(Reading time: 8 - 16 minutes)

த்தை மகன் விருந்தாட அழைக்க

அன்னை தந்தையுடன் வந்து சேர

ஆடிப்பெருக்கில் கோயில்  செல்ல வேண்ட (28)

 

அம்மன் சன்னதியில் இயல்பாய்

அபிராமி அந்தாதி இசைத்தாள்

அவள் மன்னவன் தரிசன வரம் பெற்றாள் (29)

 

முகிலன் எங்கள் மைந்தன்

மென்பொருள் நிபுணன் - எமது

 

கண்மணி பூமிஜா

குழந்தை நல மருத்துவர் (30)

 

கடந்த கால நட்பு

காலம் செல்ல விட்டுப் போனது தொடர்பு

கைகோர்த்து விளையாடினீர் சிறுவயதில்(31)

 

பின்னொரு நாளில் கைத்தலம்

பற்றவே அன்றே அச்சாரம்

போட்டிருப்பான் கள்ளன் (32)

 

புரிந்து கொண்டானோ அவள் மன எண்ணம்

புன்னகைத்தான் மந்தகாசமாய் 

பூமிஜா  மட்டும் அறியும் வண்ணம் (33)

 

இருவரையும்  திருமண பந்தத்தில்

இணைக்க பெற்றோர் நிச்சயிக்க

இன்பமாய் சிறகடித்தனர் காதல் வானில்(34)

 

மாங்கல்யம் தந்துனானே

மந்திரங்கள் ஒலிக்க உற்றோர் வாழ்த்த

அவளுக்கு அவனும் அவனுக்கு அவளுமாய்

ஆயுள் முடிந்த போதும் ஈரேழு பிறவி பந்தமாய் (35)

 

என் அழகான ராட்சசியே

கடவுசொல்லைக்  கூறடி

என்னுயிரின் ஒவ்வொரு அணுவையும்

காதல் பூட்டிட்டு வதைப்பதேனடி(36)

 

கணினி மேதை அவர்களே

குறிநீக்கம் செய்வது தானே

கொஞ்சலாய் அவள் பரிகசிக்க

காதலாய் அவனும் அவளை ரசிக்க (37)

 

பூமிஜா

பூமியின் மகள் சீதையாவாள்

பெயர்விளக்கம்  சொன்னாள் (38)

 

முகில் வண்ணன் கண்ணன் தானே - அவள்

முறைத்திட சீண்டி வம்பிழுத்தான்

மன்னன் என்னவன் இச்சீதையின் ராமன்

மார்பினில் என்னை என்றும் தாங்கி நிற்பவன் (39)

 

பிரிந்தான் சீதையை ராமன்

பிரிவு மரணத்திலும் நெருங்க விடான்

பூமிஜாவின் கணவன் (40)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.