(Reading time: 6 - 12 minutes)

டுத்த நாள் சக ஊழியர்களிடம் எனது நோக்கத்தை எடுத்துச்சொன்னேன்.

பிரதம சமையல்காரரும் அவரோடு குசினியில் வெலை செய்பவர்களும் தாம் தமது சொந்த நேரத்தில் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு முன்வந்தார்கள்.

“வறுமையில் இருந்த தனது விதவைத் தாயும், ஒரு காலத்தில் அந்த சூப் கிட்சினில் உதவி பெற்றவர். இப்போது அவள் ஒரு கல்லூரியின் அதிபர்”, பிரதம சமையற்காரர் பெருமையாகச் சொன்னார்.

எமது இந்த முடிவைக் அறிந்த ஹோட்டலுக்கு காய்கறி, இறைச்சி,மற்றும் பண்டங்களை விற்கும் வியாபாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முந்தி அடித்துக்கொண்டு எங்களுக்கு தேவையான பொருட்களை இலவசமாக தர முன்வந்தார்கள். வியாபாரத்தைப்  பெருக்க, விளம்பரத்துக்கு அலைபவர்கள் அவர்கள். நல்ல காரியத்துக்காக எதையும் வாங்க நான் தயார்.

மார்கழி பன்னிரண்டாம் நாள், எல்லாம் தயார், மூன்று சமையல்காரர், மூன்று  சர்வர்கள், மூன்று அதிகாரிகள் எல்லோரையும் அழைத்துக்கொண்டு எனது வானில் புதிதாக சமைத்த உணவு, பாத்திரங்கள் எல்லாவற்றுடன், முப்பத்து ஐந்து கில்லோ மீட்டரருக்கு அப்பாலுள்ள சூப் கிட்சினை நோக்கிப் போகிறோம்.

மெனு தயார்! சாப்பிடும் மேசைகளில் வழமைக்கு மாறாக சீலைகள் விரிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன! சாப்பாடும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொருத்தராக வாடிக்கையாளர்கள் வந்து அமரந்  தொடங்கினார்கள்.

வாடிக்கையாளர்கள் எங்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். வறுத்த கோழியின் வாசனை, பல வகையான மரக்கறிகள், குளிர் பானங்கள்,, இனிப்பு பண்டங்கள், காப்பி.

எல்லாவற்றையும் இரசிச்சுச் சாப்பிடுகிறார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும் ஒவ்வொருவராக  வந்து நன்றி சொல்லிச் செல்கிறார்கள்.

ஒரு தாய் என் கையைப் பிடித்து அழுத்தியபடி “என் வாழ் நாளில் இப்படி ஒரு சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டதில்லை சார்!” என்று சொல்கிறாள்.

என்னால் என் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை அடக்கமுடியவில்லை.

ஒருவன், யாரோ குடித்து எறிந்த சிகரெட் துண்டுகளை நிலத்திலிருந்து பொறுக்கிக் கொண்டிருக்கிறான்.

என் மகன் அவன் செய்வதைக் கண்டதும் ஓடிப் பொய் அவன் கையிலிருந்த துண்டுகளை எடுத்தெறிந்து விட்டு தனது சட்டை பையிலிருந்த புது சிகரெட் பக்கெட்டை எடுத்துக் அவனிடம் கொடுக்கிறான். அவன் செய்கை என்னை புல்லரிக்கச் வைத்தது.      

என் மகன் பிடிக்கிறானோ என்று சந்தேகப்பட்டு விட்டேனே என்று கவலைப்பட்டேன்.  

 தன்மானத்தையும், மரியாதையையும் அந்த பொழுதுபோக்கிட ஹோட்டல்  மதிய போசனம் அளித்து விட்டது”   

அதுதான் அடுத்தநாள் வெளிவந்த  "சில்லவக் புரோகிரேஸ்" என்ற  ஆங்கிலப்பத்திரிகையின் தலையங்கம்.

ஹோட்டலுக்கு அந்த ஊர் மக்களிடமிருந்தும் ஹோட்டல் வாடிக்கையாளரிடமிருந்தும் புகழாரம்.

பலர் அமெரிக்காவிலிருக்கும் எமது தலைமைக் காரியாலத்துக்கு தொலைபேசியிலும், ஈமெயிலிலும் எமது தொண்டுக்கு நன்றி கூறினார்கள்.

எனது உயரதிகாரி எனது முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் அதை ஹோட்டல் செலவில் தொடரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

நான் எடுத்த முயற்சி ஹோட்டலுக்கு மேலும்  வியாபாரத்தைக் கொண்டுவரும் என்று அவர் நினைக்கிறாரே தவிர வாழ்கையில் தவறிப் போனவர்களுக்கு ஒரு வழி காட்டும் அந்த உன்னத சேவையைப் பற்றி அவர் நினைக்கவேயில்லை.

2005 இல் ஆரம்பிக்கப்பட்ட அந்த முயற்சி இன்னும் தொடர்கிறது .........

பி.கு: இது உண்மையில் நடந்ததை வைத்து எழுதிய சிறு கதை.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.