(Reading time: 11 - 22 minutes)

ன் மருமக கூட சண்டை போட்டியா ?”..இவ்வளவு நேரம் மற்றவர்கள் மீது தப்பா ?என்பது போல கேள்வி கேட்ட அன்னை, தீபிகாவின் விஷயத்தில் மட்டும் அவள் பக்கம் நின்றார்..எப்போதும் இதுபோன்ற உரையாடலை ரசிப்பவன் இப்போது சுள்ளென எரிந்து விழுந்தான்..

“ ஏன் மஹாராணி வாழ்க்கையில தப்பே பண்ண மாட்டாங்களா” என்று கேட்டான் கோபமாய்..அவனது கேள்வியின் தொனியினிலேயே அவள்தான் காரணம் என்பதை கண்டுகொண்டார் வள்ளி.

“ சரி தீபிகா என்ன தப்பு பண்ணாள்?”..நேரடியாகவே அவர் வினவ ஷ்யாமிற்குள் ஏதோ சுரீர் என்றது..என்னதான் அவள் தன்னிடம் உண்மையை மறைத்தாலும் அது அவர்களுக்குள் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றல்லவா ? இப்போது நடந்ததை வெளிப்படையாய் கூறினால் வள்ளி தீபிகாவை என்ன நினைப்பார்? என்னத்தான் தனது தாய் அப்படி தவறாய் சிந்திக்க மாட்டார் என்று அவனுக்கு தெரிந்தாலும், அவனால் அவளை விட்டுகொடுத்து பேசமுடியவில்லை..

“ப்ச்ச்..ஒன்னும் இல்ல.. விடுங்கம்மா”

“சரி நீ சொல்லாட்டி போ ..நான் அவளையே கேட்குறேன்” என்று வள்ளி ஃபோனை எடுக்க, அவரை தடுத்தான் ஷ்யாம்.. வேறு வழி இல்லாமல் நடந்ததை சொல்லி முடித்தான்..

“ அம்மா, நானே இதபத்தி தீபிகாகிட்ட பேசிக்கிறேன்..நீங்க அவளை தப்பாக நினைக்காதிங்க.. என்னால அதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்றான் ஷ்யாம்..அவன் கன்னத்தை வருடி சிரித்தார் வள்ளி..

“முட்டாள்.. உனக்கு இப்போ என்னடா குழப்பம் ? நீயாகவே அவளுக்காக பரிந்து பேசுற.. அப்படின்னா அவ மேல தப்புன்னு உனக்கு தோணலதானே ? அப்பறம் எதுக்கு ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு மண்டைய பிச்சுகிட்டு இருக்க ?”என்று சிரித்தார்..

“ அப்படி இல்லம்மா … அவ பொய் சொன்னது கண்டிப்பா தப்புத்தான் ! அவ யாரோ ஒருத்தியாய் இருந்தால் மன்னிச்சு இருப்பேன்..ஆனால் தீபி என் வருங்கால மனைவி ..என் வாழ்க்கையை நான் அவளோடு வாழப்போறேன்.. என்னோடு வாழப்போகும் என் மனைவி ரொம்ப சின்ன விஷயத்துல கூட பொய் சொல்றா…அதை நான் எப்படி பொறுத்துக்க முடியும் ? இனிமேல் எனக்கு அவள் மீது எப்படி நம்பிக்கை வரும் ?” என்றான் ஷ்யாம் .. அவனை பார்த்து அமைதியாய் புன்னகத்தார் வள்ளி..

“நீ சொல்லுறத கேட்கும்போது எனக்கு ஒரு உண்மை சம்பவம் தான் நியாபகம் வருது” என்றார் அவர்.. தான் துவண்டு நிற்கும் நேரத்தில் எல்லாம் தனது தாயார் இப்படி கதைகள் சொல்வது வழக்கம்..அதனால் பதில் கேள்வி கேட்காமல் அவரைப் பார்த்தான் ஷயாம்..அவனது மௌனத்தை சம்மதமாய் ஏற்று நடந்ததை சொன்னார் வள்ளி..

“ இது நடந்து 30வருஷம் இருக்கும் கண்ணா.. எனக்கு தெரிஞ்ச ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த உண்மை இது.. அவள் பெயர் வேதா.. அவள் ஒரு மகப்பேரு மருத்துவர்.. மத்தவங்களுக்கு உதவி செய்றதுன்னா, எவ்வளவு ரிஸ்க் வேணும்னாலும் எடுப்பா.. நேர்மையானவள் அன்பானவள் அழகானவள்ன்னு அவளை பாராட்டி சொல்ல நிறைய இருந்தது ..அந்த நிறைகளுக்கு நடுவில் கரும்புள்ளியாய் இருந்தது ஒரே ஒரு விஷயம்..அதுதான் அவளது தோழி தாரிகா.. தாரிகா ஒரு விலைமாது”

“அம்மா ??”

“ம்ம்ம் ஆமா..இப்போ எல்லாம் விலைமாதர்களை கண்டதுமே முகம் சுளிக்கிற குணம் நம்ம சமுதாயத்துல கொஞ்சம் குறைஞ்சிருக்கு ..ஆனா, அப்போ அப்படி  இல்லை … புறம் பேச தயாராய் இருந்தவர்களின் நடுவே தாரிகா- வேதாவின் நட்பும் தவறாய் தான் பேசப்பட்டது..

தனக்கு இருக்கும் அவப்பெயரினால் தாரிகா அதிகம் வெளியே வரமாட்டாள்… அதனால் தனது தோழியை வேதாவே அந்த இடத்திற்கு சென்றுபார்ப்பது வழக்கம்..

இது வேதாவின் கணவனுக்கும் பிடிக்கவில்லைத்தான்..ஆனா மனைவி மீது கொண்டுள்ள அன்பு அவரை பொறுமையாய் இருக்க வைத்தது..இந்த நேரத்துல தான் தாரிகா கருவுற்றிருந்தாள்.. தனக்குன்னு ஒரு வாரிசு வேணும்.. அதன் மூலமாய் புது வாழ்க்கை வரும்ன்னு அவ ரொம்ப  நம்பினாள்”’

“…”

“ இதனால அவளை தேடி வந்தவங்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றம்.. அவளை இகழ்ந்து பேசியவங்களுக்கு குதூகலம், இவர்களுக்கு இடையில் தானே தாயானதை போல சந்தோஷப்பட்டாள் வேதா.. முன்பை விட வேதா, அடிக்கடி தாரிகாவுடன் இருக்க வேண்டியதாய் போனது.. இதனால், வேதாவும் அதே தொழிலை செய்கிறாள்ன்னு நாக்கூசாமல் பேசினாங்க… வேதாவின் கணவரால் இதை ஏற்றுகொள்ள முடியாமல் போக, வேதாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார்”

“ச்ச…. இது என்னம்மா முட்டாள்தனம் ? கர்பிணி பெண்ணுக்கு உதவுறது தப்பா ? யாரு தப்பா நினைத்தாலும் அவர் கணவர் எப்படி இப்படி நினைக்கலாம் ? இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் ஒரு ஹீரோன்னு மனசுல நினைச்சேன்… ஆனா அவரும் சராசரி ஆண்தானா… இவரை எல்லாம்….”

“ டேய் டேய் போதும்டா… உன் அப்பாவை நீயே திட்டாதே”

“என் அப்பாவா ? என்னம்மா சொல்லுறிங்க ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.