(Reading time: 8 - 16 minutes)

காதல் சாகரத்தில்

கரை தொடும் அலையாய்- மீண்டும்

கடல் திரும்பும்  நிலையாய் (41)

 

காலக் கடிகாரம்

கடமை மணியடிக்க  

காதல் கட்டவிழ

கண்ணாமூச்சி ஆரம்பம் (42)

 

நேசத்தில் இணைந்த நெஞ்சம்

சிந்தையிலோ  எதிர்திசைப் பயணம்(43)

 

திரவியம் தேடி ஓடவோ

தேவைகள் ஏதும் இல்லை

அவன் சுயமாய் ஈட்டிய பொருளே

அள்ளிக் கொடுத்தாலும் குறைவில்லை(44)

 

சவால்களும்

அதை முறியடிக்கும்

சாதனைகளும் (45)

 

வேகமும்

அதன் முடிவில்

வெற்றியின் சுவையும் (46)

 

அறிவுக்கு ஏற்ற தீனி

என் இடம் இங்கே நிரந்திரம் இனி(47)

 

சீராய் ஓடும்  பழுதில்லா இயந்திரம் போல்

கச்சிதமாய் இயங்கும் அயல்நாட்டு நகரம் 

சிக்கலில்லா வாழ்க்கைத் தரம்

சிறப்பு தான் என்ற போதும்(48)

 

என் வேராகுமா

சொர்க்கமே என்றாலும்

தாய்மடிக்கு இணையாகுமா(49)

 

விரும்பிப்  படித்த மருத்துவம்

விழலுக்கு இறைத்த நீராவதோ

அங்கே ஏழைக் குழந்தைகள் பிணியிற் வாடிட

ஆனந்தமாய்  நான் மட்டும் வாழ்வதோ(50)

பொய் என்று சொல்லிவிடு

பரிகாசம் செய்கிறாய் என எனை நம்பவிடு (51)

 

போகிறேன் தாயகம் என்றவள் சொல்ல

பிரிவாற்றாமை அவன் கண் மறைக்க

கோபம் அவன்  நாவில் அடைக்கலம்

காரம் தோய்த்த கடுஞ்சொற் பாணம்(52)

 

போய் விட்டாள்

எனைப் பிரிந்து போயே விட்டாள்

போகாதே என்று தடுத்திருந்தால்(53)

 

தடுக்கவில்லை அவனும்

தடுத்திருந்தால் மீறி வந்திருக்க 

துணிவில்லை எனக்கும்(54)

 

கரம் பிடித்தவனே என்

கனவுக்கும் பொறுப்பானவன்

இருவர் பெற்றோர் ஆதரவில்

இலவச மருத்துவமனை அவன் பெயரில் (55)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.