(Reading time: 8 - 16 minutes)

சி ஆண்டுகளுக்குப் பின்

 

இளம் வல்லுநர்களின் கனவு இலக்கு

இந்தியாவின் "பூமிஜா டெக் பார்க்"

கணினி உலகின் அற்புத விளக்கு (70)

 

"முகிலன் சைல்டு கேர்"

உலகத் தரத்தில் இலவச மருத்துவம்

பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்து

பாரதம் முழுதும் படர்ந்த பிணையம் (71)

 

இலக்கில்லாமல் வானில் அலைந்தவனை

காதல் உருக்கியது மழையாய்

அவளுள் சங்கமித்து வேராய் துளிர்த்தவனை   

அடையாளம் காட்டியது "கற்பகத்தரு"வாய் (72)

 

முகிலன் பூமிஜா

வானும் மண்ணும் தான்

எதிரும் புதிரும் தான் (73)

 

இருந்தாலென்ன

"காதலிருக்க பயமேன்"(74)

 

இரண்டு வருடங்களுக்கு முன் இதே விநாயகர் சதுர்த்தி நாளிலே என் முதல் கவிதை சிறுகதை சில்சீயில் வெளியானது... சில்சீயும் தோழமைகளும் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் எனது கற்பனை வேரில் உரமாக, தொடர்ந்து ஆறு கவிதை சிறுகதைப் பூக்களுடன் பூத்துக் குலுங்கிய கவிக்கொடி சொந்த வாழ்வின் வறண்ட நிகழ்வுகளால் வாடிய வேளை, கருகி விடாமல் நம்பிக்கை நீருற்றி கொழுக்கொம்பாய் பலமளித்து கண்ணிமை போல் காத்து நின்ற அன்பு நெஞ்சங்கள் கீர்த்து,ப்ரி,சுஜி,மலர்,மீனு,புவி,ஷக்தி மற்றும் விடாமல் உற்சாக மழைத்துளிகளைத் தெளித்து துளிர்க்க செய்த தோழி வத்சு இவர்களாலேயே இன்று மீண்டும் என் கற்பனை உயிர் பெற்று முகை விரித்து ஏழாம் கவி சிறுகதைப்பூ மலர்ந்திருக்கிறது... 

நீண்ட காலம் பிறகு சில்சீ வந்த நான் பல அற்புத திறமையின் வெளிப்பாடுகள் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தேன்.. நானும் சில்சீன் ஒரு (அறி)முகம் என்பதில் பெருமிதம்...

இன்றைய நாள் என் எழுத்து பயணத்தின் புதியதொரு தொடக்கமாகவே கருதுகிறேன்... சில்சீ அட்மின் மற்றும் தோழமைகள் அனைவரும் எப்போதும் போல் எனக்கு ஆதரவு தருவீர் என நம்புகிறேன்.. உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும் தொடர்ந்து எழுதும் அருளினை முழு முதற்கடவுள் என் முதல் தோழன்  விநாயகன் (வின்னு) தர வேண்டும் எல்லோரும் ஞானம் வளம் நலம் பெற்று மகிழ்வுற வேண்டும் என வேண்டுகிறேன்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.