(Reading time: 8 - 16 minutes)

பெய்யென பெய்யும் முகிலன் மதி

பொழியும் கணினி நிரல்கள் - கிடைத்திடவே

போட்டியிடும்  நிறுவனங்கள் பலவே (12)

 

திறமைக்கு ஏற்றத் தளம்

தகுதிக்கு உரிய  அங்கீகாரம்  

திரும்ப விரும்பவில்லை அவன் தாயகம் (13)

 

பிள்ளை முகம் காண ஏங்கும்

பெற்றோர் வருகை முகிலனுக்கும் பிடித்தம் (14)

 

ஆடிப்பெருக்கு இன்று

ஆலயம் செல்ல மறுப்பு ஒன்று

அன்னையிடம் சொல்லாதே (15)

 

தாய் சொல் தட்டாத தனயன்

தயாராகி வருகிறேன்

தருவேன் அரை நாள் மட்டுமே(16)

 

சன்னதியில் கரம் கூப்பி தொழுகையில்

சங்கீத ஸ்வரமொன்று காற்றில் தவழ்கையில்

சிந்தை மயங்கி நின்றான் நங்கை தேன்குரலில் (17)

 

இரு விழி என்ன வைரங்களோ

இமைக்குள் பூட்டி வைத்தனள்

இதழ் வழி வந்த தெய்வீக ராகமோ

இதயம் பல கவர்ந்தனள் (18)

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

ஆனால் அவளை விட வேறெவரும் 

அவனுக்கு இனி பெரிதில்லை(19)

 

அதிர்ந்தான் தன் எண்ணம் உணர்ந்து

அதிர்ந்தாள் அவனினும் அதிகமாய்

அவள் தன் இமை பிரித்த பொழுது(20)

 

நொடிப்பொழுதில் என் விழி வழியில் 

நெஞ்சம் நுழைந்து இதயம் கவர்ந்து

நகர்ந்து போகிறானே(21)

 

பூமிஜா

பூவுலகை நேசிக்கும் பூவை

புல்லிடமும் காட்டிடுவாள் கருணை (22)

 

பாஸ்டன் தற்காலிக முகவரி 

பிஞ்சு மழலை செல்வங்கள்

பிணி தீர்க்கும் சஞ்சீவினி (23)

 

அமைதியான அழகும் ஆழமான அறிவும்

அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரமாய்

அன்பும் அரவணைப்பும் (24)

 

தொட்டாலே  நோய் தீர்ந்திடும்  பூமிஜாவின்  

திறமையான அணுகுமுறைகள்

தேடி வந்தன  உயர் மருத்துவப் பதவிகள் (25)

 

திறமைக்குத் தேவையிருக்கும்  இடம் 

தகுதிக்குச் சேவையே சன்மானம்

தாயகம் திரும்புவதே நியாயமும் (26)

 

பயிற்சியில் சிறப்பாய் தேர்வு

பெற்றோருடன் சில நாள் சுற்றுலா மகிழ்வு (27)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.