(Reading time: 21 - 42 minutes)

"வ்ஸ் "

"ம்ம்"

" நீ சந்தோஷமா இருக்கியா ?"

" ரொம்ப ரொம்ப "

" இந்த சந்தோசம் இன்னும் பல மடங்கு கூடுற மாதிரி நான் உன்னை பத்திரமா பார்த்துப்பேன் லவ்ஸ் "

"எனக்கு தெரியும் மாமா .. நம்ம பசங்களை விட நீ என்னைத்தான் ஜாஸ்த்தி செல்லமாய் பார்த்துப்ப.. பார்க்கணும் !!" என்று ஆர்டர் போட்டாள்  அவள் ..

"அடியே உன் பொசசிவ்னஸ்  க்கு அளவே இல்லையா ? பாவம் டீ நம்ம குட்டிஸ்  .. அவங்களை தான் நான் பர்ஸ்ட்  கவனிப்பேன் "என்றவன் கூறினான் ..

"டேய் போடா ,நான் இல்லாம உனக்கு குழந்தைங்க வானத்துல இருந்து பிறப்பாங்களா ? அதெல்லாம் முடியாது.. நான்தான் எப்பவும் உன் செல்லம் "என்று செல்லம் கொஞ்சினாள்  அவள்..

"சரிங்க மேடம் ... உங்க பேச்சை கேட்டு நடந்துக்குறேன் " என்று போலியாய் அவன் நடிக்க

" நான் கொஞ்சம் ஓவரா பண்ணுறேனா  மாமா  ? ஆனா உண்மை இதுதான் ! நம்ம குழந்தைங்க நம்ம உயிராகவே இருந்தாலும் ,எனக்கு நீதான் ரொம்ப முக்கியம் மாமா.. உனக்கு அப்பறம் தான் எனக்கு எல்லாம் .."என்றவளுக்கு லேசாய் குரல் கம்மியது..

"ஹே லூசு என்னடி ஆச்சு "

"இல்லடா ,உன்னை பார்த்தப்போவே எனக்கு தெரிஞ்சது நான் உனக்குத்தான்னு .. ஆனா நீ என் பக்கத்துல வரும்போதெல்லாம் எதோ ஒன்னு என்னை உன்கிட்ட இருந்து கூட்டிட்டு போகிற மாதிரி பயம்மாவே இருந்தது டா.. என் காதலை கூட நான் உன்கிட்ட ஆரம்பத்தில் சொல்லாமல் இருந்ததுக்கு இதுதான் காரணம்.. ஆனா, இப்போ எல்லாம்  சரி ஆகிடுச்சு.. இனிமே நம்மை யாரும் பிரிக்க முடியாதுன்னு நினைக்கும்போது சந்தோஷமாய் இருக்கு "

" லவ்ஸ்... அப்படி எல்லாம் உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன்..அப்படியே போனால் , உன்னையும் கூட்டிட்டு போய்டுவேன்.. ஐ லவ் யூ டீ லவ்ஸ் "என்று அவன் போனில் முத்தமிட,

"லவ் யூ டூ  டா மாமா ". அதுதான் கடைசியாய் கார்த்திக் அவளிடம் ஆசையாய் பேசிய இரவு .. மறுநாள் "மாப்பிளை மண்டபத்தில் இல்லை " என்ற சலசலப்புடன் அவள் கையில் ஒரு கடிதமும் கிடைத்தது..

வெவ்வேறு நதிகளாய்  இருந்தோம்

அன்பால் இணைந்தோம்

பிரியும் நேரம் மிக அருகில் வந்துவிட்டது

தேடாதே , அருகில் வந்தால் விலகி போவேன்

- கார்த்திகேயன்

கனவிலும் நினைக்காத பிரிவு ! ஏன் என்ற காரணம்  அறியாமலே அவள் கட்டி வைத்த காதல் மாளிகை உடைந்தே போனது.. அவனின் பேச்சை மீறி ,அவனை தேட முயன்று தோல்வியை தழுவினாள்  லாவண்யா .. ஒரு அளவிற்கு மேல்,அவள் வெளி உலகையே மறந்தவளாய் வாழத் தொடங்கி விட்டாள் ..தனது அறைக்குள்ளேயே  இருளில் இருப்பதும் அவ்வப்போது "கார்த்தி " என்று அலறுவதும்தான் அவளது வாடிக்கை ! அவளின் நிலையை கண்டு பெற்றோர்களும் மனம் உடைந்து போயினர்.. கிட்ட தட்ட 4 மாதங்களுக்கு பிறகு அவளை சந்தித்த விக்னேஷ் அவள் இருந்த கோலத்தை பார்த்து பயந்தே விட்டான் .. அவன் வந்து சென்ற மறு நாளே அவளுக்கு புது எண்ணில்  இருந்து போன் வந்தது..

"ஹலோ "

" நான் கார்த்திகேயன் பேசுறேன் "

"மாமா"

"ம்ம்"

"நீ எங்க இருக்க ? என்ன ஆச்சு ? என் மேல எதுவும் கோபமா ? எனக்கு உன்னை பார்க்கணும் இதுதான் உன் நம்பரா ?" கண்ணீருடன் அவள் கேள்விகளை அடுக்க ,அவனோ இறுகிய குரலில் பேசினான் ..

"லா ...வ...ண் ..யா " முதல் முறையாய் அவன் அவளது பெயரை முழுமையாய் அழைக்க , அதிர்ச்சியுடன் மௌனமானாள்  லாவண்யா..

" என்னை நிம்மதியா விட மாட்டியா ?"

"மாமா "

"நான்தான் கேட்குறேன் ..எனகுன்னு ஒரு வாழ்க்கை இருக்கு ..அதில் எது அவசியம் எது அவசியம் இல்லைன்னு எனக்கு தெரியும் "

".."

"இந்த கல்யாணம் எனக்கு அவசியம்ன்னு படவில்லை..உன் காதலும்தான் !"

"நீ பொய் சொல்லுற .. நீ எதையோ மறைக்கிற ?"

"ஏய்" என்று அவன் அதட்ட , அவளின் முதுகுத் தண்டு சில்லிட்டது..! கார்த்திக் இப்படி இதற்கு முன் குரல் உயர்த்தியதே இல்லை ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.