(Reading time: 7 - 13 minutes)

காலையில் தன்னுடைய வயலுக்கு சென்றுப் பார்த்தவர் தனது வயல் முழுவது நீர் பாய்ந்து இருப்பதை பார்த்து மேலும் வியந்து, சாமியாரின் பெருமையை இன்னும் பரப்பினார். அக்கம் பக்கத்து ஊரிலும் அவருடைய புகழ் பரவியது. கிருஷ்ணா அன்றிரவே அந்த ஊரை விட்டு சென்று விட திட்டமிட்டார். அப்போது தான் ஒரு நபர் அவர் முன் வந்து நின்றார்.

 "சாமி , நீங்க தான் எனக்கு உதவணும் என்னோட கழுதையை நேற்றிலிருந்து காணோம், நீங்கதான் கண்டுபிடிச்சு தரணும்." என்றார்.

 இதென்னடா வம்பா போச்சு, நம்மள யாரும் வீட்டுக்கு போக விட மாட்டாங்க போல இருக்கு? என்று நினைத்துக் கொண்ட கிருஷ்ணா, 

"நீ கவலைப் படாதே மகனே, இன்றிரவே உன் கழுதை திரும்ப வந்து விடும்". என்றுக் கூறினார்.

 "சரிங்க: என்றுச் சொல்லி அவரும் விடைப் பெற்றார்.

 அன்றிரவும் அவருக்கு தூங்கா இரவாகி விட்டது, ஊரெங்கும் தேடிக் கண்டு பிடித்து அந்தக் கழுதையை அவர் வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டு அதே திண்ணையில் வந்து தூங்கி விட்டார். காலையில் கழுதையை தன்னுடைய வீட்டு வாயிலில் பார்த்த அந்த நபர் சாமியாருக்கு வெகுமதிகள் கொண்டு வந்ததோடு , அவர் புகழை மேலும் பரப்பினார்.

 அப்போது அந்த ஊர் பக்கமாக நகர்வலம் வந்த மன்னருக்கு இந்த செய்தி தெரிய வந்தது. அவர் அந்த புதிய சாமியாரை சோதித்து அரிய எண்ணியவராக கிருஷ்ணாவிடம் வந்தார்.

 " நீதான் புதிதாக இந்த ஊருக்கு வந்திருக்கும் சாமியாரா?"

 எனக் கேட்ட மன்னரைப் பார்த்த கிருஷ்ணாவுக்கு தலைக் கிறுகிறுக்க ஆரம்பித்தது. ஐயோ நான் இனி என்னச் செய்வேன்? மாட்டிக் கொண்டேனே? என்று பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தார்.

 சரி, நான் கேட்பதற்கு பதில் சொல் நீ உண்மையான முக்காலமும் அறிந்த ஞானியென்றால் என்னுடைய மூடிய உள்ளங்கைக்குள் இருப்பது என்னவென்றுச் சொல்? இதற்கு நீ சரியான பதில் சொல்லாவிட்டால் உன்னைச் சிரசேதம் செய்ய நான் உத்தரவிடுவேன். என்றுக் கடுமையாக கூறினார்.

 கிருஷ்ணாவிற்கு உடலெல்லாம் வியர்த்து விட்டது, கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தன்னுடைய வீட்டினரை இனி தாம் பார்க்கப் போவதில்லை என்றுத் தோன்றி கிலியை ஏற்படுத்தி விட்டது. பயத்தில் தனக்குள்ளாக பேசுவது போல உளற ஆரம்பித்தவர் பின்வாறுக் கூறத்தொடங்கினார்.

 "எண்ணிச் சுட்டது பணியாரம்",

 "இரைச்சு ஊத்தினது தண்ணி",

 "பத்தி விட்டது கழுதை",

 இப்போ நான் மஹாராஜா கையில விட்டில் பூச்சியைப் போல மாட்டிக்கிட்டேனே?

என்றதும் மஹாராஜா மிகவே வியந்துப் போனார். 

 " என்னது நீ என்னச் சொன்னாய்? விட்டில் பூச்சியா? என் கையில் விட்டில் பூச்சி இருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது? நீ உண்மையான சாமியார்தான் என வெகுவாக பாராட்டி அவரும் பரிசுகள் அளித்துச் சென்றார்.

 ஒருமுறை உயிர் தப்பித்ததே பெரிய விஷயம். இன்னொரு முறை இந்த விஷப் பரிட்சையில் இறங்க முடியாது என்று எண்ணியவாறு அன்றிரவே தமக்கு கிடைத்த அத்தனைப் பரிசுகளையும் சுருட்டிக் கொண்டு தன்னுடைய ஊருக்கு சென்றார். அவருடைய வீட்டில் ஏற்கெனவே அவரைத் தேடிக் கொண்டிருந்த அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரைப் பார்த்து மகிழ்ந்தனர்.

 அவருக்கு ராஜா மற்றும், பக்கத்து ஊர் மக்கள் கொடுத்திருந்த பரிசுகள் உணவு வகைகள் பார்த்து வறுமை சற்று தீர்ந்தது குறித்து திருப்திக் கொண்டனர். அவருக்கு ஒரு சில நாட்களில் வேலைக் கிடைக்கவே அவர்களுடைய வாழ்க்கை முன்பைப் போல மகிழ்ச்சியாக மாறியது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.