் முடியாது, இங்க பாருங்க’, என்று தன் கைப்பேசியில் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்த சில படங்களைக் காட்டினாள். அதில் மரங்களை வெட்டாமல் அதைச் சுற்றியே கட்டப்பட்டிருந்த சில கட்டிடங்கள் இருந்தன.   

‘இப்டியெல்லாம் கட்டனும்னா நிறைய செலவு ஆகுமேம்மா’ - மாதவன்.

‘அப்டியெல்லாம் இல்ல.. நீங்க வேணும்னா அந்த மேஸ்திரிட்ட கேளுங்க’-என்றாள்.

கால்மணி நேரம் மேஸ்திரியிடம் பேசிய மாதவன் ‘நம்ம பட்ஜெட்லயே மரத்த வெட்டாம கட்டலாம்னு மேஸ்திரி சொல்லிட்டாரு ஜீவா இப்ப சந்தோஷமா??’ என்று கேட்டவுடன் ‘சூப்பர் மாமா.. நா வரேன், அத்த போய்ட்டு வரேன்’ என்று வாசல்வரை வந்தவளை ‘ஏய் பச்சமிளகா !! என்ன எங்க வீட்டுபக்கம் காத்தடிக்குது ‘ என்று பாலாவின் குரல் வழிமறித்தது.

‘ச்சீ போடா கோலா உருண்டை’ என்று பழிப்புக் காட்டிவிட்டு ஓடிவிட்டாள் .

அவள் வந்துபோன காரணத்தை தன் தாயிடம் கேட்டு அறிந்தவன், ’இந்த பச்சமிளகாவுக்கு மரம், செடி, கொடின்னா லவ்வோ லவ்வு .. இன்னும் அப்டியே தான் இருக்கா’ என்ற பாலாவின் முகத்தில் புன்னகை.

‘ஜீவா ரொம்ப நல்ல பொண்ணுடா.. ஆனா ஒரு வேலைக் கிடைக்க மாட்டேங்குது’ என்று வருத்தப்பட்டார் சுசீலா. அதைக் கேட்டு ஒரு யோசனையுடனே தன் அறைக்குச் சென்றான் பாலா. 

பாலா ஜீவாவின் தோழன். அவளைவிட மூன்று வயது பெரியவன். ஜீவாவின் சுபாவத்திற்கு அவளுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் ஆனால் இன்று வரை எதிலுமே பாலா தான் முதன்மையானவன். பாலாவிற்கும் அப்படிதான்.

ஒரு முடிவோடு அடுத்தநாள் ஜீவாவின் வீட்டிற்குச் சென்ற பாலாவை வாசலில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த செல்வா தான் வரவேற்றான். செல்வா என்ற செல்வபாரதி, ஜீவாவின் தம்பி, இரண்டாம் வருடம் இளங்கலை கணிதம் பயில்கிறான்.

‘என்னடா உங்க அக்கா அடிச்சிட்டாளா.. இப்புடி உக்காந்துருக்க?’ என்ற பாலாவிடம் ‘இல்ல பாலாண்ணா அக்கா இன்னைக்கு அழுதுடுச்சி’ என்றான் பாவமாக.

‘ஜீவாவா?? ஏன்?’ என்று அதிர்ச்சியாய் கேட்ட பாலாவிடம் சற்று முன் நடந்தவற்றை கூறினான் செல்வா.

சில மணிநேரத்திற்கு முன்பு,

‘அத குடு, மேட்ச் பாக்கணும்’, என்று ஜீவாவின் முதுகில் தட்டிய செல்வா அவள் கையில் வைத்திருந்த டிவி ரிமோட்டைப் பிடுங்கிக்கொண்டான்.

‘நா சும்மாதான டா இருக்கேன்.. ஏன்டா அடிச்ச?’ –ஜீவா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.