(Reading time: 16 - 31 minutes)

வசரத்தில் வந்த கிருஷ்ணனின் பைக்கும், எதிரில் வந்த இன்னொரு ஆட்டோவும் நேரெதிராய்  மோதும் நிலையில் இருவருமே சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினர்.. “ முண்டம்..சாவு கிறாக்கி வீட்டுல சொல்லிட்டு வந்தியா ? சாவுறதுன்னா எதாவது லாரிலபோயி மோதுடா பொறம்போக்கு” என்று தனது ஏகவசனத்தை ஆட்டோ ட்ரைவர் ஆரம்பிக்க, தன் மீதுதான் தவறு என்பதால் பதில் ஏதும் பேசாமல் பைக்கை பின்னே எடுத்தான் கிருஷ்ணன். அருகில் இருந்த இன்னொரு ஆட்டோவில் அமர்ந்திருந்த ஹசீனா இந்த காட்சியை கண்டதும் “ இடியட் எப்படி வண்டி ஓட்டுறானுங்க” என சற்று எரிச்சலுடனேயே கூறினாள்.. முதல் கோணல் முற்றிலும் கோணலாகிடுமா ?

அன்றிரவு, இரண்டு பீர் பாட்டில்கள் கிருஷ்ணனை வரவேற்றன ..(யாரங்கே,குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு இங்க ஒரு போர்ட் வைங்கப்பா)

“வரவர இது வீடா இல்ல பாரா தெரியல” – கிருஷ்ணன். “ டேய் மகனே, இன்னைக்கு எவனோ ஒருத்தன் நம்ம ஆர் கே நகர் சிக்னல்ல ஷேர் ஆட்டோமேல வண்டிய சொருகி செம்ம திட்டு வாங்கினானாமே” என்றார் கார்த்திக் நக்கலாய்.. “உ…உ..உனக்கு எப்படி தெரியும் ?”.. “ அந்த ஏரியா ட்ராஃபிக் காண்ட்ஸ்டபல்,நம்ம குமாரு தான் டா.. அவருதான் ஃபோன் போட்டு சொன்னாரு.. நீயாச்சும் என் சட்டையில தான் க்ரீஸ் தடவின, ஆனா அந்த ஆட்டோக்காரன் உன் மூஞ்சி மேலயே க்ரீஸ் தடவிட்டான்.. இனிமேயாச்சும் பெரிய மனுஷனை பகைச்சிகாதடா தம்பி” என்றார் அவர் கிண்டலாய்..

“ யோவ் தகப்பா,நான் அப்போவே நெனச்சேன் நீதான் சாபம் விட்டுருப்பன்னு”

“ விட்ரா விட்ரா கொழி மிதிச்சு குஞ்சு சாகாது” என்று போதையுடன் கார்த்திக் அபிநயம் பிடிக்க,தந்தையும் மகனும் சேர்ந்தே சிரித்தனர். சற்று நேரத்தில் அறைக்குள் சென்று எதையோ கொண்டு வந்தார் கார்த்திக். “கைய காட்டுடா”.. “ ஏன்பா, ப்ரேசிலட் எதாச்சும் போட போறியா?”.. அவன் கையில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டப்படி “ சொன்னான்டா குமாரு, உன் பையன் கையில லேசாய் கீரல் வாங்கினான்னு.. ஆனா,கொஞ்சம் பலமாவே காயம் பட்டுருக்கு போல” என்றார்..” அப்பா, பரவாயில்ல, உனக்கு செண்டிமண்ட் சீன் கூட நல்லா வருதே.. பேசாம விஜய் டீவியில அப்பாகேரக்டருக்கு நடிக்க போயிடு…” என்று கிருஷ்ணன் வார,தந்தையும் மகனும் சேர்ந்து சிரித்தனர்.

ஃபிசில், முக்கியமான ஃபைல்களை பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணன், அலறிய செல்ஃபோனில் கவனம் சிதர ஃபோனை எடுத்தான்..

“ ஹலோ, இஸ் திச் கிருஷ்ணா?”

“ யெஸ், ஐ எம் கிருஷ்ணா..நீங்க?”

“ நான் ஹசீனா, பதறாதிங்க,நீங்க கொஞ்சம் பீ எஸ்வீ ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?”

“என்னாச்சு ?”

“ ஒன்னும் இல்ல. நான் ஷேர் ஆட்டோவில் வரும்போது உங்க அப்பா மயக்கம் போட்டுட்டார்.. லொவ் ப்ரெஷர்.. நீங்க கொஞ்சம் வர்ரிங்களா ?”

“ப…பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றவன் சொன்னதுபோலவே பதறி அடித்துகொண்டு அங்கு வந்தான். பற்றத்தில் வந்தவன் சட்டென ஒரு காரில் மோதி விலக,அன்று போல் இன்றும் கெட்ட வார்த்தையில் அவனுக்கு அபிஷேகம் நடந்தது..அதை தூரத்தில் இருந்து பார்த்த ஹசீனா “ச்ச,இந்த பொறுக்கிக்கு வேற வேலையே இல்ல போல” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்..

தனது தந்தை இருக்கும் அறையை தெரிந்துகொண்டு ஓடி வந்தான் கிருஷ்ணா..

“ வா தம்பி.. எனக்கு ஒன்னும் இல்ல டா ..லைட்டா லொவ் ப்ரெஷர்”

“ காலைல சாப்பிட்டியாப்பா ?”

“ ரெண்டு இட்லி சாப்பிட்டேன்.. அது என்னவோ தீடீர்ன்னு மயங்கிட்டேன்.. நீ முதலில் வா..இவனுங்க  லொவ் பீ பிக்கு எல்லாம் ஸ்கென்னிங் எடுப்பானுங்க போல.. காசை கறக்குறதுக்குள்ள ஓடிருவோம்” என்று கார்த்திக் சிரிக்க, தந்தையை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தான் கிருஷ்ணன்.. சிறிது நேரம் கழித்து “ யாருப்பா அந்த ஆன்ட்டி, எனக்கு ஃபோன் பண்ணது?” என்றான். “ ஆன்ட்டி இல்லடா…என்கூட ஆட்டோவில் வந்தா, காலேஜ் படிக்கிற பொண்ணு..எந்த காலேஜ்மா படிக்கிறன்னு கேட்டேன்..அவள் பதில் சொல்லும்போதுதான் மயங்கிட்டேன்.. அப்பறம் உன் ஆஃபிஸ் நம்பர் கொடுத்து தான் உனக்கு ஃபோன் பண்ணசொன்னேன்”

“அந்த பொண்ணு நம்பர் உங்கிட்ட இல்லையா ?”

“இல்லடா”

“யோவ் தகப்பா,அந்த பொண்ணோட,பேராச்சும் தெரியுமா ?”

“ தெரியாதுடா.. ஆனா அது ஒரு முஸ்லிம் பொண்ணு” என்று மகன் கேட்காமலே தகவல் தந்தார் தந்தை. அன்றைய நாள் கிருஷ்ணாவிற்கு கேள்விகுறியாகவே முடிந்தது..

டுத்த நாள், அவன் எதிர்ப்பார்க்காமலேயே அவன் நினைத்தது நடந்தது.. கார்திக்கை காலையிலேயேஃபோனில் அழைத்திருந்தாள் ஹசீனா.. அவரை நலம் விசாரித்துவிட்டு நிம்மதியுடன் அவள் ஃபோனை வைக்க, கார்த்திக் உடனே கிருஷ்ணனுக்கு ஃபோன் போட்டார். அவரது ஃபோனை உடனேஎடுக்காமல் சிறிது நேரம் கழித்து எடுத்தான் கிருஷ்ணன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.