(Reading time: 16 - 31 minutes)

“  ன்னம்மோ பிசியா இருக்குற மாதிரியே, ஃபோனை லேட்டா எடுக்குற? டேய் தம்பி அந்த பொண்ணு ஃபோன் பண்ணிச்சு டா .. அதான் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்தாளே ஹசீனா”

“செம்ம பா.. எனக்கு நம்பர் அனுப்பிவிடு”

தனது மகனின் குரலில் தெரிந்த ஆவலை கவனித்த தந்தை வீ டி வீ கனேஷ் குரலில் “ டேய் தம்பி அவ்வளவு அவசரம் ஆவாது டா…வீட்டுக்கு வா தரேன்..இங்க என்ன சொல்லுது ஹசீனா ஹசீனா சொல்லுதா ? வைட் பண்ணு டாட்டா” என்று ஃபொனை வைத்தார்.. “ அட தகப்பா, நீ சொல்லாம இருந்திருந்தலே நான் என் வேலையை பார்த்துட்டு இருந்துருப்பேனே..இப்போ 6 மணிவரை காத்திருக்கனுமா?”என்று புலம்பியவன், மதியம் அவரது ஆஃபிசுக்கே சென்றான்..

“ என்னடா இவ்வளவு லேட்டா வந்துருக்க ? நான் நீ ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே வந்துருப்பன்னு நினைச்சேன்” என்று வாரினார். “போதும்பா, நீ முதல்ல நம்பர் கொடு” என்றவாறு அவரிடம் நம்பரை வாங்கி சேவ் செய்தவன் வாட்ஸப்பை திறக்க,அதில்  ஏதோ குழந்தை படத்தை வைத்திருந்தாள் ஹசீனா.. ஏமாற்றமாய் உணர்ந்தவன், ஆவலை கட்டுபடுத்த முடியாமல் “'Hi this is Krishna, son of Karthick, u admitted my dad and helped me, thank u so much Haseena'   என்று அனுப்பினான்.. அவன் அனுப்பிய மெசேஜ் சென்றடைந்துவிட, அவளது பதிலுக்காக காத்திருந்தான் கிருஷ்ணன்… உடனே ஹசீனாவும் ( வைட் வைட் உடனே பதில்

சொல்ல இதென்ன சினிமாவா ? ரெண்டு நாள் போகட்டுமே)

ரண்டு நாட்கள் கடந்தும் அவளிடம் இருந்து பதில் இல்லை .. “ என்னடா நான் வேணும்னா என் என் பையங்கிட்ட வாட்ஸ் அப்ல பதில் அனுப்பலன்னு ஃபோன் பண்ணி கேட்கவா ?”என்றார் கார்த்திக்.. “ அப்படி எல்லாம் யாரும் சொல்லி அவ பேசத் தேவை இல்ல” என்று அரைமனதாய் கூறினான் கிருஷ்ணன்.. சரியாய் ஒருவாரத்திற்கு பிறகு

“ ஓ நீங்கதான் அவரா ? சாரி எனக்கு எக்சாம் இருந்தது” என்றபடி பேச ஆரம்பித்தாள் ஹசீனா… இருவருக்கிடையே பரஸ்பர அறிமுகதிற்கு பிறகு உருவானது நட்பு.,

அடுத்து நட்பின் இரண்டாம் நிலையாய், ஹசீனாவை நேரில் காண விரும்பினான் கிருஷ்ணன்.. முதலில் தயங்கியவள், ஒருவாறாய் சம்மதிக்க, தந்தையின் கேலிப் பேச்சை வழக்கம் போல சமாளித்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தான் கிருஷ்ணன்.. அவனுக்கு முன்பே அங்கு வந்திருந்தாள் ஹசீனா.. கிருஷ்ணனின் ஃபொனில் அந்த நேரம் சிக்னல் இல்லாமல் போக எரிச்சலுடன் அவன் நிற்க அவனை கண்டுக்கொண்டாள் ஹசீனா.. “ இந்த பொறுக்கியா ?” என்று முகம் சுளித்தவள் எதோ உள்ளுணர்வு தோன்ற, இவந்தான் கிருஷ்ணனோஎன்று சந்தேகித்தாள்.. ஒரு தூண் மறைவில் நின்று கொண்டு அவனை அழைக்க ஃபோனை எடுத்தான் கிருஷ்ணன்.. வார்த்தைகள் தந்தியடிக்க, ஒருவாறாய் முடிவுக்கு வந்தவள்

“ எனக்கு வீட்டுல அர்ஜண்ட்டா ஒரு ப்ரச்சனை … நான் இப்போவே போகனும் ..சாரி” என்று ஃபோனை வைத்தாள்.. ஏமாற்றமும் கோபமும் கொப்பளிக்க தரையை காலால் உதைத்தவன், பைக்கை எடுத்துகொண்டு வீடு சேர, அவன் தந்தையோ நேரம் காலம் தெரியாமல்

“என்னடா ஹசீனா பிரியாணி தந்தாளா?” என்றார்.. அவன் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை கண்டவர், “ஓ பல்ப்பு தந்தாளா? பாத்ரூம்ல ஒரு பல்ப் எரியல வந்து மாட்டி விட்டுறு” என்றார்..அவருக்கு பதில்பேச கூட தோன்றாமல் அறைக்குள் வந்தவன் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

“ ஏன் உனக்கு என்னை பார்க்க புடிக்கல? “ என்றான்..அவன் மெசேஜ் பார்த்து வெகுண்டவள்,

“ உனக்கு எப்படி தெரியும் நான் வந்தேன்னு” என்றாள்.. இப்போ அதிர்ச்சியாவது அவன் முறையானது..

“ அப்போ நீ வந்தியா ? வந்து ஏன் என்னை பார்க்கல?” என்றான்..முதலில் தயங்கியவள்பிறகு உண்மையை கூறினாள்.. அவள் கூறியதில் கோபம் வந்தாலுமே அவள்பக்கம் உள்ள நியாயத்தை ஆராயத் தெரியாதவன் இல்லை கிருஷ்ணன். அதனால் தன்னிலை விளக்கத்தை பொறுமையாகவே அளித்தான்.. ஆனால் முதல் கோணள் முற்றிலும் கோணலென்பது போல அவனது விளக்கத்தை ஏற்க மறுத்தது அவள் மனம்! இரண்டு நாள் மௌனதிற்கு பின் அவள் மன்னிப்பு கேட்டுவிட, மீண்டும் தொடர்ந்தது அவர்களின் நட்பு..

ந்தமுறை ஹசீனா அவனை நேரில் சந்திக்க திட்டமிட மீண்டும் விதி விளையாடியது..மறுநாள் தந்தையை காலையிலேயே எழுப்பினான் கிருஷ்ணன். “ எழுந்திரிப்பா,நான் உனக்கு இன்னைக்கு ட்ரீட் வைக்கிறேன்..நாம வெளில போறோம்” என்றபடி அவரை தயாராக வைத்தான்..அவனது ஃபோனில் பேட்டரி குறைவாக இருக்கவும், ஃபோனை வீட்டிலேயே வைத்துவிட்டு தந்தையுடன் கிளம்பினான்..

தந்தையுடன் படம் பார்த்துவிட்டு,  இருவருமாய் பிரியாணி சாப்பிட சென்றனர்.. “அடுத்து எங்கடா ? வீட்டுக்குத்தானே” என்று கார்திக் கேட்கவும், மறுப்பாய் தலையசைத்தவன் கண் பார்வயற்ற குழந்தைகளை சந்தித்து தந்தையுடன் நன்கொடை கொடுத்தான்..அதன்பின் சென்னை காற்பந்து குழுவின் டீ ஷர்ட்டை தந்தைக்கு தந்து தந்தையும் மகனும் காற்பந்து அரங்கத்திற்கு சென்று வந்தனர்..அன்றைய தினம் இருவருக்கும் சந்தோஷமாய்  கழிய, அதற்கு நேரதிராய் கொலைவெறியில் இருந்தாள் ஹசீனா.. காலையில் இருந்து அவனை சந்திக்க விரும்புவதாய் அவள் அனுப்பிய ஒரு மெசேஜ்கும் பதில் இல்லாமல் போகவும் “பழி வாங்கிட்டல்ல?” என்ற கேள்வியுடன் அவனை ப்லோக் செய்திருந்தாள் அவள்.. அன்று இருந்த மனநிலையில் அவனும் அவளை தொடர்பு கொள்ளவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.