(Reading time: 5 - 9 minutes)

ராகவன் அஸ்வினை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு செல்ல அதற்கு முன்பே பத்மினி பூஜையை ஆரம்பித்திருந்தாள். மூவரும் அவரவர் வேலையில் மூம்முரமாக இருந்தனர். பாலா மெல்ல தரகரிடம் சென்று “வணக்கம் .. நான் பாலா அஸ்வினோட வேலைப் பாக்குறேன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“வணக்கம் ... தம்பிக்கு கல்யாணம் ஆச்சா?” அவர்தன் வேலையில் குறியாக கேட்டார்

“இப்ப வேண்டாம் ... எனக்கு ஒரு சந்தேகம்” என மெல்ல கொக்கியை போட்டான்

“கேளுங்கோ ...”

“வைஜயந்தி வைஜயந்தினு சொன்னேளே அது யாரு பொண்ணோட அக்காவா இல்ல அழகான தங்கச்சியா?” கேள்வி வெளிவந்ததும்  அப்பாடா என இருந்தது அவன் மனதுக்கு எனினும் பதில் கேட்க ஆர்வம் பலமடங்காக இருந்தது.

தரகருக்கு “அபிஷ்டு அபிஷ்டு அபிஷ்டு” என சொல்லி சொல்லி அவன் தலையில் நங்கு நங்குவென குட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் செய்யவில்லை மாப்பிள்ளை நண்பன் ஆச்சே ... கமிஷன் வராமல் போய்விடுமே என்ற கவலைதான்.

“வைஜயந்தினாலே ஐபீஎஸ் தெரியாதா உனக்கு” என மேலும் குழப்பினார். கொஞ்சம் பாலாவை குழப்பியதில் அவருக்கு திருப்தி.

பாலா அவரை குழப்பத்துடன் பாவமாக பார்க்க. தரகர் வெற்றி புன்னகையை உதிர்த்தார் “வைஜயந்தி ஒரு ரேகை இதைதான் குருபலம்னு சொல்லுவா அதாவது கல்யாண களை ... வைஜயந்தி ரேகை பட்டா பையன் குரங்கு மாதிரி இருந்தாலும் பொண்ணு கண்ணுக்கு மன்மதான போல தெரிவான் .... பொண்ணு காக்கா மாதிரி இருந்தாலும் பையன் கண்ணுக்கு கிளி மாதிரி அழகா இருப்பாள்.”

“பூசணிக்கா முருங்கா  மாதிரி இருக்கும் ஜோடி,  நட்ட குட்டையா இருக்கும் ஜோடியெல்லாம்   அமைறது இந்த வைஜயந்தி ரேகையினாலதான்”

“ஓஹோ ... எங்க ஆபீஸ்லகூட ஒரு அழகான பொண்ணு கரடி மாதிரி இருக்குற பையன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிடா இதுனாலதானா ? ... சரி .... அப்ப இந்த ஐபீஎஸ்?” பாலாவின் அடுத்த கேள்வி

“இதற்கு பிறகு சந்தோஷம்தான் .. Itharku piraku santhoshamthaan பொண்ணுக்கும் பையனுக்கும் .. புரியுதா?”  என புருவங்களை ஏற்றி இறக்கி கண்களினாலேயே கேட்டார்.

அதற்குள் அஸ்வினும் அவன் பெற்றோரும் அங்கு வர “அஸ்வினுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு .. ” என்றாள் பத்மினி சந்தோஷத்தில்.

அசடுவழிந்த வண்ணம் அஸ்வின் “பொண்ணு கிளி மாதிரி இருக்கு” என்றான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.