(Reading time: 7 - 14 minutes)

விடப் போவதில்லை அவளை. எத்தனையோ முறை அவளை தொடர்புகொள்ள முயன்றேன், முடியவில்லை. விசாரித்து பார்த்ததில் ,ஏதோ அமெரிக்கா மாப்பிளையாம்.திருமணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதாவும் கேள்வி. ஓ...வசதியான மாப்பிள்ளையை பார்த்தவுடன் என்னை கழற்றி விட பார்க்கிறாளா.?,விட்டு விடுவேனா ! அவளை.என்னுள் இருந்த மிருகம் மெதுவாக அதன் கொடுர உணர்ச்சியின் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தது என்னையும் அறியாமல்.என்னுடைய குரூர புத்தி கடைசியாக முடிவு செய்தது அவளை கொலை செய்து விடுவது என்று. இன்று இரவு எப்படியும் அவள் கதையை முடித்து விடுவது என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். 

இன்றிலிருந்து ஒரு வாரத்தில் அவளுடைய திருமணம் ஏற்பாடாகியிருந்தது.எங்களுடைய விசயம் அவர்களது குடும்பத்திற்குத் தெரிந்த காரணத்தால் ஒரு ரகசியமாண இடத்தில் மிக நெருங்கிய சொந்தங்களை மட்டும் வைத்து செய்துவிடுவதாக தீர்மாணிக்கப்பட்டிருந்தது. என்னுடைய மூளை அவளை முடித்துவிட திட்டம் போட ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக அவளது வீட்டை நோட்டமிட ஆரம்பித்தேன். 

இரண்டு அடுக்கு மாடி கொண்டது அவள் வீடு. எப்படி உள்ளே நுழைவது? என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, பால்கனியின் கதுவுகளை பெரும்பாலும் திறந்தே விட்டுருப்பதை அறிந்தேன்.என் மூளை சுறுசுறுப்படைந்தது. என்னையா ஏமாற்றுகிறாய் நீ! தொலைந்தாயடி.. என்று மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டேன். 

விடுவேனா அவளை ,இன்று இரவு எப்படியும் தீர்த்துவிட வேண்டும் .. சரியாக பத்து மணி ,என் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டேன். கூரிய கத்தி என் இடுப்பில் மறைந்து இருந்தது. அவள் வீட்டை அடையும்போது சரியாக பத்து மணி நாற்பது நிமிடம். அவளது வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த்து. பதினோரு மணிவரை காத்திருந்தேன். இதுதான் சரியான தருணம் என்று மெதுவாக காம்பவுண்டின் பின்பக்கம் ஏறிக் குதித்தேன். மாடி செல்லும் படியின் வழியாக மொட்டை மாடியை அடைந்தேன். மொட்டை மாடியிலிருந்து மெதுவாக லிண்டலில் கால் வைத்து பால்கனியில் இறங்கினேன். பால்கனி வழியாக வீட்டிற்குள் செல்லும் கதவை மெதுவாக தள்ளினேன். கதவு திறந்து கொண்டது. 

ஒரு வழியாக அவள் இருக்கும் அறையை அடைந்தேன். நன்றாக கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருந்தாள். என்னை அனாதையாக விட்டு விட்டு உனக்கு தூக்கம் ஒரு கேடா?. என் இடுப்பில் இருக்கும் கத்தியை உருவினேன். அவள் பக்கத்தில் கிடந்த ஒரு தலையணையை மெதுவாக எடுத்து அவள் முகத்தை பலம் கொண்ட மட்டும் அழுத்தி கொண்டு மார்பில் பல முறை குத்தினேன், என் வெறி அடங்கும் வரை.. எந்த வித எதிர்ப்பையும் காட்டியதாக தெரியவில்லை. ஒருவேளை, தலையனையால் பலமாக அழுத்தியதால் மூர்ச்சையாகி இருப்பாளோ! எப்படியோ தொலைந்தாள் சண்டாளி என்று யோசித்தவாறே புறப்படத் தயாரானபோது மடிக்கப்பட்டு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த அந்த காகிதம் மங்கிய இரவு விளக்கு வெளிச்சத்தில் என் கண்ணில்பட்டது. முதலில் அதைப்பற்றி கவலைப் படாதவனாக புறப்பட தயாரான என்னை ஏதோ ஒன்று அதை எடுக்க தூண்டியது. நடுங்கிய கைகளுடன்,மெதுவாக எடுத்து பிரித்துப் பார்த்தேன். 

அன்புள்ள அம்மா, என்னுடைய செந்திலுடனான காதல் உங்களுக்கு பிடிக்கவில்லை. எனக்கும் பிடிக்காத ஒரு திருமணத்தை செய்துகொண்டு வாழ விருப்பமில்லை. எனவே என் முடிவை நானே தேடிக்கொள்கிறேன். எனது சாவிற்க்கு யாரும் காரணம் இல்லை.நான் உயிருக்கு உயிராக விரும்பும் செந்திலை என் அடுத்த பிறவியிலாவது கரம் பிடிப்பேன் என்று நம்புகிறேன். அவரைப் பார்த்தால் எனக்காக வருத்தபட வேண்டாம் என்று சொல்லுங்கள். அவரை  ஒரு திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழச் சொல்லுங்கள், இப்படிக்கு அனுராதா என்று முத்து முத்தான கையெழுத்துடன் அந்த கடிதம் நிறைவுபெற்றிருந்தது. 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.