(Reading time: 16 - 31 minutes)

ப்படியாய் நாட்கள் நகர, கார்த்திக் ஹசீனாவை தற்செயலாய் சந்தித்தார்.. அவளோடு பேசியப்போதுதான், அவர்களுக்குள் நடக்கும் பனிப்போரை பற்றி கூறினாள் அவள்.

“அன்னைக்கு புல்லா அவன் என் கூடத்தான் மா இருந்தான் ..என்னை படம் பார்க்ககூட்டிட்டு போனான்.. football match பார்க்க கூட்டிட்டு போனான்.. பார்வையற்ற குழந்தைங்க இல்லதுக்கு கூட்டிட்டு போனான்.. என்னை சந்தோஷமா பார்த்துகிட்டான்மா அவன்…அவன் ஃபோன்ல பேட்டரி இல்ல..அதான் உன்னிடம் பேசல..

“ அன்னைக்கு உங்க பிறந்தனாளா அங்கிள்?”

“ இல்லம்மா.. என் மனைவி என்னை பிரிஞ்ச நாள்.. எனக்கு அவ நியாபகம்வர கூடதுன்னு இவ்வளவு பண்ணான்.. கிறுக்குபையன்..என் மனைவி நியாபகம் எனக்கு எப்படி வராமல் போகும்? எல்லாரும் அவனை நான் அம்மா மாதிரி பார்த்துக்குறேன்னு சொல்றாங்க..ஆனா அவந்தான் என்னை மனைவி மாதிரி பார்த்துகிட்டு இருக்கான்… அவன் தாயில்லா பிள்ளைதான் மா..ஆனா பொறுக்கி இல்ல..ஒரு விஷயம் பிடிக்கலன்னா ஒதுங்கிடுவான்..ஆனா பொய்யா நடிக்க மாட்டான்.. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்மா “ என்றாரவர்.. அவர்வார்த்தையில் வாயடைத்து போனாள் ஹசீனா.. அதன் பிறகு என்ன? மறுநாளே அவன் வீட்டிற்கு சமாதான புறாவாய் பறந்து போனாள்… கிருஷ்ணா ஹசீனாவின் முதல் சந்திப்பு அவர்களது வீட்டிலேயே அரங்கேரியது.. அதன்பின் நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, ஹசீனாவின் பிறந்தநாளும் வந்தது..

அவனின் முதல் வாழ்த்துக்காக காத்திருந்தவளை வழக்கம் போல ஏமாற்றினான் கிருஷ்ணன்.. வழக்கம்போல என்னை மறந்துவிட்டானே அவன் என்று மனம் சினுங்கினாள் ஹசீனா..

அன்றைய தினம் சோகமாய் போக காலேஜ் முடிந்து வெளிவந்தவளை கிருஷ்ணனின் செல்ஃபோன் அழைத்தது..அருகிலிருந்த டீ கடைக்கு அவளை அழைத்தான் அவன்..அளும் ஆவலோடு காத்திருக்க அவனுக்கு பதிலாய் கையில் பூவுடன் சிறுமி வந்து “ ஹெப்பி பெர்த்டெ” என்றாள்.. “யார் தந்தது?”என்று அவள் கேட்க “கிச்சா அங்கில் என்று  மழலை மொழியில் பதில் வந்தது.. இதே போல மொத்தமாய் 20 சிறுவர்கள் வந்து வாழ்த்த 21 வது சிறுவனாய் கையில் கேக்குடன் நின்றான் கிருஷ்ணன்.. சந்தோஷமும் ஆச்சர்மமும் சேர அவனை பார்த்தாள் ஹசீனா.. அவளுக்கு தன்னிலை பெற அகவாசமே கொடுக்காமல் ஆச்சர்ய மழையில் நனைத்தான் கிருஷ்ணன்..இறுதியாய் பெசன் நகரில் பீச்சருகில் இருந்த சர்ச்சுக்கு அவளை அழைத்து சென்றான்.. “ உனக்கும் வேணாம் எனக்கும்வேணாம்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றான்..

சிறு தலையசைப்புடன் அன்றைய நாளை அன்றிரவு ஃபோனில் தனது உணர்வுகளை வெளிபடுத்தினாள்..

“ஹேப்பி பெர்த்டே டீ சாரீ இப்போதான் உனக்கு விஷ் பண்ணுறேன்”

“தேங்க்ஸ் டா”

“ட்ரீட்டு எங்க ?”

“அய்யடா லாஸ்ட்டா விஷ் பண்ணவங்களுக்கு எல்லாம் ஒன்னும்கிடையாது”

“ஹேய் இது போங்காட்டம்..வா மறுபடியும் பெர்த்டே கொண்டாடலாம்”

“யம்மோவ் போதும்டா..நான் ஏற்கனவே ஃப்லாடாகிட்டேன்… ஆனாலும் நீ ஏன்டா எனக்கு 12மணிக்கு விஷ் பண்ணல”

“சாரி டீ சர்ப்ரைஸ்காகத்தான்”

“அது பாட்டுக்கு இருந்துட்டு போகுது..நீ எனக்கும் முதல்ல விஷ் பண்ணி இருக்கலாம்ல? ரொம்ப எதிர்பார்த்தேன் தெரியுமா?”

“அப்படியா ஏனாம் ?” என்று குறும்பாய் சிரித்தான் அவன்..

“ராஸ்கல்” என்று மனதிற்குள் அவனை திட்டினாள்.

“ஹெலோ இருக்கியா இல்ல தூங்கிட்டியா டீ ?”

“ ம்ம் இருக்கேனே..”

“அப்போ சொல்லு, ஏன் அப்படி?”

“ அதெல்லாம் அப்படித்தான்.. சரி நீ சொல்லு, ஏன் எனக்கு அப்படி எல்லாம் விஷ் பண்ணின நீ? நான் என்ன அவ்வளவு ஸ்பெஷலா ?”

“ என்னடீ இப்படி கேட்டுட்ட?”

“ஹான்…சொல்லு உனக்கு நான் எவ்வளவு ஸ்பெஷல்”

“சுருக்கமா சொல்லவா?இல்ல டீடைல்லா சொல்லவா ?” என்றான் அவன்.

“ முதல்ல சுருக்கமா சொல்லு, அப்பறம் டீடைல்லா சொல்லு” என்றாள்.

“ சொன்னா என்ன டீ தருவ ?”

“ நீ சொல்லு அப்பறம் நான் கண்டிப்பா தரேன்” என்றாள்.

“ம்ம்ம் எப்படி சொல்லுறது “ என்று ஆழ்ந்து சிந்தித்தான் கிருஷ்ணன்..

“சீக்கிரம் சொல்லு எரும”

“அய்யய்ய இரும்மா நான் ஃபீல் பண்ணிக்கிறேன்” என்றவன், “ஹான்….” என்று ஆரம்பித்தான்.

“என் அம்மாவிற்கான தேடல் முடிந்தது உன்னிடம்” என்றான் கிருஷ்ணன்.

“ ஹேய் என்னடா சொல்லுற, நான் உனக்கு அவ்வளவு முக்கியமா ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.